Parenting Tips: குழந்தைகளை நாமே குற்றவாளிகள் ஆக்குகிறோமா.. குழந்தைகளிடையே காட்டும் அன்பு.. அக்கறை.. ஆதரவில் பாரபட்சமா!
Parenting Tips: பல சமயங்களில் பெற்றோர்களே அறியாமல் இதுபோன்ற தவறுகள் குழந்தைகளின் வளர்ப்பில் செய்கின்றனர். இதன் காரணமாக உடன்பிறப்புகளுக்கு இடையிலான உறவில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. எனவே இன்று அவற்றைப் பற்றி பார்க்கலாம்

Parenting Tips: ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீடுகளில், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதாக சொல்வதை அடிக்கடி பார்க்கிறோம். சிறுவயதில் சகோதர சகோதரிகளுக்குள் சிறு சிறு சண்டைகள் வருவது சகஜம் தான். ஆனால் பல சமயங்களில், வளர்ந்த பிறகும், சகோதர சகோதரிகளிடையே கருத்து வேறுபாடு தொடர்கிறது. இதன் காரணமாக உறவு படிப்படியாக புளிப்பாக மாறத் தொடங்குகிறது. நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதில் எங்காவது பெற்றோரின் தவறும் இருக்கிறது என்றே சொல்லலாம். பெற்றோர்கள் இதைச் செய்ய விரும்பாவிட்டாலும், பல சமயங்களில் அவர்களே அறியாமல் இதுபோன்ற தவறுகள் குழந்தைகளின் வளர்ப்பில் ஏற்பட்டு விடுகின்றன, இதன் காரணமாக உடன்பிறப்புகளுக்கு இடையிலான உறவில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. எனவே இன்று அவற்றைப் பற்றி பார்க்கலாம்.
ஒருவரை நேசித்து மற்றவரை குற்றம் சொல்வது சரியா
ஒரு சிறு குழந்தை புதிதாக வீட்டிற்கு வந்தால், மூத்த குழந்தையின் மீது செலுத்தி வந்த அனைத்து அக்கறையையும், அன்பையும் அடுத்து வந்த புதிய குழந்தை மீது பொழிவதை அடிக்கடி காணலாம். மறுபுறம், மூத்த குழந்தை அறியாமல் செய்யும் சிறிய தவறுகளுக்கு கூட கவனமாக எடுத்து சொல்லி புரிய வைக்காமல் சட்டென்று திட்டி விடுகிறோம். இது குறித்த புரிதல் எப்போதும் பெற்றோரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. பல சமயங்களில் இதே நடத்தை குழந்தைகள் வளர்ந்த பிறகும் தொடர்கிறது. இது அவர்களின் உணர்வுகள் மற்றும் உறவுகளை ஏதோ ஒரு வகையில் பாதிக்கத் தொடங்குகிறது. அதேசமயம் பெற்றோர்கள் இதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் இருவருக்கும் சமமான அன்பைக் கொடுக்க வேண்டும், ஏதேனும் தவறு நடந்தால், இருவரையும் திட்ட வேண்டும் அல்லது சமமாக விளக்க வேண்டும்.
ஒருவருக்கொருவர் ஒப்பீடு சரியா
ஒவ்வொரு நபரும் வித்தியாசமானவர்கள். ஒவ்வொருவரின் புத்திசாலித்தனம், திறன், இயல்பு, எல்லாமே வித்தியாசமானது. சகோதர சகோதரிகளும் அதுபோல வித்தியாசமான தன்மை உடையவர்கள்தான். ஆனால் பல சமயங்களில் பெற்றோர்கள், தங்களது தவறான அணுகுமுறை மூலம், தங்கள் குழந்தைகளிடையே போட்டி உணர்வை உருவாக்குகிறார்கள், அது சரியல்ல. ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையுடன் ஒப்பிடவே கூடாது. இதைச் செய்வதன் மூலம், சொந்த உடன்பிறப்புகளுக்குள் பாசப்பிணைப்பு என்பது மாறுபடுகிறது. இது பின்னர் அவர்களின் உறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.