தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : வேண்டாம்! இதையெல்லாம் செய்யாதீங்க! உங்கள குழந்தையின் மூளையை பாதிக்கும்!

Parenting Tips : வேண்டாம்! இதையெல்லாம் செய்யாதீங்க! உங்கள குழந்தையின் மூளையை பாதிக்கும்!

Priyadarshini R HT Tamil
Apr 23, 2024 07:00 AM IST

Parenting Tips : உங்கள் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

Parenting Tips : வேண்டாம்! இதையெல்லாம் செய்யாதீங்க! உங்கள குழந்தையின் மூளையை பாதிக்கும்!
Parenting Tips : வேண்டாம்! இதையெல்லாம் செய்யாதீங்க! உங்கள குழந்தையின் மூளையை பாதிக்கும்!

ட்ரெண்டிங் செய்திகள்

நீங்கள் சில விஷயங்களை செய்வதன் மூலம் உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கும், அவர்களின் நலனுக்கும் உங்கள் குழந்தையின் மூளை ஆரோக்கியத்துக்கும் உதவமுடியும்.

இருட்டில் திரையை பார்ப்பது

நீண்ட நேரம் இருளில் திரையை பார்ப்பது உங்கள் உடலின் உறக்க சுழற்சியை பாதிக்கும். உங்கள் மனநிலையை பாதிக்கும். உங்கள் நினைவாற்றலை குறைக்கும். ஒட்டுமொத்த மூளை இயக்கத்தையே அது பாதிக்கும். 

எனவே போதிய இயற்கை வெளிச்சம் எடுப்பதுதான் உடலுக்கு நல்லது. அது உங்களின் உறக்க-விழிப்பு சுழற்சியை முறைப்படுத்தும். உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை காக்கும்.

அதிக எதிர்மறை செய்திகளை கேட்பது

அதிக எதிர்மறை செய்திகளை கேட்பது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மூளையில் அது பதற்றத்தை, மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அறிவாற்றலை பாதிக்கும். 

எனவே அவர்கள் பார்க்கும் ஊடக செய்திகள் மற்றும் அவர்களுககு தெரியவரும் ஊடக விஷயங்கள் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே தேவையற்ற செய்திகளை அவர்களுக்கு குறைப்பது அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

முழு சத்தத்தில் ஹெட்ஃபோன் கேட்கக்கூடாது

இசையோ அல்லது வேறு ஆடியோக்களோ, அதிக சத்தத்தில் ஹெட்ஃபோனில் வைத்து கேட்கும்போது, உங்கள் உள்புற காதுகளில் அது சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் காது கேளாமை அல்லது கேட்பதில் சிரமம் ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. 

எனவே ஹெட்ஃபோன்களை பயன்படுத்தும்போது, பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அதிக சத்தத்தை கேட்பதையும் குறைக்க வேண்டும். இது குழந்தையின் காது ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், மூளையின் இயக்கத்தையும் காக்கவேண்டும்.

சமூக தனிமை

சமூகத்துடனான தொடர்பு குறைவது, மற்றும் அவர்கள் தனிமையாக உணர்வது மூளை வளர்ச்சியில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. இதனால், தனிமை, மனஅழுத்தம் மற்றும் அறிவாற்றல் குறைபாடு ஆகியவை ஏற்படும். 

எனவே அவர்கள் அர்த்தமுள்ள சமூக தொடர்புகளை மேற்கொள்வதற்கும், நேர்மறையான உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கும் உதவுங்கள். அது அவர்களின் மூளை வளர்ச்சிக்கும், குழந்தையின் உணர்வு ரீதியான நலனுக்கும் உதவுகிறது.

அதிக திரை நேரம்

அதிக திரை நேரம், குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்ற மின் சாதனங்களை அதிகம் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. இது அவர்களின் மூளை வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கும். 

குழந்தைகளின் கவனம் சிதறும், அறிவாற்றல் குறையும். திரை நேரத்தை குறைப்பதற்காக வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு மாற்று நடவடிக்கைகள் கொடுக்கப்படவேண்டும். இது அவர்களின் மூளை ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனை பாதுகாக்கும்.

அதிக சர்க்கரை சாப்பிடுவது

அதிக சர்க்கரை சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். வீக்கம், இன்சுலீன் எதிர்ப்பு ஆகியவை மூளை ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். எனவே சர்க்கரை குறைவான அளவு மட்டுமே குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது

உடல் ரீதியான நடவடிக்கைகள் குறைந்துவிட்டு, ஒரே இடத்தில் அமர்ந்து ஒரு வேலையை செய்துகொண்டிருப்பது உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். இது அறிவாற்றல் திறனை குறைக்கும். உடல் பருமன் அதிகரிக்கும். 

அது தொடர்பான சுகாதார சீர்கேடுகளும் நடக்கும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியான நடவடிக்கைகளை அதிகம் செய்ய வேண்டும். அது உங்கள் குழந்தையின் மூளை ஆரோக்கியமான முறையில் வளரவும், ஒட்டுமொத்த உடல்நலனையும் காக்கும்.

முறையற்ற உறக்க பழக்கங்கள்

போதிய உறக்கமின்மை, தரமான உறக்கம் இல்லாதது, உங்கள் குழந்தையின் மூளை இயக்கத்தை பாதிக்கும். அது குழந்தையின் அறிவாற்றலை குறைக்கும். அது உங்கள் குழந்தையின் மனநிலை, நடத்தை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே சரியான உறக்க பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நல்ல சுகாதாரமான பழக்கவழக்கங்கள் உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் இயக்கத்தை பாதுகாக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்