Parenting Tips : பள்ளிக்குழந்தைகளுக்கு பணத்தை சேமிக்க கற்றுத்தரக் கூடாதா? ஏன்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : பள்ளிக்குழந்தைகளுக்கு பணத்தை சேமிக்க கற்றுத்தரக் கூடாதா? ஏன்?

Parenting Tips : பள்ளிக்குழந்தைகளுக்கு பணத்தை சேமிக்க கற்றுத்தரக் கூடாதா? ஏன்?

Priyadarshini R HT Tamil
Updated Feb 19, 2024 02:45 PM IST

Parenting Tips : பள்ளிக்குழந்தைகளுக்கு பொருளாதார அறிவு வேண்டுமா? எதற்கு?

Parenting Tips : பள்ளிக்குழந்தைகளுக்கு பொருளாதார அறிவு வேண்டுமா? எதற்கு?
Parenting Tips : பள்ளிக்குழந்தைகளுக்கு பொருளாதார அறிவு வேண்டுமா? எதற்கு?

பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுக்கவேண்டும்

பணம் சம்பாதிப்பது எவ்வளவு பொறுப்பான ஒன்று என்பதை உணர்த்த வேண்டும். பணியிட அறம் என்பதையும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். வீட்டு வேலைகள் அல்லது குழந்தைகளுக்கு பாடங்கள் கற்றுக்கொடுப்பது போன்ற தொழில்முனைவுகள் மூலம் குழந்தைகள் பணம் சம்பாதிக்க முடியும். அதை ஊக்குவிக்க வேண்டும். அது அவர்களுக்கு கடின உழைப்பு மற்றும் முன்னெடுப்புக்களை கற்றுக்கொடுக்கும்.

வீட்டு வேலைகள் செய்து பணம் ஈட்டுவது, குழந்தையை பார்த்துக்கொண்டு பணம் சம்பாதிப்பது, சிறிய தொழில்கள் துவங்குவது என குழந்தைகளுக்கு பல்வேறு வழிகளிலும் பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். பணம் சம்பாதிப்பது, பொறுப்புக்களை நிறைவேற்றுவதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வழிகளை தேடுவது மற்றும் விடாமுயற்சியை ஊக்குவிக்க வேண்டும்.

அவர்களிடம் பணம் சம்பாதிக்கும் பல்வேறு வழிகளை கண்டுபிடித்து அவற்றை பின்பற்ற உற்சாகமளிக்க வேண்டும். அது அக்கம்பக்கத்தினருக்கு ஏதாவது உதவி செய்வது, கைவினைப்பொருட்கள் செய்து விற்பது மற்றும் அருகில் உள்ள வீடுகளுக்கு உதவி செய்து பணம் சம்பாதிப்பது என் அவர்களை செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.

பட்ஜெட் போடுவது

பொருளாதார மேலாண்மையில் பட்ஜெட்தான் முக்கியம். அவர்களுக்கு அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும். எதற்கு எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு கற்றுத்தரவேண்டும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

சிறுவயதிலே அவர்களுக்கு பட்ஜெட்களை விளக்குவதன் மூலம், குழந்தைகளுக்கு பணத்தில் அருமை புரியும். பொறுப்பான பொருளாதார பழக்க வழக்கங்களை அவர்கள் மேற்கொள்வார்கள். மேலும், அவர்களுக்கு பணத்தின் அருமை புரியும்.

அவர்களுக்கு பட்ஜெட் என்றால் என்ன? ஏன் அது முக்கியம் என்பதை உணர்த்த வேண்டும். தேவையகளுக்கும், விருப்பங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். சேமிப்பு, செலவிடுவது, தானம் என பல்வேறு தேவைகளுக்குமான பணத்தை பிரிப்பது குறித்து கற்றுக்கொடுங்கள். பிரித்து செலவிட ஊக்குவியுங்கள்.

பட்ஜெட் போடுவதில், உண்மை வாழ்க்கை உதாரணங்களை அவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள். பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வாங்குவது, வெளியே செல்வது, ஹாபிக்களுக்கு செலவிடுவது என அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

அவர்கள் பெறும் பணத்துக்கு, வாரம், அல்லது மாதம் என ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பட்ஜெட் போட கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு கொடுக்கும் பணம் அல்லது அவர்கள் சம்பாதிக்கும் பணம் என எந்த பணத்திலும் அவர்களுக்கு பங்கிட கற்றுக்கொடுங்கள்.

சேமிப்பு மற்றும் முதலீடு

சேமிப்பின் அவசியத்தை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொங்கள். சிறுவயதிலே முதலீடுகள் செய்வது அவர்களே நிதி முடிவுகளை எடுக்கு வைக்க உதவுகிறது. இதன்மூலம் அவர்கள் நீண்ட கால பொருளாதார இலக்குகளை உருவாக்குவார்கள். இதை புரிந்துகொள்வது அவர்களுக்கு பணத்தின் மதிப்பு புரியும்.

சேமிப்பு மற்றும் முதலீடு இரண்டுக்கும் உள்ள வித்யாசங்களை கற்றுக்கொடுங்கள். சேமிக்கும் வழிகளை அவர்களுக்கு காட்டுங்கள். ஸ்டாக்குள், பாண்டுகள், மியூச்சுவல் ஃபண்ட்கள் என அவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வழிகளை காட்டுங்கள். அவர்களுக்கு இலக்குகள் நிர்ணயித்து தொடர் முதலீடு மற்றும் சேமிப்புகள் குறித்து விளக்குங்கள்.

அவர்களுக்கு குழந்தை முதலே அவர்களின் சேமிப்பில் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பழக்குங்கள். இதில் அவர்கள் அதிகம் சேமிப்பதை பாராட்டுங்கள்.

டெபிட் மற்றும் கிரடிட்

இதுகுறித்து கற்றுக்கொடுக்கும்போது குழந்தை கடன் வாங்கி பணத்தேவைகளை செய்யும்போது பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். அதில் உள்ள ஆபத்துக்கள், நன்மைகள், எதிர்காலத்தில் ஏற்படும் நிதி நெருக்கடிகள் என அனைத்தையும் கற்றுக்கொடுங்கள்.

பல்வேறு சேமிப்பு திட்டங்கள் குறித்து விளக்குங்கள். தேவைக்கு மட்டும் கடன் வாங்குவது, வட்டிகள் குறித்து அவர்களுக்கு விளக்குங்கள். அதிக வட்டிகள் கொடுத்து கடன்கள் ஏன் வாங்கக்கூடாது என்று அவர்களுக்கு புரியவையுங்கள். கிரிடிட் ஸ்கோர்கள் குறித்து விளக்குங்கள்.

கடன் வாங்கி, திரும்ப கொடுப்பது குறித்து விளக்குங்கள். நமக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்குவது மற்றும் நிதிநிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்குவது இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து எடுத்துக்கூறுங்கள்.

தேவைகள் மற்றும் விருப்பங்கள்

அத்யாவசிய தேவைகள் மற்றும் விருப்பங்கள் இரண்டுக்கும் உள்ள வித்யாசங்களை அவர்களுக்கு புரியவையுங்கள். எனவே தேவையற்ற செலவுகளை குறைக்க ஊக்கப்படுத்துங்கள். எனவே குழந்தைகளுக்கு குறைவாகவே பணம் கொடுங்கள். செலவுகளில் கவனம் செலுத்த வலியுறுத்துங்கள்.

எனவே வெறும் சேமிப்பு மட்டுமே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்காமல், பணத்தின் முழு பரிமாணத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.