Parenting Tips : உங்கள் குழந்தைகள் தவறிழைத்துவிட்டார்களா? எனில் இதுபோல் மட்டும் அவர்களை திட்டிவிடாதீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : உங்கள் குழந்தைகள் தவறிழைத்துவிட்டார்களா? எனில் இதுபோல் மட்டும் அவர்களை திட்டிவிடாதீர்கள்!

Parenting Tips : உங்கள் குழந்தைகள் தவறிழைத்துவிட்டார்களா? எனில் இதுபோல் மட்டும் அவர்களை திட்டிவிடாதீர்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Jul 29, 2024 01:52 PM IST

Parenting Tips : உங்கள் குழந்தைகள் தவறு செய்துவிட்டார்கள் எனில், அவர்களை இதுபோல் மட்டும் திட்டிவிடாதீர்கள். இதனால் அவர்களின் மனம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

Parenting Tips : உங்கள் குழந்தைகள் தவறிழைத்துவிட்டார்களா? எனில் இதுபோல் மட்டும் அவர்களை திட்டிவிடாதீர்கள்!
Parenting Tips : உங்கள் குழந்தைகள் தவறிழைத்துவிட்டார்களா? எனில் இதுபோல் மட்டும் அவர்களை திட்டிவிடாதீர்கள்!

குழந்தைகளை புரிந்துகொள்வது

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டவும், ஆதரவு கொடுக்கவும் முயலும்போது, அவர்கள் கூறும் சில வார்த்தைகள் குறிப்பாக அவர்களை வதைப்படுத்துகிறது. அந்த வார்த்தைகளை கேட்கும்போது, அவர்களுக்கு ஒரு நேர்மறையான எண்ணங்களை வளர்த்தெடுக்கவேண்டும். 

அதுபோன்ற ஒரு விஷயங்களை அவர்களிடம் நீங்கள் பேசவேண்டும். நீங்கள் எதுமாதிரியான விஷயங்களை உங்கள் குழந்தைகளிடம் கூறக்கூடாது என்று தெரிந்துககொள்ளுங்கள். இதுபோன்ற எதிர்மறை எண்ணங்கள் உங்கள் குழந்தைகளை பாதிக்கும். அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கும். அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பாதிக்கும்.

உங்கள் வீட்டில் உள்ள ஒரு எதிர்மறை எண்ணங்கள் கொண்டவரை குறிப்பிட்டு நீ அவர்போல் இருக்கிறாய் என்று கூறாதீர்கள்.

உங்கள் குழந்தைகளை எதிர்மறை எண்ணங்கள் கொண்ட உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒப்பிடாதீர்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும். இது அவர்களுக்கு தேவையற்ற அழுத்தத்தை உருவாக்குகிறது.

மற்றொரு குழந்தையை குறிப்பிட்டு நீ அவர்களைப்போல் அல்ல என்று கூறக்கூடாது.

உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். இதனால் அவர்கள் தங்களை குறைத்து மதிப்பிட்டுக்கொள்வார்கள். இதனால் அவர்களின் மதிப்பே அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.

நீ எப்போதும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறாய்,

இதுபோன்ற கடுமையான வார்த்தைகளை உங்கள் குடும்பத்தினரிடம் பேசும்போது, அது உங்கள் குழந்தைகளுக்கு உணர்வு ரீதியான பாதிப்புக்களைக் கொடுக்கிறது. அது உங்கள் குழந்தைகளின் மனதை பாதிப்பதுடன், உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையையும், மனஆரோக்கியத்தையும் குலைக்கிறது.

நீ தேறப்போவதில்லை.

குழந்தைகளின் திறன்களை குறைத்து மதிப்பிடும் இதுபோன்ற வார்த்தைகள் குழந்தைகளின் மனநிலையை முற்றிலும் பாதிக்கிறது. இதனால் அவர்களின் ஊக்கம் முற்றிலும் குறைகிறது. இதனால் அவர்களுக்கு அவர்கள் மீதே சந்தேகம் ஏற்படுகிறது. எனவே இத்தனை கடுமையான வார்த்தைகளை குழந்தைகளிடம் பேசாதீர்கள்.

அழுவதை நிறுத்து இது பெரிய விஷயமல்ல,

உங்கள் குழந்தைகள் அழுவதை நிறுத்தாதீர்கள். அவர்களின் உணர்வுகளை அவர்கள் பகிர்ந்துகொள்ள அனுமதியுங்கள். இதனால் அவர்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பேசுங்கள்.

நீ எப்போதும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறாய்,

உங்கள் குழந்தையை எப்போது பிரச்னைகளை ஏற்படுத்தும் நபராக சித்தரிக்காதீர்கள். அது உங்கள் குழந்தையின் நடத்தையை பாதிக்கிறது. இதுவே அவர்கள், அவர்களை எவ்வாறு எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை காட்டும் கண்ணாடியாகும். எனவே அவர்களிடம் இவ்வாறு கூறாதீர்கள்.

நீ என் உன் உடன் பிறந்தவர்களைப்போல் அல்ல,

உங்கள் குழந்தைகளின் உடன் பிறந்தவர்களிடம், நீ என் உன் உடன் பிறதவர்கள்போல் இல்லை என்று கூறாதீர்கள். இது அவர்களுக்கு நம்மிடம் நற்குணங்கள் குறைவாக உள்ளதுபோல் என்ற தோற்றத்தை உருவாக்கும். அவர்களிடையே போட்டி மனப்பான்மையை உருவாக்கி, அது நேர்மறையாக செயல்பட்டால் நல்லது. ஆனால் அது எதிர்மறையாகி அவர்களிடம் பொறாமையை ஏற்படுத்திவிடும்.

என்னிடம் உனது பிரச்னைகளுக்கு நேரம் இல்லை.

உங்கள் குழந்தைகளின் ஆர்வம் மற்றும் அக்கறையை மதிக்காமல் நடந்து கொள்ளாதீர்கள். அது அவர்களை முக்கியமற்றவர்களாக கருதவைக்கும். அவர்களை ஆதரவற்றவர்களாகவும் உணரவைக்கும்.

நீ அத்தனை புத்திசாலியல்ல.

உங்கள் குழந்தைகளின் அறிவுத்திறன் குறித்து எதிர்மறை எண்ணங்களை விதைக்காதீர்கள். அது அவர்களின் படிப்பை பாதிக்கும். அவர்களின் கற்றல் ஆர்வத்தையே குலைக்கும். இதனால் அவர்கள் படிக்கும்போது துன்புறுவார்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.