குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வைப்பது எப்படி என்று தெரியுமா?
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான உணவு உட்கொள்ள ஊக்குவியுங்கள்.

உங்கள் குழந்தைகள் சாப்பிட, பருகுவதற்கு மற்றும் உறங்குவதற்கு என அனைத்துக்கும் அவர்களை ஊக்குவிக்கவேண்டும். இது அவர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இப்போது குழந்தைகள் நீண்ட கோடை விடுமுறையில் வீட்டில் இருந்துவிட்டு, பள்ளி செல்ல தயாராகிவிட்டார்கள். அவர்கள் வீட்டில் விடுமுறையில் இருந்த காலத்தில் அவர்களின் அட்டவனைகள் மாறியிருக்கும். அவர்கள் உறங்கும் நேரம், சாப்பிடும் நேரம் என அனைத்திலுமே மாற்றம்தான் இருக்கும். எனவே அந்த மாற்றத்தை திரும்பவும் வழக்கத்துக்கு கொண்டுவரவேண்டும்.
உதாரணமாகுங்கள்
உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான உணவை உட்கொள்ள செய்வதில் ஒரு முக்கிய வழி என்றால், அவர்களுக்கு உதாரணமாவதுதான். குழந்தைப்பருவம் முதல், குழந்தைகள் பெற்றோரை அப்படியே பின்பற்றுகிறார்கள். எனவே குழந்தைகள் நற்பழக்கத்தை கடைபிடிக்கவேண்டுமெனில், பெற்றோர் முதலில் நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
இதனால் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு உணவுகளை நீங்களும் உட்கொண்டு, அதை உங்கள் குழந்தைகளும் சாப்பிட ஊக்கப்படுத்தி, உதாரணமாக வேண்டும்.