Parenting Tips : கவனம் பெற்றோர்களே! இந்த விஷயங்களை உங்கள் குழந்தைகளிடம் கூறிவிடாதீர்கள்!
Parenting Tips : பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் இவைதான்!

குழந்தைகளின் வெளித்தோற்றத்தை உருவாக்குவதில் பெற்றோர் பெரும்பங்கு வகிக்கிறார்கள். குழந்தைகள் பேசுவது முதல் பழகுவது வரை அனைத்தும் பெற்றோரிடம் இருந்துதான் வருகிறது. குழந்தைகள் தொடர்ந்து தங்கள் பெற்றோரிடம் இருந்து கற்கிறார்கள்.
நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் திறந்த மனதுடனும், நேர்மையாகவும் இருக்கவேண்டும். ஆனால் நீங்கள் சில விஷயங்களை உங்கள் குழந்தைகள் முன் பேசக்கூடாது. அவை என்னவென்று தெரிந்துகொண்டு அவர்களுக்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குங்கள்.
திருமண சண்டைகள்
ஒவ்வொரு உறவிலும் ஏற்றம், இறக்கம் இருக்கத்தான் செய்யும். இருவரும் ஒத்துப்போகாமல் இருப்பது பெற்றோருக்கு வழக்கமான ஒன்றுதான். எனினும், பெற்றோரின் சண்டைகள், குழந்தைகளின் நலனுக்கு ஏற்றதல்ல. குழந்தைகள் பதற்றத்துடன் இருப்பார்கள்.
அவர்களுக்கு குழப்பம் ஏற்படும். அவர்கள் பெற்றோர்களின் வாக்குவாதங்களுக்கு சம்மந்தம் இல்லாதவர்களாகவும் இருக்கலாம். குழந்தைகள் தங்களின் பெற்றோரை ரோல் மாடலாக பார்க்கவேண்டும். தொடர்ந்து சண்டைகளை மட்டுமே சந்தித்து வரும் குழந்தைகளுக்கு அது உணர்வு ரீதியான வளர்ச்சியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
உறவினர்கள் குறித்த எதிர்மறை பேச்சுக்கள்
உறவினர்களுடன் உங்களுக்கு பிரச்னைகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். அவர்கள் குறித்து எதிர்மறையாக குழந்தைகளிடம் பேசுவது, குழந்தைகளுக்கு டென்சனையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். உங்கள் குழந்தைகள் அந்த உறவினர்களுடன், ஆழ்ந்த பிணைப்பை வைத்திருக்கலாம்.
அவர்கள் குறித்து இதுபோன்ற எதிர்மறை வார்த்தைகளை கேட்கும்போது, அவர்களுக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தலாம். இதனால் அவர்கள் காயமடையலாம். உங்கள் உறவினர்கள் குறித்து தவறாக பேசுவதற்கு பதில், பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளுங்கள். இது குடும்பத்தில் நேர்மறையான உறவுகளுக்கு இடம்கொடுக்கும்.
பாட்டி, தாத்தா குறித்து எதிர்மறையாக பேசுவது
குழந்தைகளின் வாழ்வில் தாத்தாக்களும், பாட்டிகளுக்கும் சிறப்பான இடம் உண்டு. அன்பு காட்டுவதிலாக இருக்கட்டும். ஆதரவு தருவது, அறிவைக் கொடுப்பது என அவர்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. எனவே தாத்தா, பாட்டிகள் குறித்து எதிர்மறையாக பேசுவது, குழந்தைகளை காயப்படுத்தும். தலைமுறை கடந்த இந்த உறவில் விரிசலை ஏற்படுத்தும்.
உங்களுக்கு அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அதுகுறித்து அவர்களிடம் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும். அதில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது. குழந்தைகளை அவர்களுக்கு மரியாதை கொடுக்கவும், அவர்களைக் கொண்டாடவும் கற்றுக்கொடுக்கவேண்டும். குடும்ப ஒற்றுமை மற்றும் மரியாதையை காக்க வேண்டும்.
குடும்ப சண்டைகள்
குடும்பத்தில் சண்டைகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. அதில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தவறு. உங்கள் உடன் பிறந்தவர்களுடன் பிரச்னை என்றாலோ அல்லது உங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்னை என்றாலோ குழந்தைகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டு அல்லலுறும் நிலை ஏற்படும்.
பெற்றோராக சண்டைகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு தேவையில்லாத மனஅழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம். டென்சனைக் கொடுக்கவேண்டாம்.
குழந்தைகளின் தோற்றம் குறித்த எதிர்மறை கமெண்ட்கள்
குழந்தைகள் மனதில் எதுவும் எளிதில் தங்கிவிடும். அவர்கள் குறித்து எதைச் சொன்னாலும் குழந்தைகளை அது பாதிக்கும். அது அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் உடல் குறித்த எண்ணத்தை மாற்றும். எனவே எதிர்மறையான கமெண்ட்கள் கொடுப்பதை தவிர்க்கவேண்டும்.
குறிப்பாக குழந்தைகளின் தோற்றம் குறித்து பேசக்கூடாது. குழந்தைகளின் எடை, நிறம், உடல் அமைப்புகள் ஆகியவை அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தும். அவர்கள் குறித்து தாழ்வாக எண்ணத்தூண்டும். எனவே குழந்தைகளின் தனித்தன்மைகளை பாராட்டி அவர்களை ஊக்குவித்து, அவர்களின் தோற்றம் குறித்து நேர்மறை எண்ணங்களைக் கூறவேண்டும்.
எதிர்காலம் குறித்த பயம்
எதிர்காலம் குறித்து கவலைகொள்வது பெற்றோருக்கு கவலை என்பது இயல்புதான். எனவே அதுதொடர்பான மனஅழுத்தத்தையும், பயத்தையும் குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது.
குழந்தைகள் நிலையான வாழ்க்கைக்காக தங்களின் பெற்றோரைத்தான் சார்ந்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து எதிர்காலம் குறித்த கவலையை தங்கள் குழந்தைகளிடம் எடுத்துக்கூறினால், இது குழந்தைகளிடம் தேவையற்ற அச்சம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும்.
எனவே உங்கள் கவலைகளைக் கூறி குழந்தைகளை கஷ்டப்படுத்தாமல், அவர்களுக்கு ஒரு நேர்மறையான சூழலை வீட்டில் உருவாக்க வேண்டும். அவர்களை காப்பதற்காக நீங்கள் இருப்பதாக அவர்களுக்கு கூறவேண்டும். வாழ்வின் சவால்கள் குறித்து அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.
ஒப்பிட்டு பார்ப்பது
பெற்றோர்களுடனான பிரச்னையில் குழந்தைகளை இடையில் பலியாடு ஆக்கக்கூடாது. உங்கள் இணையர் குறித்து எதிர்மறையாக அவர்களிடம் பேசக்கூடாது. ஒப்பீடு மற்றும் குற்றச்சாட்டுக்களை தவிர்க்க வேண்டும். இரண்டு பெற்றோரின் நேர்மறைகளில் இருந்து குழந்தைகள் நன்மையடையவேண்டும். அவர்களை பெற்றோர் சண்டையில் இழுத்துவிடுவது அவர்களுக்கு ஆபத்து மற்றும் அவர்களின் நலனுக்கு உகந்ததல்ல.

டாபிக்ஸ்