Parenting Tips : உங்கள் குழந்தைகளை கண்டிக்க சத்தம் போடுபவரா நீங்கள்? இதை முதலில் படியுங்கள்!
Parenting Tips : உங்கள் குழந்தைகளை கண்டிக்க சத்தம் போடுபவரா நீங்கள்? இதை முதலில் படியுங்கள்!
பாடுபடுத்தும் குழந்தைகளிம் கத்தாமல் அவர்களை வழிக்கு கொண்டுவரும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
பேரன்டிங் மிகவும் சவாலான ஒன்றுதான். உங்களுக்கு விரக்தி ஏற்படும்போது, நீங்கள் வேறு வழியில்லாமல் சத்தம்போட்டுதான் உங்கள் குழந்தைகளை வழிக்கு கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. எனினும், ஆனால் நீங்கள் சத்தம்போட்டு அதட்டுவது பெரும்பாலான நேரங்களில் உங்களுக்கு கஷ்டத்தைதான் கொடுக்கும். உங்கள் இருவருக்குமே அது நல்லதல்ல. இருவரின் மனதையும் புண்படுத்தி, இருவரின் உரையாடலையும் பாதிக்கும். நீங்கள் சத்தம்போட வேண்டிய வேளையில் நீங்கள் என்ன செய்யலாம்? இதோ வழிகள்.
10 வரை எண்ணலாம்
உங்களின் உணர்வுகள் மேலெழுந்து நீங்கள் மன சமமின்மை இழக்கும்போது, மெதுவாக நிதானத்துக்கு வாருங்கள். ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்து, மெதுவாக 10 வரை தேவைப்பட்டால் 20 அல்லது 100 வரை கூட எண்ணலாம். நீங்கள் நிதானமடைவுதற்கான இடம் கொடுக்க வேண்டும். அமைதியாக பதிலளியுங்கள்.
கத்துவதற்கு பதில் பொறுமையாக பேசுங்கள்
உங்கள் குரலை உயர்த்தி பேசுவதற்கு பதில், குரலை தாழ்த்தி அமைதியாக பேசி உங்கள் குழந்தைகளுக்கு ஆச்சர்யப்படுத்துங்கள். அதுபோல் நீங்கள் பேசும்போது உங்கள் குழந்தையின் ஆர்வத்தை தூண்டும். சத்தம் போடுவதற்கு பதில், உங்கள் குழந்தைகளுடன் உரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
தெளிவான உரையாடல்
நேரடியாகவும், உங்கள் வார்த்தைகளை புரிந்துகொள்ளும் வகையில் உங்கள் எதிர்பார்ப்புகளை தெரியப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும். புரிதலின்மையை தடுக்க உங்களின் மென்மையான குரல் உதவுகிறது. இதன் மூலம் உங்கள் உரையாடல் நல்லதாக அமையும்.
உணர்வு ரீதியலான பயிற்சிகள்
உங்கள் குழந்தைகளக்கு அவர்களின் உணர்வுகளை எப்படி கையாள வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். அதற்கு அவர்களின் உணர்வுகளை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவு கொடுத்து, கடின காலங்களில் இருந்து எப்படி மீண்டு எழவேண்டும் என்று அவர்களை நீங்கள் ஊக்கப்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் இருவருமே அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.
நேர்மறையான நடத்தைகளை கற்றுக்கொடுப்பது
உங்கள் குழந்தைகளின் நேர்மறையான விஷயங்களை பாராட்டுங்கள். அவர்களை நேர்மறையான செயல்களுக்காகவும், சாதனைகளுக்காகவும் அவர்களை பாராட்டுங்கள். அவர்களின் நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துவதன் மூலம், அதை செய்யுமாறு அறிவுறுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் குழந்தைகளை தொடர்ந்து நேர்மறையான விஷயங்களை செய்வதற்காக ஊக்குவிக்கிறீர்கள்.
உடற்பயிற்சிகள் அல்லது விளையாட்டுகள்
உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் விரக்தி உள்ளிட்ட பிரச்னைகளை, நீங்கள் உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் மடைமாற்றுங்கள். அது ஒரு நடனம் மூலம் அல்லது குதித்து விளையாடுவது அல்லது ஒரு விளையாட்டான தலையனை சண்டை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதுபோல் அவர்கள் உடல் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, உங்கள் இருவருக்குமே அது ஒரு நல்ல ஆரோக்கியமான அமைதியைக் கொடுக்கிறது.
இடைவேளை
சில நேரங்களில் உங்களுக்கு ஒரு இடைவேளை தேவைப்படலாம். அது உங்களுக்கு மீண்டும் நன்றாகி வர காரணமாக இருக்க உதவும். இதுபோன்ற இடைவேளை எடுக்கும்போது நீங்கள் இருவருமே மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். அது உங்கள் இருவருக்குமே நல்ல மனநிலையைக் கொடுக்கும். ஒரு நீண்ட அமைதிக்குப்பின் நீங்கள் புத்துணர்ச்சியுடன் மீண்டெழுவதற்கு உதவும்.
எடுத்துக்காட்டாக வாழுங்கள்
உங்கள் பெற்றோரைப்போல் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் உதாரணமாக வாழுங்கள். கோவ மேலாண்மை நுட்பங்களை தெரிந்துகொள்ளுங்கள். சவாலான சூழல்களிலும், நீங்கள் அமைதியை கடைபிடிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குழந்தைகளுக்கும் உதவும். இதுபோன்ற நேர்மறையான எண்ணங்களால் உங்கள் குழந்தைகளையும் கவருங்கள். அது உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான தருணமாக இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்