Tamil News  /  Lifestyle  /  Parenting Tips Do You Know What It Takes To Make Your Kids Winners

Parenting Tips : உங்கள் குழந்தைகளை வெற்றியாளராக்க எது அவசியம் என்று தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Feb 05, 2024 02:33 PM IST

Parenting Tips : உங்கள் குழந்தைகள் வெற்றியாளராக்க எது அவசியம் என்று தெரியுமா?

Parenting Tips : உங்கள் குழந்தைகள் வெற்றியாளராக்க எது அவசியம் என்று தெரியுமா?
Parenting Tips : உங்கள் குழந்தைகள் வெற்றியாளராக்க எது அவசியம் என்று தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

நன்றாக கவனிக்க வேண்டும்

உங்கள் குழந்தை உங்களுடன் பேசும்போது அதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும். உங்களின் முழுகவனத்தையும் அவர்களுக்கு கொடுங்கள். அவர்களின் கண்களை உற்றுநோக்குங்கள். அவர்களின் சிந்தனைகளை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை அவர்களுக்கு காட்டுங்கள். இது அவர்கள் கடைபிடிக்க ஒரு நேர்மறையான உதாரணமாக இருக்கும்.

தெளிவான எதிர்பார்ப்புகளை உருவாக்குங்கள்

தெளிவான மற்றும் வயதுக்கு ஏற்ற எதிர்பார்ப்புகளை கொடுங்கள். அது அவர்களின் நடத்தைக்கு உதவக்கூடியது. உங்கள் குழந்தைகளிடம் உங்களின் எதிர்பார்ப்புகள் குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவர்களிடம் நீங்கள் தெளிவாக உரையாடும்போதுதான் அவர்களும் உங்களுடன் தெளிவாக உரையாடுவார்கள். பல்வேறு சூழல்களில் நீங்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று அவர்கள் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடப்பார்கள்.

நேர்மறையான சிந்தனைகளை வளர்த்தெடுங்கள்

உங்கள் குழந்தைகள் கவனிக்கும்போது அவர்களை பாராட்டுங்கள். உங்களின் பேச்சை கேட்கும்போது அவர்களை வாழ்த்துங்கள். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்தெடுப்பது என்பது மிகவும் அவசியம். அது அவர்களுக்கு தேவையான நல்ல நடத்தைகளை வளர்த்துக்கொள்ள உதவும். அவர்களையும் தொடர்ந்து கவனிக்க உதவும்.

அதிகாரம் மற்றும் கட்டுபாடு

பொறுப்பான எல்லைகளுக்குள் உங்கள் குழந்தைகளுக்கு தேர்வுகளை வழங்குங்கள். இது அவர்களுக்கு சுதந்திரத்தைக்கொடுக்கும். மேலும் ஒரு கட்டுப்பாடு கொடுக்கும். இது அவர்கள் ஒத்துழைக்க உதவும். எடுத்துக்காட்டாக நீங்கள் அவர்களிடம் உங்களுக்கு சிவப்பு சட்டை வேண்டுமா? அல்லது பச்சை நிற ஆடை அணிய விரும்புகிறீர்களா என்று கேளுங்கள். அவர்கள் விரும்பியதை அவர்களை செய்ய அனுமதியுங்கள். அப்போது அவர்களின் பொறுப்பு அதிகரிக்கும்.

தெளிவான மற்றும் எளிய மொழிகளை பயன்படுத்துங்கள்

உங்கள் குழந்தைகளிடம் பேசும்போது எளிமையான மற்றும் தெளிவான வார்த்தைகளை மட்டுமே கையாளுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு புரியும். நீண்ட, சிக்கலான, அவர்களுக்கு புரியாத வார்த்தைகளை பேசாதீர்கள். அவர்கள் குழம்பி விடுவார்கள். குறிப்பாக சிறிய குழந்தைகளிம் பேசும்போது அதிக கவனம் தேவை.

அவர்களை திருத்துவதில் குறியாக இருக்காதீர்கள்! முதலில் அவர்களுடன் தொடர்புகொள்ளுங்கள்

அவர்களின் பழக்கவழக்கங்களை நீங்கள் திருத்த விரும்பினால், அவர்களிடம் முதலில் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் உணர்வு ரீதியாக பாதுகாப்பையும், ஆதரவையும் உணரவேண்டும். இந்த தொடர்புதான் அவர்கள் நீங்கள் சொல்வதை கேட்பதையும், உங்கள் வழிகாட்டலுக்கு கீழ்படியவும் கற்றுக்கொடுக்கும்.

நல்ல ரோல்மாடலாக இருந்து, எடுத்துக்காட்டாக வாழுங்கள்

குழந்தைகள் மற்றவர்கள் செய்வதை பார்த்துதான் கற்கிறார்கள். எனவே நீங்கள் மரியாதையான பழக்கங்களை அவர்கள் முன் செய்யுங்கள். மற்றவர்களுடன் பேசும்போது உங்கள் உரையாடலை நன்றாக கவனியுங்கள். உங்கள் குழந்தையும் இந்த நடவடிக்கைகளையே பின்பற்றுவார்கள். எனவே அவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருங்கள்.

அவர்களுக்கென்று ஒரு வழக்கம் மற்றும் அதை தொடர்ந்து செயல்படுத்த பழக்குதல்

குழந்தைகளுக்கு ஒரு பழக்கத்தை தொடர்ந்து பழகுவது கடினமான ஒன்று. அவர்களுக்கென்று ஒரு வழக்கத்தை கடைபிடிக்க மாட்டார்கள். எனவே தினமும் அவர்கள் செய்ய வேண்டியதை நீங்கள் அவர்களுக்கு கட்டாயப்படுத்தலேண்டும். என்ன எதிர்பார்க்கலாம் என்பதை கற்றுக்கொடுத்துவிட்டீர்கள் என்றால், அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அது தரும். குறிப்பாக அவர்கள் உங்களின் கட்டளைகளுக்கு கீழ்படிய கற்றுக்கொடுக்கும்.

அன்பை அடிக்கடி கொடுங்கள்

குழந்தைகள் அன்பு காட்டுபவர்களிடம்தான அதிகம் ஒட்டிக்கொள்வார்கள். எனவே பெற்றோருக்கு எப்போது மற்றும் எப்படி அன்பை கொடுக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அன்பாக நடந்துகொள்வது அன்பை வெளிப்படுத்துவது குழந்தை வளர்ப்பில் மிகவும் முக்கியமானது.

அமைதியாக இருந்து நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

சவாலான நேரங்களில் அமைதியை கடைபிடியுங்கள். எப்போதுமே அமைதிதான் நல்லது. அவர்களிடம் கத்தும்போது, நீங்கள் எரிச்சலுற்று, அவர்களையும் காயப்படுத்துகிறீர்கள். இதனால் அவர்கள் உங்களை கவனிக்க மாட்டார்கள். எனவே அமைதியாக இருந்து பிரச்னையை தீர்க்க முயலுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்