Parenting Tips : பிறந்த நான்கு மாதத்திலே சாதிக்கும் குழந்தைகள்! மூளையில் என்ன நடக்கும்? ஓர் அலசல்!
Parenting Tips : பிறந்த நான்கு மாதத்திலே சாதிக்கும் குழந்தைகள்! மூளையில் என்ன நடக்கும்? ஓர் அலசல்!

அண்மையில் பறவைகள், விலங்குகள், காய்கறிகள் என 120 பொருட்களை அடையாளம் காட்டி, 4 மாத குழந்தை உலக சாதனை படைத்தது என்ற செய்தி, ‘சாதனை படைத்த 4 மாத குழந்தை’ என்ற தலைப்பில் வெளியாகி, வைரல் ஆனது. இதை நோபல் வேர்ல்டு ரெக்கார்ட் அங்கீகரித்து அந்த குழந்தைகக்கு சான்றும் வழங்கியுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற சாதனைகளை குழந்தைகள் செய்வது எதனால் என்ற ஒரு அலசல்.
நினைவுத்திறன் என்பதும் குறிப்பிட்ட ஒரு கலையின் திறன் என்பதும் மூளையில் இருக்கும் நியூரான்களின் செயல்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது.
அதாவது இரண்டு நியூரான்கள் இணையும் பகுதியினை synapses என்போம். அதுபோல அனைத்து நியூரான்களும் ஒன்றோடொன்று கச்சிதமான பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். தொடர்ந்து ஒரு பயிற்சியை செய்யும்போது அதிக பிணைப்புகள் ஏற்பட்டு அது நிபுணத்துவமாகிறது என நவீன மூளை அறிவியல் சொல்லுகிறது.
நிற்க.
பொதுவாக எந்த பயிற்சியும் இன்றியும், இயல்பாக நடக்க, நிற்க, கோர்வையாக பேச நினைவுத்திறனில் மேம்பட, அடிப்படையான கற்றல் என ஒரு குழந்தையின் மூளையும் நரம்பு மண்டலமும் இணைப்பில் முற்றுப் பெற தோராயமாக ஐந்து ஆண்டுகள் ஆகும்.
ஏன் இத்தனை தாமதம்? பிற சிற்றினங்களில் அதாவது ஆடு, பூனை போன்ற பிற விலங்கினங்களில் இந்த இணைப்பு மிக விரைவாகவே இருக்கும். காரணம் அவற்றின் மூளை மனித மூளையினை விட சிக்கல் குறைவாக இருப்பதும், உடனடியாக ஓடவேண்டிய இரை தேட வேண்டியது போன்ற வாழ்வியல் காரணமான பரிணாம வளர்ச்சியும்.
மனிதக் குழந்தையின் மூளை பரிணாம வளர்ச்சியில் மிகச்சிக்கலான பிணைப்புக்களை பெற்றுள்ளது. மேலும் பிரவத்தின்போது சுலபமாக வெளிவர அதன் மண்டை ஓடு இளக்கமாக இருக்கும்.
அது முற்றி முழுப்பாதுக்காப்பு பெற ஓராண்டாவது ஆகும். மேலும் பிரவத்தின்போதைய வலி தாய்க்கு மட்டும்மல்ல. குழந்தைக்குமானதே. இந்த பிணைப்புகள் முழுமைபெறாத காரணத்தால்தான் அதற்கு வலி நினைவில் இல்லை. அச்சவுணர்வின்றி புது விஷயங்களுக்கு பழகும் என்றோரு தியரியும் உள்ளது.
இவற்றையெல்லாம் கடந்து பல காலமாக இந்த flash card கள் உள்ளிட்ட கற்பித்த கருவிகள் மூலம் பிள்ளைகளின் நினைவுத்திறனை மேம்படுத்தாலாம் என கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆர்வக்கோளாறு பெற்றோர்களை தூண்டிவருவது உண்மைதான்.
இந்த நான்கு மாதக்குழந்தை என்பதில் இருந்து ஆறுமாதமோ ஒன்பது மாதமோ இவ்வாறு பயிற்றுவிக்க இயலும். அதாவது மேலே சொன்ன நியூரான் இணைப்பினை வேகப்படுத்தும் செயல். நினைவுத்திறனை அதிகரிக்கலாம்.
ஆனால் கவனிக்க வேண்டியது என்னவென்றால் மேம்படுவது அறிவுக்கூர்மை அல்ல. அடிக்கோடிடுங்கள் இவ்விடம். இதுபோன்ற சாதனைக் குழந்தைகள் ஒருபோதும் அறிவுக்கூர்மையில் மேம்படாது. இது ஒரு வெறும் பயிற்சி. பத்தாண்டுகள் கற்பதை ஒரே ஆண்டில் கற்கும் சிட்டி ரோபோ திறன். அதனை அறிவாக அப்ளை பண்ண அனுபவம் தேவை. அது வயதிற்கு தக்கவாறு வாழ் சூழலுக்கு தக்கவாறுதான் கிடைக்கும்.
இது நாம் நாய்க்குட்டிகளை கக்கா போக, நடைப்பயிற்சிக்கு பழக்குவதுபோலத்தான்.
பெற்றோரின் குதிரைப்பந்தய புத்தி இருக்கும். வரை இதுபோன்ற கோமாளித்தனங்களை தவிர்க்க இயலாது.
தடியைக்கொண்டு கனியைப் பழுக்க வைப்பது போலத்தான்.
திறமையை ஊக்குவித்து வளர்ப்பது என்பதும் வெறி எடுத்து எதிலாவது தள்ளிவிட்டு பெருமை தேட வேண்டும் என்பதும் முற்றிலும் வேறுவேறானது. பெற்றோர்கள் இதனை உணர்வது அவர்களுக்கு அவர்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கிய சமுதாயத்திற்கு நல்லது.
நன்றி - ஷோபனா நாராயணன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்