Parenting Tips : உங்கள் குழந்தைகள் 18 வயதைத் தொடுகிறார்களா? அவர்களிடம் என்ன மாற்றங்கள் நடக்கிறது பாருங்கள்!
Parenting Tips : உங்கள் குழந்தைகள் 18 வயதைத் தொடுகிறார்கள் என்றால், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

உங்கள் குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் அவர்களிடம் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்று பாருங்கள். அது மிகவும் முக்கியமான மாற்றங்களாகவும் இருக்கிறது. 18 வயதில், பல முக்கிய மாற்றங்கள் நடப்பதாக ஆய்வுகளும், அறிஞர்களும் கூறுகிறார்கள். அதை நாமே கூட சில நேரங்களில் அனுபவித்து இருக்கலாம். அவர்களுக்கு 10 வயதில் சட்ட ரீதியான சுதந்திரம் கிடைக்கும். உணர்வு ரீதியாக அவர்கள் முதிர்ச்சியை அடைகிறார்கள் என்று அறிவியல் கூறுகிறது. வளர் இளம் பருவத்தில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அனைத்தும், அவர்களின் தேர்வுகள், பொறுப்புகள் மற்றும் பரிணாமம் என அனைத்தும் உங்களிடம் மாறும்.
உறவுகள்
நீங்கள் குழந்தைப்பருவத்தில் இருந்து வளரிளம் பருவத்திற்கு மாறும்போது, உங்கள் உறவுகளிலும் சில மாற்றங்கள் ஏற்படும். இதனால் உங்களிடம் பெற்றோர் – குழந்தை உறவில் கூட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். இருவரும் சமம், ஒருவருக்கொருவர் மரியாதையை வளர்த்தெடுக்கவேண்டும். புரிதல், திறந்த உரையாடல் மற்றும் வளர்ந்தவர்களிடம் பேச வேண்டிய விஷயங்கள் என உங்களின் அனைத்தும் மாறுபடும்.
வேலை தேர்வுகள்
உங்களுக்கு 18 வயதாகும்போது, உங்களுக்கு உங்களின் வேலையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. வேலை, எதிர்காலம், பயிற்சி அல்லது நீங்கள் தொழிலைக் கூடத் துவங்கலாம். இது அவர்களுக்கு அவர்களின் தொழில் மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்க சுதந்திரம் கொடுக்கும்.