தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : குழந்தைகளின் மூளை ஷார்ப்பாக வேண்டுமா? அவர்களை அறிவாளிகளாக்கும் வழிகள் இதோ!

Parenting Tips : குழந்தைகளின் மூளை ஷார்ப்பாக வேண்டுமா? அவர்களை அறிவாளிகளாக்கும் வழிகள் இதோ!

Priyadarshini R HT Tamil
May 10, 2024 03:33 PM IST

Parenting Tips : இந்த பரபரப்பான உலகில், குழந்தைகளின் மனஆரோக்கியத்தை வளர்த்தெடுப்பது என்பது அவர்களின் முழு வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம். எதிர்காலத்தில் அவர்கள் சாதனைபுரிவதற்கு அது காரணமாகிறது. இந்த திறன்களை வளர்த்தெடுப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

Parenting Tips : குழந்தைகளின் மூளை ஷார்ப்பாக வேண்டுமா? அவர்களை அறிவாளிகளாக்கும் வழிகள் இதோ!
Parenting Tips : குழந்தைகளின் மூளை ஷார்ப்பாக வேண்டுமா? அவர்களை அறிவாளிகளாக்கும் வழிகள் இதோ!

ட்ரெண்டிங் செய்திகள்

உணர்வுகளை புரிந்துகொள்வது மற்றும் முறைப்படுத்துவது

திறந்த உரையாடலை ஊக்குவிக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு உதவுங்கள். அவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையானவற்றை செய்யுங்கள். தடைகளை கடந்து அவர்கள் ஓட உதவுங்கள்.

ஆழ்ந்த மூச்சுப்பயிற்சிகள் மற்றும் யோகா போன்ற உடற்பயிற்சிகள், மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள் ஆகியவற்றை செய்வதற்கு பழக்குங்கள். இது அவர்களுக்கு சரிவிகிதமான ஆரோக்கியத்தையும், உணர்வு ரீதியாக முன்னேறி வருவதற்கும் உதவுகிறது.

பிரச்னைகளை தீர்க்கும் திறன்

உங்கள் குழந்தைகள் பிரச்னைகளை தீர்க்கும் திறனை வளர்க்க ஊக்குவியுங்கள். கிரிட்டிக்கல் சிந்தனைகளை வளர்த்தெடுப்பதையும், கிரியேட்விட்டியையும் வளர்த்தெடுங்கள்.

அப்போதுதான் அவர்கள் தைரியமாக பிரச்னைகளில் இருந்து மீண்டெழுந்து வருவார்கள். சுயக்கட்டுப்பாடு மற்றும் உறுதியை வளர்த்தெடுங்கள். பிரச்னைகளை கையாளும் திறன்களை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இது அவர்களுக்கு வெற்றிப்பாதையைக் காட்டும். வாழ்வின் பல்வேறு கோணங்களை புரியவைக்கும்.

நேர்மறை சிந்தனைகளை வளர்த்தெடுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக்கும் வழிகள் தெரிந்திருப்பது அவசியம். இது அவர்களுக்கு நேர்மறை சிந்தனைகளை வளர்த்தெடுக்கும்.

அவர்களுக்கு தடைகளை கடந்து அவர்கள் தீர்வுகளை நோக்கி பயணம் செய்வதற்கு அவர்களுக்கு ஊக்குவியுங்கள். இது அவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். வாழ்வின் ஏற்ற இறக்கங்களை, நெகிழ்வுதன்மை மற்றும் உறுதியுடன் அவர்கள் எளிதாகக் கடக்க உதவும்.

குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது

விளையாடுவது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வெளியே அழைத்துச் செல்வது என அவர்களுக்கு வெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொடுங்கள். குடும்ப நண்பர்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து ஒன்றாக பழகி, நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் வாழவேண்டும். அதுவும், குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

உடற்பயிற்சிகள்

உடல் மற்றும் மனம் இரண்டின் உறவை புரிந்துகொண்டு, அங்கீகரித்து, மேலும் உடற்பயிற்சியை ஊக்குவித்து, அவர்களின் மன பலம் மற்றும் திறன்களை அதிகரிக்க உதவவேண்டும். தினசரி உடற்பயிற்சி குழந்தைகளுக்கு, மன உணர்வுகளை கையாள உதவுகிறது.

நினைவாற்றல் அதிகரிக்கவும், பொது உடல் நலனுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குழந்தைகளுக்கு, மனத்தெளிவு, மீண்டு எழும் திறன், வாழ்வின் தடைகளை எதிர்கொள்வது என அனைத்தும் முக்கியம். அவற்றை வழக்கமான உடற்பயிற்சியின் மூலம் அடைய முடியும்.

போட்டிகளில் பங்கேற்பது

உங்கள் குழந்தைகளை போட்டிகளில் பங்கேற்வும், விளையாடுகளில் கலந்துகொள்ளவும் ஊக்கப்படுத்துங்கள். அது அவர்கள் புதிய உச்சத்தை எட்டுவதற்கு உதவும். சவால்களை எதிர்கொள்ளும்போது, அவர்கள் ஓரிடத்தில் ஏற்கும் திறனை அதிகரிக்கும்.

தன்னம்பிக்கை உடையவர்களாக அவர்கள் சாதனைகள் புரிவதற்கும் உதவும். போட்டிகளுக்கு குழந்தைளை தயார்படுத்துவது, வாழ்விர் அவர்களுக்கு முக்கிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது. அவர்கள் துணவுடனும், விடாமுயற்சியுடனும், தொடர்ந்தும் ஒரு செயலை செய்வதற்கு அவர்களுக்கு உதவுகிறது.

சுதந்திரம் கொடுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள். அவர்கள் செயல்களை தனியாக செய்ய அனுமதியுங்கள். அவர்களை தவறுகளில் இருந்து கற்கவும், பொறுப்புள்ளவர்களாகவும் வளர்த்தெடுங்கள்.

நன்றி உணர்வு

அவர்களின் நற்செயல்களுக்காக அவர்களை பாராட்டுவதன் முலம், அவர்களின் பாராட்டுக்கள் மற்றும் நன்றியுடன் இருப்பதை கற்றுக்கொடுங்கள்.

ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக்கொடுங்கள்

உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஒருவரின் அடிப்படை தேவை. அதற்கு ஆரோக்கிய உணவு, போதிய உறக்கம் மற்றும் அடிக்கடி உடற்பயிற்சி என ஆரோக்கிய பழக்கவழக்கங்களை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

தரமான நேரத்தை ஒன்றாக செலவிடுங்கள்

உங்கள் குழந்தைகளுடன் ஆழ்ந்த உரையாடல் கட்டாயம் தேவை மற்றும் உங்கள் குழந்தைகளுடனான உறவை வளர்க்க இது உதவும். அவர்களுக்கு தேவையான உணர்வு ரீதியான ஆதரவையும் கொடுக்க மறக்காதீர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்