தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : பொய்யுரைக்கும் குழந்தைகள்! கோவப்படுவதா? அல்லது குணமாக நடப்பதா? என்ன செய்யலாம் பெற்றோரே?

Parenting Tips : பொய்யுரைக்கும் குழந்தைகள்! கோவப்படுவதா? அல்லது குணமாக நடப்பதா? என்ன செய்யலாம் பெற்றோரே?

Priyadarshini R HT Tamil
May 24, 2024 01:55 PM IST

Parenting Tips : பொய்யுரைக்கும் குழந்தைகளிடம் கோவப்படுவதா? அல்லது குணமாக நடப்பதா? என்ன செய்வது என தெரிந்துகொள்ளுங்கள் பெற்றோரே.

Parenting Tips : பொய்யுரைக்கும் குழந்தைகள்! கோவப்படுவதா? அல்லது குணமாக நடப்பதா? என்ன செய்யலாம் பெற்றோரே?
Parenting Tips : பொய்யுரைக்கும் குழந்தைகள்! கோவப்படுவதா? அல்லது குணமாக நடப்பதா? என்ன செய்யலாம் பெற்றோரே?

ட்ரெண்டிங் செய்திகள்

பொய்யுரைப்பது வளரும் பருவத்தின் இயற்கையான குணம் ஆகும். மேலும் பல்வேறு காரணங்களுக்காக பொய்யுரைக்கிறார்கள். ஒரு குழந்தை பொய்யுரைப்பதை நாம் எப்படி கண்டுபிடித்து, என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்?

பொய் என்றால் என்ன?

பொய், கலவையான மற்றும் பல்வேறு நடவடிக்கை, பெரியவர்களிடம் மட்டுமல்ல, குழந்தைகளிடமும் இருக்கும் குணம். குழந்தைகள் ஏன் பொய்யுரைக்கிறார்கள். இது மூளை, உணர்வு ரீதியான மற்றும் சமூக வளர்ச்சியுடன் குழந்தைகள் வளரும் பருவத்தில் தொடர்புடையது. பொய்யுரைக்கும் குழந்தைகளை நாம் எவ்வாறு கையாளவேண்டும் என்பதுதான் முதல் படி. 

அவர்கள் ஏன் பொய்யுரைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும். பொய் அவர்களுக்கான கருவி, தண்டனைக்கிடைக்கும் பயத்தை ஏற்படுத்தக்கூடியது. கவனிக்கவேண்டியதன் அவசியம். சங்கடத்தை தடுக்கும். இது குழந்தைகள் வளர்வதன் ஒரு அங்கம்.

வழிகாட்டி

பெற்றோர்களாக, குழந்தைகளின் வளர்ச்சிப்படிகளின் முக்கியத்துவத்தை நாம் கண்காணிக்கவேண்டும். உங்கள் குழந்தைகளிடம் நேர்மையை வளர்த்தெடுக்க நாம் என்ன செய்யவேண்டும்?

எது அவர்களை பொய்யுரைக்கவைக்கிறது என்பதை புரிந்துகொள்தல்

ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைகள் பொய்யுரைப்பதற்கான காரணங்களை தெரிந்துகொள்ளவேண்டும். குழந்தைகளுக்கு பொய் இயற்கையிலே வரும் ஒரு குணம்தான். எனவே அதை நீங்கள் வளரவிடக்கூடாது. அவர்களை பொய்யுரைக்க வைப்பது எது என்று தெரிந்துகொண்டு, அந்த கெட்ட பழக்கத்தை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

திறந்த உரையாடல்

நம்பிக்கை மற்றும் திறந்த உரையாடலுக்கான ஒரு பாதுகாப்பான இடத்தை குழந்தைகளுக்கு ஒதுக்கவேண்டும். எளிதாக புரிந்துகொள்ளக்கூடியவராகவும், எளிதாக அணுகக்கூடிய நபராகவும் என ஒரு திறந்த புத்தகமாக இருக்கவேண்டும். 

உங்கள் குழந்தைகள் அவர்களின் எந்த கருத்துக்களையும் உங்களிடம் கூறலாம். அவர்கள் மீது எந்த விமர்சனமும் வராது என்ற நம்பிக்கை அவர்களுக்கு வரவேண்டும். அதை உறுதி செய்வது உங்களின் கடமை. நேர்மை இயற்கையான குணம் என்ற ஒரு சூழலை உருவாக்கித்தரவேண்டும்.

பொய்யுரைத்தால் அதை அவர்களிடம் அமைதியாக எடுத்துக்கூறவேண்டும்

உங்கள் குழந்தைகள் பொய்யுரைக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதை நீங்கள் அமைதியாக அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கோவத்தில் கொந்தளிக்கக்கூடாது. நீண்ட மூச்சை இழுத்து, 10 வரை எண்ண வேண்டும். உங்கள் பதில் அவர்களின் உணர்வுகளுக்கு வழிகாட்டியாக வேண்டும்.

உங்கள் குழந்தைகளுக்கு கற்பனை மற்றும் கரை கூறுவது என அனைத்துடனும் எப்படி உண்மையாக இருப்பது தொடர்புடையது என்பதை கற்றுக்கொடுங்கள். எனவே நேர்மையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

தெளிவான எதிர்பார்ப்புகள் மற்றும் விதிகள்

உங்களின் எதிர்பார்ப்புகளை தெளிவாக குழந்தைகளிடம் கூறிவிடுங்கள். நேர்மையாக இருக்கவேண்டும் என்பதற்கான விதிகளை அவர்களுக்கு வகுத்துவிடுங்கள். 

உங்கள் குடும்பத்தில் ஏன் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அவர்களுக்கு விளக்குங்கள். அதை அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி, உங்கள் வீட்டில் உண்மையை நிலை நாட்டுவதை உறுதிப்படுத்துங்கள்.

நேர்மையாக இருங்கள்

பெற்றோரை பார்த்துதான் குழந்தைகள் சில விஷயங்களை வளர்த்துக்கொள்கிறார்கள். எனவே உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நேர்மையான உதாரணமாகுங்கள். உங்களின் நேர்மை உங்கள் செயல்கள் மற்றும் உரையாடல்களில் இருக்கவேண்டும். உங்கள் செயல்களே அவர்கள் உண்மையாக நடந்துகொள்வதற்கும், புரிந்துகொள்வதற்குமான அடித்தளமாக இருக்கவேண்டும்.

நேர்மறை எண்ணங்களை பழகுங்கள்

பொய்களில் கவனம்செலுத்துவதைவிடுத்து, நேர்மையை கொண்டாடுங்கள். நேர்மையான எண்ணங்கள் உண்மையின் மதிப்பை அவர்களுக்கு உணர்த்தும். இதனால் குழந்தைகள் தவறு செய்வதைவிட நேர்மையை தேர்ந்தெடுப்பார்கள்.

கற்றுக்கொடுக்கும் நேரங்கள் முக்கியம்

ஒவ்வொரு பொய்யும், உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டிய தருணங்கள்தான். இந்த சந்தர்ப்பங்களை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுகொடுக்கும் தருணங்களாக மாற்றுங்கள். 

தண்டனைக்குரிய தருணங்களாக்காதீர்கள். அவர்களின் செயல்களின் விளைவுகளை அவர்களுக்கு புரியவையுங்கள். இது அவர்களுக்கு பொறுப்பையும், கடமையையும் வளர்க்க உணர்த்தும்.

இவற்றையெல்லாம் கடந்து உங்கள் குழந்தைகள் நன்னடத்தைகளை வளர்த்துக்கொள்வதற்கு உதவவேண்டியது உங்கள் கடமை. எனவே, உங்கள் குழந்தைகளுடன் பேசி, அவர்களிடம் நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் வகையில் நடந்துகொள்ளுங்கள். 

எனவே உங்களின் பெற்றோரிய பயணத்தில், புரிதல், அன்புடன் பதிலளிப்பது, திறந்த உரையாடல் ஆகியவை முக்கிய சாவிகளாகும். எனவே அறிவு, அனுதாபம், வழிகாட்டல் என உங்கள் குழந்தைகளை நேர்மையுடன் நடந்துகொள்ள அறிவுறுத்துங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்