Parenting Tips : ஜங்க் ஃபுட்களை விரும்பி சாப்பிடும் குழந்தைகள்! அதை தடுப்பது எப்படி? இதோ டிப்ஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : ஜங்க் ஃபுட்களை விரும்பி சாப்பிடும் குழந்தைகள்! அதை தடுப்பது எப்படி? இதோ டிப்ஸ்!

Parenting Tips : ஜங்க் ஃபுட்களை விரும்பி சாப்பிடும் குழந்தைகள்! அதை தடுப்பது எப்படி? இதோ டிப்ஸ்!

Priyadarshini R HT Tamil
Jun 10, 2024 01:40 PM IST

Parenting Tips : ஜங்க் ஃபுட்களை விரும்பி சாப்பிடும் குழந்தைகளை தடுப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Parenting Tips : ஜங்க் ஃபுட்களை விரும்பி சாப்பிடும் குழந்தைகள்! அதை தடுப்பது எப்படி? இதோ டிப்ஸ்!
Parenting Tips : ஜங்க் ஃபுட்களை விரும்பி சாப்பிடும் குழந்தைகள்! அதை தடுப்பது எப்படி? இதோ டிப்ஸ்!

குழந்தைகளும், குப்பை உணவுகளும்

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவில் உடலின் ஆரோக்கியத்தை அழிக்கும் சர்க்கரை, கொழுப்பு மற்றும் உங்களை உணவுக்கு அடிமையாக்கும் உட்பொருட்களும் உள்ளன. அது உங்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். உடல் பருமனை அதிகரிக்கிறது. 

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில்லை. ஆனால் கொஞ்சம் மெனக்கெட்டாலே பெற்றோர், தங்கள் குழந்தைகள் இந்த உணவுகளை உட்கொள்ளாமல் தவிர்க்க முடியும். குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்தி, அவர்களுக்கு நல்வழிகாட்டியாக முடியும்.

இயற்கை இனிப்பு நிறைந்த உணவுகளை அறிமுகப்படுத்தவேண்டும்

குழந்தைகளுக்கு சாக்லேட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கு மாற்றாக அவர்களுக்கு பழசாக்லேட்களை அறிமுகப்படுத்தலாம். இது உங்கள் உடலில் சர்க்கரை அளவை அதிரடியாக அதிகரிக்காது. இதில் கலோரிகளும் குறைவு. இது அவர்களுக்கு இனிப்புச்சுவையை வழங்குவது மட்டுமல்ல, அவர்களின் உணவுப் பழக்கத்துக்கும் உதவும். இதில் நச்சு வாய்ந்த உட்பொருள்கள் கிடையாது.

மைதாவை தவிர்த்து முழு தானியங்களை சாப்பிடுங்கள்

மைதா என்பது பதப்படுத்தப்பட்ட உணவுகளின் முக்கிய உட்பொருள் ஆகும். உங்கள் குழந்தைகள் முழு தானிய உணவுகளை உட்கொள்ள ஊக்குவிக்கவேண்டும். கோதுமை, பிரவுன் அரிசி, ஓட்ஸ், பெரும் வித்யாசத்தை தரும். பிரட் மற்றும் முழு தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்துங்கள்.

ராகி சிப்ஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்றாக உருளைக்கிழங்கு சிப்ஸ் உள்ளது. அது எண்ணெயில் பொரித்து எடுக்கப்பட்டு, ஆரோக்கியமற்ற கொழுப்பு மற்றும் சோடியத்துடன் சேர்த்து, தயாரிக்கப்படும் ஒன்றாகும். 

ராகி சிப்ஸ்கள், ராகியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது மொறுமொறுப்புடனும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. ராகியில் கால்சியம், நார்ச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது வளரும் குழந்தைகளுக்கு சிறந்த ஒன்றாக உள்ளது.

ஃப்ரீசரில் வைத்து ஃப்ரோசன் செய்யப்பட்ட உணவுகள் கூடாது

ஃப்ரசரில் வைத்து பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை பயன்படுத்துவது எளிது, ஆனால், அதை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அதில் அதிக ப்ரிசர்வேட்டிவ்கள் உள்ளன மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளும் உள்ளது. உங்கள் ஃபிரிட்ஜில் ஃபிரஷ்ஷான காய்கறிகள் மற்றும் முழுதானியங்களை வாங்கி சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

ப்ரேக் ஃபாஸ்ட் பருப்பு வகைகள்

ப்ரேக் ஃபாஸ்ட் பருப்பு வகைகளில், குறிப்பாக குழந்தைகளுக்கு என்று குறிப்பிடப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவனவற்றுள், அதிக சர்க்கரை உள்ளது. ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளது. எனவே பாரம்பரிய ப்ரேக் ஃபாஸ்ட்களான அடை, இட்லி, தோசை, அவல், இடியாப்பம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

இது குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தேர்வாகும். குழந்தைகள் சரிவிகித காலை உணவு உட்கொள்ளும்போது, அவர்களால் பள்ளி பாடங்களில் எளிதாக கவனம் செலுத்த முடியும். மேலும் குழந்தைகளின் ஆற்றல் நாள் முழுவதும் சீராக இருக்கும்.

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் இன்ஸ்டன்ட் உணவுகள்

இன்ஸ்டன்ட் நூடுல்ஸை நீங்கள் எளிதாகவும், விரைவாகவும் தயாரிக்க முடியும். இவற்றில் அதிகளவில் சோடியச் சத்துக்களும், ஆரோக்கியமற்ற கொழுப்புக்களும் உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். முழுதானிய பாஸ்தா போன்ற உணவுகளுக்குப்பதில், வீட்டிலே நூடுல்ஸ் தயாரியுங்கள்.

சோடா பானங்களை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்துங்கள்

சோடா மற்றும் இனிப்பு சுவை நிறைந்த பாட்டில் குளிர்பானங்கள் குழுந்தைகளின் உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும் காரணியாகும். அதற்கு பதில் உங்கள் குழந்தைகளை அதிகம் தண்ணீர் எடுத்துக்கொள்ள வலியுறுத்துங்கள். பழச்சாறுகள், கழிவுநீக்க பானங்களை பருக அறிவுறுத்துங்கள்.

ஐஸ்கிரீம்

குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவுகளில் முக்கியமானது ஐஸ்கிரீம். இதில் செயற்கை சுவை, வண்ணம் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளது. அதற்கு பதில் வீட்டில் தயாரித்த ஐஸ்கிரீம்களை சாப்பிட அறிவுறுத்தலாம். இயற்தை பொருட்களை பயன்படுத்தி, வீட்டிலே ஐஸ்கிரீம் தயாரிக்க முடியும். வீட்டில் குழந்தைகளை வைத்தே ஐஸ்கிரீம் தயாரிக்க அறிவுறுத்த வேண்டும். அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை உருவாக்க வேண்டும்

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை பழக்குவதற்கு முதலில் அவர்களை சமையலறைக்கு அழைத்துச்செல்லவேண்டும். அப்போதுதான் அவர்கள், ஆரோக்கிய உணவுப்பழக்கத்துக்கு ஆளாவார்கள். அவர்களை காய்கறிகள் அலசி தரச்செய்யவேண்டும். பொருட்களை கலக்கவும், கிண்டுதல், போன்ற விஷயங்களை அவர்களை செய்ய பழக்கவேண்டும். பிற்காலத்தில் அவர்களுக்கு தேவையான உணவுகளை செய்துகொள்ள உதவும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.