குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : பொறுப்பான தந்தையா நீங்கள்? டீன் ஏஜ் மகன்களுக்கு நீங்கள் மட்டும் கற்பிக்க வேண்டியது என்ன?
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : இந்த விஷயங்களை ஒரு தந்தை மட்டும்தான் டீன்ஏஜ் மகன்களுக்கு கற்பிக்க முடியும். அது என்னவென்று பாருங்கள்.

எல்லா விஷயங்களையும் எல்லாரும் குழந்தைகளுக்கு கற்பித்து விட முடியாது. எனவே தந்தை மட்டுமே எந்த விஷயத்தைக் கற்றுக்கொடுக்க முடியும் என்று பாருங்கள். வாழ்க்கையில் சில பாடங்களை தந்தையிடம் இருந்து மட்டுமே வரும். உண்மைகள், அன்பு மற்றும் எல்லையில்லா ஞானம் என டீன் ஏஜ் குழந்தைகளிடம் அப்பாக்கள் மட்டுமே கற்றுக்கொடுக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக வளர்வார்கள்.
பெண்களை மதிப்பது
ஒரு தந்தை தான் தன் மகனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆவார். அவர்கள் எவ்வாறு பெண்களை மரியாதையுடன் நடத்துகிறார் என்பதை மகன்கள் முன்னுதாரணமாகக் கொள்கிறார்கள். அவர்கள் பெண்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும், அன்புடனும் நடத்தவேண்டும். அவர்களின் வார்த்தைகள், செயல்கள் என அவர் தனது மனைவி மற்றும் தாயை எவ்வாறு நடத்துகிறார் என்பதை மகன்கள் பார்க்கிறார்கள். அவ்வாறே அவர்களும் பெண்களை நடத்துகிறார்கள்.
தோல்வியை கையாள்வது
ஒரு தந்தைதான் தனது மகனுக்கு தோல்வி என்பது முடிவல்ல என்பதை புரியவைக்க உதவவேண்டும். அவர்தான் தோல்விகளில் இருந்து மீளும் திறனை கற்றுக்கொடுக்கிறார் அல்லது தவறுகளில் இருந்து கற்கவும் வைக்கிறார். ஒவ்வொரு முறை வீழும்போது மீண்டும் வலுவாக எழுந்து வர உதவுகிறார்.
பொறுப்புடன் நடந்துகொள்வது
சிறிய வேலை முதல் பெரிய முடிவுகள் எடுப்பது வரை ஒரு தந்தைதான், ஒரு ஆண் எப்படி நடந்துகொள்வார் என தனது செயல்களின் மூலம் தனது மகனுக்கு கற்றுக்கொடுக்கிறார். பிரச்னைகளை சந்திப்பது, தவறாக இருக்கும்போது மன்னிப்பு கோருவது, மீண்டும் அனைத்தையும் சரியாக்குவது என அனைத்தையும் ஒரு தந்தையே தனது மகனுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.
உடல் பலம் மட்டும் பலமல்ல
எத்தனை அழுத்தமான சூழலிலும் அமைதியாக இருப்பதில்தான் பலம் உள்ளது என்கதை தனது தந்தைதான் தனது மகனுக்கு காட்டவேண்டும். எது சரியென்று பேசுவது மற்றும் மற்றவர்களை பாதுகாப்பது என அவர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும். பழு தூக்குவது மட்டுமல்ல உடல் ரீதியான சண்டைகளிலும் வெல்ல வேண்டும் என்பதை ஒரு தந்தைதான் தனது மகனுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.
உணர்வுகளை கையாள்வது
உணர்வுகளை வெளிப்படுத்துவது மற்றும் வருந்துவது என அனைத்தும் நல்லதுதான் என்பதை தந்தைதான் மகன்களுக்கு புரிய வைக்கவேண்டும். அவர்கள் எப்படி கோவத்தை, அச்சத்தை, துக்கத்தை வெளிப்படுத்தவேண்டும் என்று கற்றுக்கொடுக்கவேண்டும். எந்த உணர்வையும் அடைத்து வைத்துக்கொள்ளக்கூடாது. தேவையற்ற நேரத்தில் அதை வெளிப்படுத்தவும் கூடாது என்பதைக் கற்றுக்கொடுக்கவும் வேண்டும்.
பணி அறம்
ஒரு தந்தைதான் கடும் உழைப்பை தனது மகனுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். மேலும் வாழ்க்கையைக் கடந்து தனது தந்தை செய்யும் வேலை குறித்து அவர்கள் பெருமை கொள்ளவேண்டும். அவர்களின் முயற்சிகள் மற்றும் உழைப்பு என அனைத்தும் அவர்களை கவர்வதாக இருக்கவேண்டும்.
பணத்தை கையாள்வது
சேமிப்பு, சரியான முறையில் செலவு செய்வது கடனை தவிர்ப்பது மற்றும் கடுமையாக சம்பாதித்த பணத்தை மதிப்பது என அனைத்தையும் ஒரு தந்தைதான் தனது டீன் ஏஜ் மகன்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். இது அவர்களை கவர்வதற்காக அல்ல, ஆனால் பணத்தின் மதிப்பை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும், தேவைக்கு பணத்தை எப்படி செலவு செய்வது என்ற ஒழுங்கை கற்றுக்கொடுக்கவேண்டும்.
நகைச்சுவை
தந்தைகள் எப்போதும் தங்கள் மகன்களுக்கு சில ஜோக்குகளைக் கூறி அவர்களுடன் சேர்த்து சிரிக்கவேண்டும். அது ஜோக்குகள் எவ்வாறு டென்சனை குறைக்கும் என்பதை தந்தை குழந்தைகளுக்கு காட்ட உதவும். மற்றவர்களுடன் சேர்ந்திருத்தல் மற்றும் கடும் நேரங்களில் உங்களை எவ்வாறு திடப்படுத்திக்கொள்ளவேண்டும். எப்போதும் திடமாக இருப்பது என அனைத்தையும் கற்றுக்கொடுக்கவேண்டும்.

டாபிக்ஸ்