தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Parenting Tips Are Your Kids Stubborn So Know This First

Parenting Tips : உங்கள் குழந்தைககள் பிடிவாதம் பிடிக்கிறார்களா? எனில் இதை தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!

Priyadarshini R HT Tamil
Mar 23, 2024 03:00 PM IST

Parenting Tips : நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் உங்கள் குழந்தைகளை பிடிவாதமானவர்களாக்குகிறது.

Parenting Tips : உங்கள் குழந்தைககள் பிடிவாதம் பிடிக்கிறார்களா? எனில் இதை தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!
Parenting Tips : உங்கள் குழந்தைககள் பிடிவாதம் பிடிக்கிறார்களா? எனில் இதை தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!

ட்ரெண்டிங் செய்திகள்

அனைத்துக்கும் ஆமாம் சொல்வது

ஆய்வுகளைப் பொறுத்தவரையில், அதிக பேரன்டிங் கிடைத்த குழந்தைகள் பெரியவர்கள் மீது வளர்த்துக்கொள்ளும் அபிப்ராயம் தவறாக உள்ளதாக கூறுகிறது. அவர்கள் பெரியவர்கள் சுயநலவாதிகளாகவும், அனுதாபம் இல்லாதவர்களாகவும், நல்ல அறம் இல்லாதவர்களாகவும், அவர்களுக்கு விதிகள் பொருந்துவதில்லை என்று நடந்துகொள்பவர்களாகவும் இருப்பார்கள் என்று எண்ணுவதாக உள்ளது.

உங்கள் குழந்தைகளை ஊக்குவிப்பதும் இல்லை; பாராட்டுவதும் இல்லை

உங்கள் குழந்தைகளை பாராட்டுவது, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான சிறந்த வழி. உங்கள் குழந்தைகளை பாராட்டும்போது அவர்கள் நன்றாக செயல்படுகிறார்கள் என்பது தெரியும். உங்கள் பாராட்டுகளை பல வழிகளில் அவர்களுக்கு தெரியப்படுத்தலாம். வாய்விட்டு பாராட்டலாம் அல்லது அவர்களுக்கு பரிசு கொடுத்து பாராட்டலாம்.

மற்றவர்கள் முன்னிலையில் அவர்களை விமர்சிப்பது

உங்கள் குழந்தைகளை பொது இடத்தில் வைத்து திட்டும்போது உங்களுக்கு குற்றஉணர்வு தோன்றுதில்லையா? அவர்களை பொது இடத்தில் திட்டும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கை போகிறது. அவர்களை குற்றவாளிபோல் நடத்தாமல், குறை கூறாமல் அவர்களிடம் நேரடியாக பேசுவது நல்லது. அவர்களின் வாழ்வில் அவர்களின் குறைகளை மட்டுமே தொடர்ந்து சுட்டிக்காட்டிக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருக்க வேண்டாம்.

அவர்கள் எந்த வசதிகளும் கிடைக்கப்பெறாத மக்கள் குறித்து சொல்லிக்கொடுக்காமல் இருப்பது

அவர்களுடன் உரையாடுவது மிகவும் அவசியம். அவர்கள் சமூக வலைதளங்களில் என்ன தெரிந்துகொள்கிறார்கள், செய்திகள் மூலம் தெரிந்துகொள்வது என்ன? மற்றும் தங்கள் வீட்டைவிட்டுச் செல்லும்போது என்ன பார்க்கிறார்கள் என்பது குறித்த உரையாடல் தேவை. இதை நீங்கள் செய்யும்போது, குழந்தைகள் ஒரு நபரின் உணர்வுகள், அவர்களுக்கு இப்போது என்ன நடக்கிறது என்பதால் முடிவு செய்யப்படுவதல்ல என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இவையனைத்தும் அவர்கள் வாழ்வில் நடைபெறும் சூழல்களால் ஏற்படுகிறது என்பதை புரிந்துகொள்கிறார்கள்.

நன்றியுணர்வை வளர்த்தெடுக்காமல் போனது

குழந்தைகள், மற்றவர்களுக்கு உதவுவது, அவர்கள் இந்த குடும்பத்தில் அங்கம் வகிப்பதால் அல்லது அவர்கள் கொடுப்பதற்காக இருக்கலாம், இது அவர்களுக்கு நாம் குழுவான இணைந்து செயல்படுவதற்கும், குழுவேலையையும் உணர்த்துவதாக இருக்கும். அவர்களுக்கு அவர்கள் கேட்கும் எதுவும் கிடைக்கவிலையென்றால், அவர்கள் நன்றியுணர்வுடன் இருக்கக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நன்றியை வெளிப்படுத்த கற்றுக்கொடுங்கள். நன்றியுணர்வை வளர்த்தெடுங்கள்.

அவர்களுக்கு தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்காமல், என்ன செய்ய வேண்டும் என்பதை காட்டுங்கள்

குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு, அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இது அவர்கள் கற்றுக்கொள்வதற்கு தேவை. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் கூறுவதைவிட கற்றுக்கொடுப்பது மிகவும் சிறந்தது. இது தவறுகளை குறைக்கும்.

ஒழுக்கம்

குழந்தைகளுக்கு ஒழுக்கம், விதிகள் ஆகியவற்றை கற்றுக்கொடுப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால், அது அவர்களின் நன்னடத்தையில் பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களிடம் கீழ்படியாமையை ஏற்படுத்திவிடும். கவனிக்க வேண்டும் என்ற ஒழுக்கம் நிறைந்த குழந்தைகள், அவர்களின் தவறுகளுக்கு தார்மீக பொறுப்பேற்பார்கள். அவர்கள் ஒருமுறை செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள்.

இரக்க உணர்வை புகுத்தாமல் இருத்தல்

மற்றவர்களிடம் தனிப்பட்ட முறையில் நாம் தொடர்புபடுத்த முடியாத ஒன்றை தன்னார்வத்துடன் செய்யும்போது, அது நம்மை செய்யவைக்கிறது. சமூகத்தில், இரக்கம் புரிந்துகொள்வதற்கான ஒன்றாக உள்ளது. நீங்கள் மனம் திறந்தவராகவும், ஆதரவானவராகவும் இருப்பதற்கு புரிந்துகொள்வது அவசியமாகிறது. எனவே குழந்தைகள் இரக்க உணர்வுடன் இருக்க வேண்டும்.

அதிகம் நச்சரிப்பது

நச்சரிப்பது உங்களுக்கு உதவாது. உங்கள் குழந்தை அது என்ன தேவை என்பதை கற்பிக்காது. மாறாக, அது அவர்களுக்கு மக்களுக்கு அவர்கள் மீது தொடர் எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும் என்பதை மட்டுமே கற்பிக்கும். அவர்கள் நச்சரித்தால் அதற்கு இடம்கொடுக்கக்கூடாது. மேலும் அவர்கள் கோவம் கொள்ளும் விஷயங்களுக்கு அவர்களிடம் சென்று கெஞ்சி சமாதானப்படுத்தக் கூடாது.

WhatsApp channel

டாபிக்ஸ்