Parenting Tips : தேர்வு அச்சத்தில் அல்லலுறுகிறீர்களா? அதற்கு குழந்தைகளை தயார்படுத்துவது எப்படி?-parenting tips are you suffering from exam fear how to prepare children for it - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : தேர்வு அச்சத்தில் அல்லலுறுகிறீர்களா? அதற்கு குழந்தைகளை தயார்படுத்துவது எப்படி?

Parenting Tips : தேர்வு அச்சத்தில் அல்லலுறுகிறீர்களா? அதற்கு குழந்தைகளை தயார்படுத்துவது எப்படி?

Priyadarshini R HT Tamil
Jan 14, 2024 02:00 PM IST

Parenting Tips : குழந்தைகளின் தேர்வுகளுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ளன. குழந்தைகளும் தேர்வுகளுக்கு கடுமையாக தயாராகி வருகிறார்கள். பொதுத்தேர்வு எழுதுபவர்கள் கூடுதல் முயற்சி செய்து படித்து வருகிறார்கள். அவர்களுக்கு பெற்றோரும் உதவ வேண்டும். பெற்றோர் எப்படி உதவலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Parenting Tips : தேர்வு அச்சத்தில் அல்லலுறுகிறீர்களா? அதற்கு குழந்தைகளை தயார்படுத்துவது எப்படி?
Parenting Tips : தேர்வு அச்சத்தில் அல்லலுறுகிறீர்களா? அதற்கு குழந்தைகளை தயார்படுத்துவது எப்படி?

கேட்டுபடித்து புரிந்துகொள்பவர்கள், சத்தமாக படிப்பார்கள். மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள். வித்யாசமான கான்செப்ட்களை கற்றுக்கொள்வார்கள். நாடகம், நடிப்பு பாடங்களை ஆழமாக புரிந்துகொள்ள தேவையானவற்றை செய்வார்கள்.

கினஸ்தெடிக் கற்பவர்கள், நடந்துகொண்டும், விளையாடிக்கொண்டும் படிப்பார்கள். சூவிங்கம் சுவைத்துக்கொண்டோ அல்லது சிறிய பொருட்களை வைத்துக்கொண்டோ அல்லது ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு படிப்பார்கள். அப்போதுதான் அவர்களுக்கு புரியும்.

உட்கார்ந்து படிப்பது இந்த காலத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு பொருந்தாது. ஏனெனில் அவர்கள் பல்வேறு கற்பிக்கும் வழிகளில் கற்க துவங்கிவிட்டார்கள். ஒரு சில குழந்தைகள் ஒரே நேரத்தில் 2 மணி நேரம் உட்கார்ந்து படிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் உடன் பிறந்தவர்களோ 15 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்துவிடுவார்கள். இதுதான் ஒவ்வொருவருக்கும் உள்ள வேறுபாடு. கடைசியில் அவர்கள் படித்துவிடுவார்கள். அதுதான் நமது எண்ணமும்.

அவர்களுக்கு உதவுங்கள்

இறுதித்தேர்வுகள் நெருங்குவதற்கு முன்னர் திருப்புதல் தேர்வுகள் வைக்கப்பட்டு, தொடர்ந்து முக்கிய தேர்வுகளும் தொடங்கிவிடும். இப்போது மாணவர்களுக்கு நேரம் இல்லாமல் அவதிப்படுவார்கள். தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்தும்போது, அவர்களுக்கு தேவையான ஊட்டசச்த்துக்களை கொடுக்க வேண்டும். 

இது முதலில் மிகவும் முக்கியமான ஒன்று. அது அவர்களின் உடலுக்கு தேவையான சக்தியைக்கொடுக்கும். அவர்கள் படிக்கும்போது தேவையான இடைவெளியை எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்வுகளுக்கு இடையில் விடுமுறைகளும் அவசியம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து நேரத்தை செலவிடுவது மிகவும் அவசியம். 

விளையாட்டு, இசை மற்றும் கலை என ஏதேனும் ஒன்றில் நாட்டம் செலுத்த வேண்டும். விளையாட்டு மற்றும் கிரியேட்டிவான பயிற்சிகள் படிப்பு மற்றும் மாணவர்களின் திறன்களை அதிகரிக்க உதவுகிறது என்பதற்க தெளிவான சான்றுகள் உள்ளன.

உங்களின் சொந்த கஷ்டங்கள் மற்றும் பதற்றம் குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள்

பெரும்பாலான பெற்றோர், அவர்கள் குழந்தைகள் எந்த ரேங்க் எடுத்தாலும் அது பரவாயில்லை என்றுதான் கூறுவார்கள். அவர்களுக்கு குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று, நல்ல கல்லூரியில் சேரவில்லையென்றால், அது அவர்களின் மகிழ்ச்சியை பாதிக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். அப்போதுதான் உண்மையான கவலைகள் துவங்கும். 

அறிவுரை கூறுவது, நச்சரிப்பு துவங்குகிறது, தடைகள் விதிப்பது, சில நேரங்களில் கடுமையான தண்டனைகள் வரை அது செல்கிறது.

இதனால் விரக்தி ஏற்படுகிறது. இது இந்த நிலையில் மிகவும் முக்கியம். இது உங்கள் உணர்வு மற்றும் ஊக்குவிப்பதில் பிரிதிபலிக்கும். எனவே உங்கள் குழந்தைகளிடம் இரக்கம் காட்டுங்கள். 

அவர்கள் அவர்களின் சிறப்பான செயல்களை செய்கிறார்கள் என்று நம்புங்கள். ஆழ்ந்த மூச்சுவிடுதல், மனஅமைதிக்கான பயிற்சிகள் இவையனைத்தும் குழந்தைகள் மற்றும் பெற்றோர் இருவருக்கும் தேவையான ஒன்றுதான்.

உதவி கேட்பது நல்லது

நாம் ஏற்கிறோம் அல்லது இல்லையோ, மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிப்படிப்பு குழந்தைகளின் மனநிலையை பாதிக்கிறது. அவர்களுடனான நமது உறவு, பெற்றோராக அது சிறப்பாக இருக்க வேண்டும். 

உங்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்படும்போது, உங்களுக்கு நம்பகமான நண்பர் அல்லது உங்கள் குழந்தையின் குணத்தை நன்கு அறிந்த ஆசிரியர் என யாரையாவது அணுகுங்கள். சில நேரங்களில் உங்களுக்கு நிபுணர்களின அறிவுரையும் தேவைப்படுகிறது. தேவைப்பட்டால் அதையும் எடுத்துக்கொள்ள நீங்கள் தயங்கவேண்டாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.