குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : நீங்கள் கடுமையான பெற்றோரா? ஆனால் மென்மையாகவே குழந்தைகளை கண்டிக்கலாம்! இந்த வழிகள் உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : நீங்கள் கடுமையான பெற்றோரா? ஆனால் மென்மையாகவே குழந்தைகளை கண்டிக்கலாம்! இந்த வழிகள் உதவும்!

குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : நீங்கள் கடுமையான பெற்றோரா? ஆனால் மென்மையாகவே குழந்தைகளை கண்டிக்கலாம்! இந்த வழிகள் உதவும்!

Priyadarshini R HT Tamil
Updated Mar 28, 2025 01:28 PM IST

குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : இதனால் அவர்களுக்கு ஆதரவான சூழலை நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதனால் உங்கள் குழந்தைகளின் வார்த்தைகளை நீங்கள் கேட்கிறீர்கள், அதற்கு மதிப்பு கொடுக்கிறீர்கள் என்பதை உணர்ந்து, அவர்கள் நற்குணங்களை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு ஊக்கம் கிடைக்கிறது.

குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : நீங்கள் கடுமையான பெற்றோரா? ஆனால் மென்மையாகவே குழந்தைகளை கண்டிக்கலாம்! இந்த வழிகள் உதவும்!
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : நீங்கள் கடுமையான பெற்றோரா? ஆனால் மென்மையாகவே குழந்தைகளை கண்டிக்கலாம்! இந்த வழிகள் உதவும்!

எதிர்பார்ப்புகள்

உங்கள் குழந்தைகளுக்கு விதிகளை எளிதாக விளக்கிவிடுங்கள். அது அவர்களுக்கு எல்லைகளை அறிந்துகொள்ள உதவும். அவற்றை அவர்கள் தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். இதனால் அவர்களுக்கு அழுத்தம் ஏற்படாது. அவர்களுக்கு அதிகப்படியாகவும் இருக்காது.

நேர்மறையான அணுகுமுறை

உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை அன்பாக அரவணைத்து கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்களுக்கு சில சலுகைகளையும் கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் ஊக்கத்தைக் கற்றுக்கொடுக்க உதவும். ஆனால் நீங்கள் தண்டனை கொடுக்காமல் அவர்களை திருத்த முடியும்.

தேர்வுகள்

அவர்களுக்கு குறைவான தேர்வுகளைக் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் குணத்தை கற்றுக்கொடுக்கும். ஆனால் அதற்கும் எல்லைகள் விதிக்கவேண்டும். இது அவர்களுக்கு பொறுப்பாக செயல்பட உதவும்.

லாஜிக்கல் விளைவுகளை நடைமுறைப்படுத்தவேண்டும்

இயற்கையாக அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் தண்டனைகளைவிட கூடுதலான பாடங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும். அவர்கள் தாங்களாக திருந்திக்கொள்ளாவிட்டால், திருத்தப்படும் வரை அவர்களுக்கு பாடங்கள் கிடைத்துக்கொண்டேயிருக்கும்.

எடுத்துக்காட்டு மூலம் விளக்குங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு அமைதியாக இருக்க கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு மரியாதையையும் அறிவுறுத்துங்கள். குழந்தைகள் பெரியவர்கள் செய்வதைப் பார்த்து, கற்றுக்கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு உதாரணமாக வாழுங்கள்.

பிரச்னைகளை தீர்க்கும் திறன்

அவர்களுக்கு தேர்வுகளை கொடுத்துக்கொண்டு இருக்காமல், அவர்களுக்கு வழிகாட்டுங்கள், அவர்களின் நடத்தைகள் குறித்து அவர்கள் சிந்திக்க வேண்டும். அவர்களுக்கு பொறுப்புணர்வையும், கிரிட்டிகலாக சிந்திக்கும் திறனையும் கற்றுக்கொடுங்கள்.

அவர்களுக்கு கவனிக்கும் திறனை கற்றுக்கொடுங்கள்

உங்கள் குழந்தைகளின் உணர்வுகளை முதலில் நீங்கள் மதிக்கவேண்டும். அவர்களுக்கு அவர்களின் கோணங்களை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்தவேண்டும். இதனால் மரியாதையும், ஒத்துழைப்பும் அதிகரிக்கிறது.

வழக்கம்

அவர்களுக்கு அன்றாடம் ஒரு வழக்கத்தை உருவாக்குங்கள். அதை அவர்கள் தொடர்ந்து செய்யவேண்டும். இது அவர்களுக்கு ஒரு வழக்கத்தை உருவாக்கிக்கொடுக்கும். அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பாகவும், தொடர்ந்து அவர்களின் கடமைகளை சரியாக நிறைவேற்றவும் உதவும். அவர்களுக்கு சரியாக இந்த முறையில் பழகும்போது, அவர்களே தாங்களாக சில விஷயங்களை எளிதாக செய்வார்கள்.

எதிர்மறை நடத்தைகளை மடை மாற்றுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு தண்டனை கொடுப்பதற்கு பதில், அவர்களை மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துங்கள். இது அவர்களுக்கு நல்ல பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க உதவும். குறிப்பாக அவர்களுக்கு வாசிக்கும் பழக்கம் அல்லது அவர்களுக்கு வெளியே சென்று விளையாடும் பழக்கம் இரண்டையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.

பொறுமை மற்றும் அமைதி

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நல்ல பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கவேண்டுமெனில், நீங்கள் அவர்களுக்கு பொறுமை, அமைதியை முதலில் கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்களிடம் கத்துவது அல்லது எரிச்சலுடன் நடந்துகொள்வது என எதைச் செய்தாலும் அவர்களுக்கு அச்சம் ஏற்படுமேயொழிய மரியாதை ஏற்படாது.