குழந்தை வளர்ப்பு குறிப்புகள்: பதிலுக்கு பதில் பேசும் குழந்தைகள்? அதற்கு காரணம் இதுதான்! அது என்னவென்று பாருங்கள்!
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : குழந்தைகள் பதிலுக்கு பதில் பேசுகிறார்கள் என்று கவலைகொள்கிறீர்களா? எனில் அதற்கான காரணங்கள் என்னவென்று பாருங்கள்.

இது தவறான நடத்தை
உங்கள் குழந்தைகளிள் உங்களிடம் பதிலுக்குப் பதில் பேசினால், அது உங்களுக்கு கடும் விரக்தியை ஏற்படுத்தும். குழந்தைகள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக் காரணம், அவர்களின் தீர்க்கப்படாத தேவைகளுக்கு பதிலளிக்காமல் இருப்பதுதான். குழந்தைகள் பதிலுக்கு பதில் பேசுவதற்கு காரணம் என்னவென்று பாருங்கள். அது உங்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம்.
அவர்களின் சுதந்திரம் தடைபடும்போது அவர் பதிலுக்கு பதில் பேசுகிறார்கள்
குழந்தைகளுக்கு அவர்கள் வளரவளர சுதந்திரம் தேவை. அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தேர்வுகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள அவர்கள் பதில் கூறலாம். அவர்களின் சிறிய விஷயங்கள் கூட கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று அவர்கள் உணரும்போது குறிப்பாக அவர்களின் தனித்தன்மையை நிலை நாட்டிக்கொள்ள அவர்கள் பதில் கூறுகிறார்கள். அதுதான் எதிர்க்க அவர்களை தூண்டுகிறது.
அவர்களை யாரும் மதிக்காதபோது அவர்கள் பதிலுக்குப் பதில் பேசுகிறார்கள்
குழந்தைகளின் கருத்துக்களை தொடர்ந்து பெற்றோர், தள்ளுபடி செய்யும்போது, அவர்கள் பதிலுக்கு பதில் பேசுகிறார்கள். அவர்களுக்கு மற்றவர்களின் கவனம் தேவைப்படுகிறது. அதற்காக எதிர்த்து பேசுகிறார்கள். அவர்கள் அதற்கு சத்தமிடவேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் அழக்கூட செய்யலாம். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பைத் தேட அவர்கள் என்னவேண்டுமோ செய்கிறார்கள்.
மற்றவர்கள் எதிர்த்து பேசுவதைப் பார்க்கும்போது அவர்கள் பதிலுக்கு பதில் பேசுகிறார்கள்
குழந்தைகள் பெரியவர்களை அப்படியே பின்பற்றுகிறார்கள். அவர்கள் பெரியவர்கள் கத்துவதை, பதிலுக்கு பதில் அல்லது எதிர்த்து பேசுவதை பார்த்தால், இவர்களும் அதைச் செய்கிறார்கள். அது வீட்டில் இருக்கலாம் அல்லது டீவியில் அல்லது வெளியிடங்களில் இருக்கலாம். அவர்கள் அதை அப்படியே அவர்களை அறியாமலேயே நகல் எடுக்கிறார்கள். இது ஏற்றுக்கொண்ட ஒரு உரையாடல் தான் என அவர்கள் எண்ணுகிறார்கள்.
அவர்கள் அதிகப்படியாக உணரும்போதும் எதிர்த்து பேசுகிறார்கள்
சில நேரங்களில் குழந்தைகள், அதிகப்படியாக உணரும்போதும் எதிர்த்து பேசுகிறார்கள். மனஅழுத்தம், பதற்றம் அல்லது சோம்பல் என அவர்களுக்கு இந்த உணர்வுகள் அதிகரிக்கும்போது, அவர்கள் பதிலுக்கு பதில் கொடுக்கும் நடத்தையை மேற்கொள்கிறார்கள். அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை கூற சில நேரங்களில் வார்த்தைகள் இருப்பதில்லை. எனவே அவர்களின் விரக்தி அவர்களிடம் இருந்து கத்துவது அல்லது எதிர்த்து பேசுவதாக வெளிப்படுகிறது.
அவர்கள் பெற்றோருடனான தொடர்பை இழக்கும்போது எதிர்த்து பேசுகிறார்கள்
குழந்தைகளுக்கும், பெற்றோருக்குமான தொடர்பு குறையும்போது, அவர்கள் எதிர்த்து பேசுகிறார்கள். பெற்றோர்கள் தங்களின் கடும் பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களினால், குழந்தைகளிடம் இருந்து உணர்வு ரீதியான பிரிந்திருக்கிறார்கள். இது அவர்களை எதிர்த்து பேசச் செய்கிறது. அவர்கள் மீண்டும் அவர்கள் பெற்றோருடன் தொடர்புகொள்ள எதிர்த்து பேசுகிறார்கள். சண்டைகள் மூலமாவது தங்களின் பெற்றோருடன் அவர்கள் தங்கள் பெற்றோருடன் பேச விரும்புகிறார்கள். இது அவர்கள் என்னைப் பாருங்கள் என்று கூறும் ஒரு வழியாகும்.
அவர்களுக்கு ஒரு எல்லை தேவைப்படும்போது அவர்கள் எதிர்த்து பேசுகிறார்கள்
குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு எல்லை வேண்டும் எனும்போதும் அவர்கள் எதிர்த்து பேசுகிறார்கள். தெளிவான, தொடர் எல்லைகள் உங்கள் குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்ள உதவும். தொடர்ச்சியற்ற ஒழுக்கம், அவர்களை குழப்பும், அவர்களை அடிக்கடி பின்னால் தள்ளும்.
தன்னம்பிக்கை குறையும்போது அவர்கள் எதிர்த்து பேசுகிறார்கள்
குழந்தைகளுக்கு அவர்களின் மதிப்பு அவர்களுக்கே தெரியாதபோது, அவர்கள் பாதுகாப்பற்ற உணர்வை, மறைக்க அவர்கள் எதிர்த்து பேசுகிறார்கள். இது அவர்களின் எதிர்ப்பு நடடிவக்கையாக மாறிவிடும். குறைவாக உணர்வதற்காக அதிகம் பேசுவார்கள். அவர்கள் கூரான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். சக்தியற்றவர்களாக உணர்வதைத் தடுக்க அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள்.
அவர்கள் சில விஷயங்களை கட்டுப்படுத்த நினைக்கும்போது பதிலுக்கு பதில் பேசுகிறார்கள்
அவர்கள் வாழ்க்கையின் மற்ற பகுதிகள் நிலையில்லாமல் இருந்தால், (குறிப்பாக பள்ளி வாழ்க்கை, மற்றவர்கள் தரும் அழுத்தம், பெற்றோர் விவாக ரத்து) அவர்கள் எதிர்த்து பேசுவதை அவர்களின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற எதிர்த்து பேசுகிறார்கள். வெளியில் இருந்து வரும் அழுத்தத்தை கையாள உதவும் ஒன்றாகும்.
வளரும் பருவத்தில் எதிர்த்து பேசுகிறார்கள்
சில வயதுகளில், குறிப்பாக வளரிளம் பருவம் மற்றும் குழந்தைப் பருவத்தின் துவக்கம் ஆகிய நேரங்களில் அவர்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் தேவைப்படும் பருவமாகும். இந்த காலகட்டத்தில், அவர்கள் எதிர்த்து பேசுவது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். அது அவர்களின் எல்லைகளை பரிசோதித்துக் கொள்ளவும், அவர்களுக்கு சில விஷயங்களை கண்டித்து சொல்ல வேண்டியதை கற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
அவர்களை விமர்சிக்கும்போது அவர்கள் எதிர்த்து பேசுகிறார்கள்
ஒரு குழந்தையை நீங்கள் தொடர்ந்து சரிசெய்துகொண்டே இருந்தால், ஒப்பிட்டுக்கொண்டே இருந்தால் அல்லது அவர்களை விமர்சித்துக்கொண்டே இருந்தால், அவர்களின் சுய அடையாளத்தை காப்பாற்ற அவர்களை விமர்சித்துக்கொண்டே இருந்தால், அவர்கள் எதிர்ப்பதற்காக பேசுகிறார்கள். ஆனால், இது தற்காப்புக்காத்தான்.

டாபிக்ஸ்