குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகள் சோம்பேறியாக உள்ளார்களா? அவர்களை வழிக்கு கொண்டு வருவது எப்படி?
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : குழந்தைகளை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தும் சில வாசகங்களை தெரிந்துகொள்ளுங்கள். அவற்றை அவர்களிடம் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தீர்கள் என்றால், அவர்களுக்கு அது நல்ல உத்வேகம் அளிப்பதாக இருக்கும். அது அவர்களுக்கு நற்பழக்கங்களை ஏற்படுத்தி தரும்.

கீழ்படிதலை உணர்த்தும் வாசகங்கள்
உங்கள் சோம்பேறி குழந்தைகளை கீழ்படிதல் மற்றும் நல்ல பழக்கவழக்கங்களுடன் வளர்ப்பது எப்படி என்று தெரியுமா? அது மிகவும் கடினமான ஒன்றுதான். பேரன்டிங் பயணத்தில், அதற்கான தேவைகளும் அதிகம். குழந்தைகளை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தும் சில வாசகங்களை தெரிந்துகொள்ளுங்கள். அவற்றை அவர்களிடம் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தீர்கள் என்றால், அவர்களுக்கு அது நல்ல உத்வேகம் அளிப்பதாக இருக்கும். அது அவர்களுக்கு நற்பழக்கங்களை ஏற்படுத்தி தரும்.
நான் உன்னை நம்புகிறேன், உன்னை நீ நன்றாக பார்த்துக்கொள்வாய்
உங்கள் குழந்தைகளின் திறன்களை நீங்கள் நம்புகிறீர்கள் மறறும் அவர்களின் பொறுப்புக்களை அவர்களால் கையாள முடியும் என்ற என்பதையும் நீங்கள் அவர்களுக்கு உணர்த்தினால், அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க உதவும். இது நம்பிக்கையை மட்டும் வளர்க்கவில்லை. மேலும் அவர்களின் செயல்களுக்கு சொந்தம் கொண்டாட அல்லது பொறுப்பேற்க அவர்களை ஊக்குவிக்கிறது. பொறுப்பை உருவாக்குகிறது.
அன்புதான் நீ மற்றவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பரிசு
உங்கள் குழந்தைகளுக்கு அன்பை போதிக்க வேண்டும். அது உங்கள் குழந்தைகளை வடிவமைக்க உதவும் சிறந்த கருவி. அன்பாக இருக்க வேண்டும் என்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்கு நீங்கள் அவர்களுக்கு பரிவுடன் நடந்துகொள்வதையும், கீழ்படிதலுக்கு நேர்மறையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுக்க வேண்டும்.