குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : டீன் ஏஜ் மகனின் அம்மாவா நீங்கள்? அவர்கள் உங்களிடம் இருந்து கேட்க விரும்புவது இதைத்தான்!
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : நீங்கள் டீன் ஏஜ் மகனின் அம்மா என்றால், அவர்களுக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்கவேண்டியது இதைத்தான்.

உங்கள் டீன்ஏஜ் மகனை நீங்கள் அன்புடனும், அறிவுடனும் வளர்க்கவேண்டும். டீன் ஏஜ் என்பது குழப்பங்கள் நிறைந்த ஒரு பருவமாகும். சவால் நிறைந்த பருவமும் ஆகும். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இது சவாலான நாட்கள்தான். ஒரு தாயின் வார்த்தைகள் அவர்களின் மகன்களுக்கு, வழிகாட்டவேண்டும். சவுகர்யமாக இருக்கவேண்டும். அவர்களை முன்னேற்ற வேண்டும். ஒரு தாயிடம் இருந்த டீன்ஏஜ் மகன்கள் கேட்க விரும்புவது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
அழுவதும், வருந்துவதும் சரிதான்
உங்களின் உணர்வுகளை உணரும்போதுதான் உண்மையான பலம் உங்களுக்கு கிடைக்கிறது. அவற்றை நீங்கள் மறைக்கும்போது அது கிடைப்பதில்லை. நீங்கள் அழலாம், காயப்படலாம், பாதிக்கப்படலாம். உங்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும். அவை மிகவும் முக்கியமானவை.
நீ பர்பெஃக்டாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை
நீ வளர்கிறாய், கூடவே கற்றுக்கொள்கிறாய், தவறுகள் உன்னை வரையறுக்காது. அவை உன்னை வடிவமைக்க உதவுபவை. நீ பர்பெக்ஃட்டாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அன்புடனும், மரியாதையுடனும், நேர்மையாகவும் நடந்துகொள்ளவேண்டும்.
மரியாதை என்பது தேர்வல்ல, அது மிகவும் முக்கியமானது
மற்றவர்களை நீ அன்புடனும், மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தவேண்டும். குறிப்பாக பெண்களை நீ அன்பாக நடத்தவேண்டும். மரியாதைதான் நீ யார் என்பதை உணர்த்துகிறது. மேலும் நம்பிக்கையை வளர்க்கிறது. இது நீ எப்படி வளர வேண்டும் என்பதற்கான விதியல்ல. இதுதான் உண்மை வாழ்க்கை முறை.
உனது குரலுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பு உண்டு
நாங்கள் உனது கருத்தை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும், நீ என்ன சிந்திக்கிறாய் என்பதை நான் கேட்க விரும்புகிறேன். எனவே நீ உனது சிந்தனைகளை கூறவேண்டும். மனம் திறந்து பேச வேண்டும். எப்போது உனது கருத்துக்கள் கேட்கப்படவேண்டும். அது உனது உரிமை.
நல்ல நண்பர்கள் என்பவர்கள் தங்களையும் முன்னேற்றி மற்றவர்களையும் முன்னேற்றுபவர்கள்
உன்னை சிறப்பானவர்களாக மாற்றும் நண்பர்களை தேர்ந்தெடுத்துக்கொள். அவர்கள் கசப்பான அனுபவங்களைக் கொடுக்கக்கூடாது. உண்மை நண்பர்கள் உனது கனவுகளுக்கு எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள். உன்னை அன்பாக நடத்துவார்கள். உன்னை எப்போதும் சிறுமையாக உணர விடமாட்டார்கள்.
அழுத்தம் உங்களை வடிவமைக்க அனுமதிக்காதீர்கள்
நீங்கள் கூட்டத்தை எப்போதும் பின்பற்றவேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் யார் என்பதில் நீங்கள் தீர்க்கமாக நிற்கவேண்டும். ஆனால் அது சரியான பாதையில் மட்டும் இருக்கவேண்டும். மற்றவர்களிடம் இருந்து கிடைக்கும் அங்கீகாரம் உங்களின் மதிப்பு கிடையாது. நீங்கள் தனித்தன்மையானவர்கள்.
நீ வளர்ந்துகொண்டிருக்குத் விதம் குறித்து நான் பெருமை கொள்கிறேன்
நான் உனது வளர்ச்சியை பார்க்கிறேன். அனைத்து வழிகளிலும் நீ யாராக வளர்கிறாய் என்பதை உற்றுநோக்குகிறேன். உனது தேர்வுகள், கருணை குணம், முயற்சிகள் என அனைத்தும் முக்கியம். நீ ஒரு சிறந்த இளைஞனாக வளர்வது குறித்து நான் பெருமை கொள்கிறேன்.
தேவைப்படும்போது உதவி கேளு
உதவி கேட்பதில் எந்த அவமானமும் இல்லை. எனவே உனக்கு தேவைப்படும்போது உதவி கேள். வலிமையான ஆண்கள் எப்போதும் கேள்விகள் கேட்பார்கள். அடுத்தவர்களை சார்ந்து இருப்பார்கள். அவர்களின் கடின காலத்தை அவர்கள் ஏற்பார்கள். நான் எப்போதும் உனக்காக இங்கு இருக்கிறேன் என்று அவர்களிடம் கூறிப்பாருங்கள். அவர்கள் தன்னம்பிக்கையுடனும், அன்பாகவும் உணர்வார்கள்.

டாபிக்ஸ்