Parenting Tips : உங்கள் குழந்தைகள் சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கிறார்களா? என்ன செய்யலாம் பாருங்கள்!
Parenting Tips : சமூக வலைதளங்களை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு வழிகாட்டுவது எப்படி?

குழந்தைகளும், சமூக வலைதளங்களும்
குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது அவர்களுக்கு கண்காணிப்பும், வழிகாட்டுதல்களும் தேவை. அவர்களுக்கு கற்றலுக்கான வழிகளை காட்டுகிறது. ஆனால் அதை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் அது பல்வேறு ஆபத்துக்களைக் கொண்டுவருகிறது. எனவே குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது, அவர்களை கண்காணிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு பெற்றோர்கள் ஆன்லைனில் பாதுகாப்புடன் நடந்துகொள்வது எப்படி என்ற வழிகாட்டுதல்களையும் வழங்கவேண்டும்.
டிஜிட்டல் குடியுரிமையை கற்பிக்கவேண்டும்
ஆன்லைனில் பொறுப்புடன் குழந்தைகள் நடந்துகொள்வதற்கு பெற்றோர்கள் வழிகாட்ட வேண்டும். மற்றவர்களை மதிக்கக் கற்றுக்கொடுக்கவேண்டும். ப்ரைவசி, இணைய மிரட்டலை தவிர்த்தல், அவர்களின் ஆன்லைன் செயல்பாடுகள் குறித்து அவர்கள் நிதானத்துடனும், கவனத்துடனும் செயல்படவேண்டும். அவர்களுடன் பழகும் மற்றவர்கள் குறித்தும் அவர்கள் கவனம்கொள்ள வேண்டும்.
கிரிட்டிகலாக சிந்திக்கும் திறன்
உங்கள் குழந்தைகளை கேள்விகள் கேட்பதற்கு ஊக்கப்படுத்துங்கள். சமூக வலைதளங்களில் அவர்களுக்கு கிடைக்கும் தகவல்கள் குறித்த நம்பகத்தன்மையை மதிப்பிட கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு உண்மையை எது, பொய் எது என பிரித்து அறிய கற்றுக்கொடுங்கள். எந்த தகவலை நம்பலாம், எதை நம்பக்கூடாது என்பது அவர்களுக்கு தெரியவேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு அறிவு வளர்வதுடன், எதை சந்தேகப்படவேண்டும் என்ற தெளிவு கிடைக்கும்.
நேர எல்லைகளை வகுக்கவேண்டும்
திரை நேரத்துக்கும், சமூக வலைதள பயன்பாட்டுக்கும் தெளிவான எல்லைகளை வகுக்கவேண்டும். அப்போதுதான் அதிகப்படியான நுகர்வு தவிர்க்கப்படும். குழந்தைகள் ஆன்லைன் நடவடிக்கைகள் மற்றும் மற்ற வேலைகளுக்கு போதிய அளவு நேரம் ஒதுக்கவேண்டும் என்பதையும் முறைப்படுத்துங்கள். அவர்களின் பள்ளிப்பாடங்கள், அவர்கள் விரும்பும், பொழுபோக்கு, விளையாட்டு, உடற்பயிற்சி, வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் செலவிடுவது என அனைத்துக்கும் சமஅளவு நேரம் ஒதுக்க வேண்டும்.
பிரைவசி செட்டிங்
உங்கள் குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களில் உள்ள பிரைவசி செட்டிங்குகளை பயன்படுத்த கற்றுக்கொடுங்கள். அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தனிப்பட்ட போஸ்ட்களை யார் பார்க்கவேண்டும் என்ற வரையறை உள்ளது என்பதை கற்றுக்கொடுங்கள். இணையதள பாதுகாப்புக்காக, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பதன் அவசியத்தையும் கற்றுக்கொடுங்கள்.
அனுதாபம் மற்றும் அன்பு
மற்றவர்களை அன்புடனும் அனுதாபத்துடனும் நடத்தவேண்டும் என்பதை என்பதன் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள். இது ஆன்லைனில் மட்டுமல்ல நேரிலும் அப்படித்தான் இருக்கவேண்டும். அவர்களின் வார்த்தைகள் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்து குழந்தைகள் சிந்திக்கவேண்டும் என்று ஊக்கப்படுத்துங்கள். மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் நலனில் அவர்களின் வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் அக்கறை கொண்டிருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்.
ஆன்லைனில் உள்ள ஆபத்துக்கள் குறித்து பேசுங்கள்
உங்கள் குழந்தைகளிடம் ஆன்லைனில் உள்ள ஆபத்துக்கள் குறித்து நேர்மையாகவும், திறந்த மனதுடனும் உரையாடுங்கள். ஆன்லைனில் நடக்கும் ஊழல்கள், சமூக வலைதளங்களால் ஏற்படும் பாதிப்புகள், தேவையற்றவற்றை பார்ப்பது அல்லது படிப்பது ஆகியவை குறித்து வெளிப்படையாக பேசுங்கள். அவர்கள் ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்கவேண்டியதன் அவசியம் குறித்த அறிவு மற்றும் திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்துங்கள்.
கிரியேட்டிவிட்டியை ஊக்கப்படுத்துங்கள், சுயவெளிப்பாட்டை ஆதரியுங்கள்
நேர்மறையான சுய வெளிப்பாட்டுக்கு, அதாவது தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு இடமாக சமூக வலைதளங்களை அவர்கள் பயன்படுத்துவதை ஊக்குவியுங்கள். அவர்களின் கிரியேட்டிவிட்டியை வளர்க்க, அவர்களின் ஆர்வங்கள் மற்றும் திறமைகளை பகிர்ந்துகொள்ள அவர்கள் அதை பயன்படுத்தலாம். ஆனால் பாதுகாப்பான முறையில் அதில் அவர்கள் ஈடுபடவேண்டும்.
அவர்களின் ஆன்லைன் நடவடிக்கைகளை கண்காணியுங்கள்
குழந்தைகளின் சமூக வலைதள பயன்பாடுகள் குறித்து, கண்காணியுங்கள், அவர்களின் உரையாடல்களை கவனியுங்கள். அவர்கள் பார்க்கும் விஷயங்களை பாருங்கள். அதேநேரத்தில் அவர்களின் பிரைவசியையும், சுதந்திரத்தையும் மதித்து நடந்துகொள்ளுங்கள். அவர்கள் ஆரோக்கியமான மற்றும் அவர்கள் வயதுக்கு தேவையானவற்றை மட்டுமே ஆன்லைனில் இருந்த பெறுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்.
உதாரணமாக இருங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நேர்மறையான சமூக வலைதள உபயோகிப்பாளராக இருந்து காட்டி உதாரணமாக வாழுங்கள். அவர்களுக்கு ஆரோக்கியமான ஆன்லைன் பழக்கங்களை செய்து காட்டுங்கள். சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்துவதற்கும், மற்றவர்களுடன் மரியாதையுடன் நடந்துகொள்வதற்கும் எடுத்துக்காட்டாக வாழுங்கள். உண்மை வாழ்வில் உறவுகள் மற்றும் மற்றவர்களுடன் பேசுவதற்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டியது குறித்தும் அறிவுறுத்துங்கள்.
அவர்களுக்கு அப்டேட் செய்யுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு அண்மை தகவல்கள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து தெரிவியுங்கள். சமூகவலைதளங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். புதியவைகள், ஆப்கள் என அவை குறித்தும் கூறுங்கள். அதே நேரத்தில் அதில் உள்ள ஆபத்துக்களையும் எடுத்து கூறுங்கள். அவர்களுக்கு திறந்த உரையாடலை நிகழ்த்துங்கள். இருதரப்பு புரிதல் அவசியம். குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஆன்லைன் சுதந்திரத்தை கொடுங்கள்.

டாபிக்ஸ்