Parenting Tips : அதிகம் திரையில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகள்! அச்சச்சோ ஆபத்தை பாருங்களேன்!
- Parenting Tips : அதிகம் திரையில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகள்! அச்சச்சோ ஆபத்தை பாருங்களேன்!
- Parenting Tips : அதிகம் திரையில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகள்! அச்சச்சோ ஆபத்தை பாருங்களேன்!
(1 / 10)
இந்த தலைமுறை குழந்தைகளிடம் திரை அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிகம் திரை பயன்படுத்தும் குழந்தைகளின் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அது என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
(2 / 10)
இன்றைய டிஜிட்டல் காலத்தில் நாம் அனைவருமே தொழில்நுட்பத்தை அதிகளவில் சார்ந்தே வாழ்கிறோம். மேலும் அது நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அனைத்து வகை ஊடகங்களின் சத்தங்களும் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருமே திரையை பயன்படுத்துகிறார்கள்.
(3 / 10)
அது குழந்தைகளின் வளர்ச்சியில் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறித்து பேசும்போது, குழந்தைகளுக்கு திரைநேரம் என்பது மிகவும் குறைவாக இருக்கவேண்டும். மேலும் குழந்தைகளின் கல்விக்கு அதுதான் நல்லது.
(4 / 10)
திரையை அதிகம் பார்ப்பதால், குழந்தைகளுக்கு உணர்திறன் வளர்ச்சிகள், இயங்குதல் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. இது பள்ளிப்படிப்பை பாதிக்கிறது. அதிக நேரம் திரையை பார்க்கும் குழந்தைகளுக்கு மொழித்திறன் பாதிக்கப்படுகிறது. அவர்கள் எப்போதும் திரையிலே மூழ்கி கிடப்பதால், அவர்கள் மற்றவர்களுடனும், நண்பர்களுடனும் தரமான மற்றும் அதிகளவு நேரம் உரையாட முடியாமல் போகிறது.
(5 / 10)
இதனால் அவர்களின் மொழித்திறன் பாதிக்கப்படுகிறது. பொருத்தமில்லாதவற்றை பார்ப்பதும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மொழித்திறன், சமூக உணர்வுகள் பிரச்னை, உறக்க தொல்லை, பயம், பதற்றம், சில நேரங்களில் மனஅழுத்தம் என அனைத்தையும் பாதிக்கும்.
(6 / 10)
அதிக திரை நேரத்தால் குழந்தைகளிடம் ஏற்படும் பாதிப்புகள்
உறக்கம் குறைவது - அதிகளவு திரை நேரம் உங்கள் உறக்க சுழற்சியை பாதிக்கும். ஏனெனில், இரவில் நீங்கள் மிகத் தாமதமாக உறங்கும்போது, நீங்கள் ஏதேனும் டிவைசுடன்தான் விழித்துக்கொண்டிருக்கிறீர்கள். இதால் உங்கள் உடல் இரவில் சுரக்கும் மெலோட்டனின் என்ற திரவத்தை சுரக்க முடியாமல் செய்கிறது. மெலோட்டினின் சுரக்க இருளும், அமைதியும் தேவை. இது உங்களை உறங்கச் செய்கிறது. இது உங்களுக்கு தேவையான அளவு சுரக்கவில்லையென்றால் அது உங்கள் குழந்தையை விழித்திருக்கச் செய்யும். மேலும், அது உங்கள் குழந்தைக்கு கடினமான மற்றும் எரிச்சலான அடுத்த நாளைத்தரும்.
(7 / 10)
மூளை செல்களில் மாற்றம் - அதிக திரைநேரம் உங்கள் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மூளையின் கார்ட்டெக்ஸ் எனப்படும் வெளிப்புற லேயர், வளரும் பருவத்தில்தான் தகவல்களை செயல்முறைப்படுத்துகிறது. இது முக்கியமான வளர்ச்சியை இந்த காலகட்டத்தில் பெருகிறது. அதிக திரை நேரம் இந்த வளர்ச்சியை பாதிக்கும். இதனால் கார்டெக்ஸ் மெலிதாகி, கல்வியிலும், மூளை வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
(8 / 10)
மனநிலையில் மாற்றம் - அதிகளவில் டெக்ஸ்ட் செய்வது, ஸ்க்ரால் செய்வது உணர்வு ரீதியான ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இது மனஅழுத்த அறிகுறிகளை அதிகரிக்கிறது. அதிகளவு திரையில் நேரம் செலவிடும் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் அவர்களின் பொறுப்புகளை தட்டிக் கழிக்கிறார்கள். அவர்களுக்கு திரை இல்லாவிட்டால், பதற்றம் ஏற்படும். இதனால் அவர்களுக்கு மனப்பதற்றம், மனநிலை மாற்றம், அழுகை, கத்துவது போன்ற கோவ பிரச்னைகள் ஏற்படும். குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் முக்கிய பங்கு வகித்து, குழந்தைகளின் திரை நேரம் குறித்து அவர்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். அவர்களுக்கு தேவையான நடத்தை கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும். எல்லைகளை வகுக்கவேண்டும். பெற்றோர்கள் கட்டுப்பாடுகள் விதிக்கும்போது குழந்தைகள் கட்டுப்படுகிறார்கள்.
(9 / 10)
பெற்றோர் தாங்கள் திரை பார்க்கும் நேரத்தை குறைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதையே குழந்தைகளும் பின்பற்றுவார்கள். அப்போதுதான் அவர்களின் குழந்தைகள் திரையை குறைப்பதன் முக்கியத்துவத்தை உணர்வார்கள் மற்றும் அதன் எல்லைகளை புரிந்துகொள்வார்கள்
மற்ற கேலரிக்கள்