Parenting Tips : உங்கள் குழந்தை ஆர்வத்தில் கேள்விகள் கேட்டு துளைக்கிறார்களா? எனில் இதை தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!
Parenting Tips : உங்கள் குழந்தை ஆர்வத்தில் கேள்விகள் கேட்டு துளைக்கிறார்களா? எனில் இதை தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!

ஆர்வத்தை வளர்த்தெடுக்க வேண்டும்
உங்கள் குழந்தைகள் ஆர்வத்தில் கேள்விகள் கேட்டு துளைத்து எடுக்கும் குழந்தைகள் என்றால், அவர்களை வளர்ப்பதற்கு உங்களுக்கு பொறுமை வேண்டும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் கிரியேட்டிவிட்டியை வளர்தெடுக்க வேண்டும். அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும். இதன் மூலம் நீங்கள் குழந்தைகளை நன்முறையில் வளர்த்தெடுக்கலாம்.
பொறுமையாக கவனிக்க வேண்டும்
உங்கள் குழந்தைகள் கேள்விகள் கேட்கும்போது, பொறுமையாக, முழுமையாக கவனிக்க வேண்டும். நீங்கள் பொறுமையாக கவனிப்பதே அவர்களின் ஆர்வத்தை தூண்டும். அவர்களை ஊக்கப்படுத்தும். நீங்கள் அவர்களை மதிக்கிறீர்கள் என்ற உணர்வைத்தரும்.
அவர்களின் ஆர்வத்தை ஊக்குவியுங்கள்
உங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை அவர்கள் தொடர நீங்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு புத்தகங்கள் வாங்குவது, அவர்களை பரிசோதனைகள் செய்ய வைப்பது மற்றும் அவர்களின் ஆர்வத்தையொட்டிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வது என அவர்களின் கற்றலை தூண்டும் விதமாக செயல்பட வைக்க வேண்டும்.
