Parenting Tips : டீன்-ஏஜ் குழந்தையின் பெற்றோரா? வாக்குவாதம் செய்யும் அவர்களை கையாள்வது எப்படி?
Parenting Tips : டீன்-ஏஜ் குழந்தையின் பெற்றோரா? வாக்குவாதம் செய்யும் அவர்களை கையாள்வது எப்படி?
பேரன்டிங் என்பது மிகவும் கடினமான ஒன்று. அதிலும் டீன்-ஏஜ் குழந்தைகளுக்கு பெற்றோராயிருப்பது மிகவும் சிரமமான ஒன்று. அவர்களின் கருத்துக்கள், உணர்வுகளை பகிரும்போது ஏற்படும் மோதல்கள், அவர்களின் ஆசைகளை வெளிப்படுத்தும்போது ஏற்படும் சண்டைகள், இதை நீங்கள் முறையாக கையாளாவிட்டால் உங்கள் உறவில் விரிசல் ஏற்படும். உங்களிடையே உரையாடல் குறையும்.
இதுபோன்ற வாக்குவாதங்களில், ஏதோ ஒன்று தவறாக உள்ளது என்பது தெரியும். குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் குழந்தைகளின் வளரிளம் பருவத்தில் இதுபோன்ற மோதல்கள் ஏற்படுவது பொதுவான ஒன்று. எனவே உங்களிடமும், உங்கள் குழந்தையிடமும் அன்பாக நடந்துகொள்ள உங்களுக்கு சில வழிமுறைகள் உள்ளது.
அவை என்னவென்று தெரிந்துகொண்டு, உங்கள் வாக்குவாதங்களை புரிந்துகொள்ளும் வழியை தெரிந்துகொள்ளுங்கள். சண்டையிடும்போது ஆரோக்கியமான முடிவுகளை எட்டும் வழிகளையும், நேர்மறையான எண்ணங்களுடனும் தொடர்ந்து இருப்பதற்கான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
அவர்களின் கோணம் என்வென்பதை புரிந்துகொள்ள அவர்களுக்கு காது கொடுங்கள்
உங்கள் குழந்தைகள் பேசும்போது இடையில் நீங்கள் பேசாமல், அவர்கள் கூறுவதை முழுதாக கவனியுங்கள். அவர்களின் உணர்வுகளையும், சிந்தனைகளையும் அவர்கள் முழுமையாக வெளிப்படுத்த அனுமதியுங்கள். அவர்களின் கோணங்களில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். உங்களுக்கு அதில் உடன்பாடில்லையென்றாலும் அதை மதியுங்கள்.
அதை நீங்கள் மதிப்பதால் அவர்களின் கோணத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று பொருள் அல்ல. இது நீங்கள் அவர்களின் உணர்வுகளை மதிப்பதை காட்டும். அவர்களின் வார்த்தைகளையே அவர்களிடம் நீங்கள் திரும்ப கூறும்போது, அது நீங்கள் திறந்த மனதுடன் அவர்களை புரிந்துகொண்டு, உற்சாகப்படுத்துவதை கூறுகிறது.
உண்மையான ஆர்வமும், அனுதாபமும் நீங்கள் காட்டும்போது, அவர்களை புரிந்துகொண்ட சூழலும், அவர்களின் குரலை கேட்ட திருப்தியும் அவர்களுக்கு ஏற்படும்.
மரியாதையாக அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் போவது எப்படி என்று அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்
அவர்களுக்கு தெளிவான எல்லை வகுத்துக்கொடுங்கள், வழிமுறைகளை வகுத்துவிடுங்கள். இவை வாக்குவாதங்கள் திறம்பட நடைபெற உதவும். அவர்களின் சிந்தனைகளை வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறவேண்டும். அப்போது அவர்களை அவமதிக்கவோ அல்லது கத்தவோ கூடாது.
கருத்து வேறுபாடு என்பது இயல்பான ஒன்று என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்டுங்கள். இரு தரப்புக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதையும் புரியவையுங்கள். அவர்களின் கோணத்தை அமைதியாக வெளிப்படுத்துவதை ஊக்குவியுங்கள். சமரசத்தை ஏற்படுத்து ஊக்குவியுங்கள் அல்லது பிரச்னைகளை தீர்க்க முயலுங்கள்.
பிரச்னைகளை அமைதியாக தீர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுங்கள்
வாக்குவாதத்துக்கு காரணமாக அடிப்படை பிரச்னை என்ன என்பதை கண்டுபிடிக்க உங்கள் டீன்-ஏஜ் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். அதற்கான தீர்வதை எப்படி கண்டுபிடிப்பது என்பதையும் கற்றுக்கொடுங்கள். பொதுவான இடத்தில் இருந்து கண்டுபிடிப்பதற்கு கற்றுக்கொடுங்கள். வித்யாசங்களை கற்றுக்கொடுக்காதீர்கள். அவர்கள் செயல்களில் உள்ள சிக்கல்கள் குறித்து தெரிந்துகொள்ளவதற்கு அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
சமரசம் எப்படி இருவருக்கும் பயனளிக்கும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இருவருக்கு நன்றாக அது இருக்கும் என்பதை புரியவையுங்கள். இந்த அணுகுமுறை அவர்களை பொறுப்பேற்க வைக்கும். அவர்களின் பிரச்னைகளை தீர்க்க உதவும். ஒருவித முதிர்ச்சி மற்றும் சரியான முறைகளை அவர்களுக்கு கற்றுத்தரும்.
அவர்களின் உணர்வுகளை கையாள கற்றுக்கொடுங்கள்
வளரிளம் பருவத்தில் ஆழ்ந்த உணர்வுகள் குழந்தைகளுக்கு ஏற்படும். அவற்றை அவர்களால் எளிதாக கையாள போதிய நுட்பங்கள் அவர்களுக்கு தெரியாமல் இருக்கும். ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, இடைவெளி எடுத்துக்கொள்வது, வாக்குவாதத்துக்கு முன் அமைதியை கடைபிடித்து பிரச்னையை உள்வாங்குவது போன்ற நுட்பங்களை அவர்கள் பின்பற்ற அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
நீங்கள் ஏற்காத நேரத்தில் சுயகட்டுப்பாடு எந்தளவுக்கு உதவும் என்பதை எடுத்துக்கூறுங்கள். இவையெல்லாம் அவர்களுக்கு சவாலான நேரங்களில் உணர்வுகளை கையாள கற்றுக்கொடுக்கும்.
அவர்களை அறிவுறுத்துவதை நீங்கள் கடைபிடியுங்கள்
வளர்ந்த ஒரு பெற்றோராக நீங்கள் வாக்குவாதங்களின்போது, உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் வாக்குவாதங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை உங்களை பார்த்து கற்கிறார்கள். எனவே நீங்கள் சிறந்த உரையாடல் மற்றும் வாக்குவாதத்தை செய்ய வேண்டியது அவசியம்.
நன்றாக கவனிப்பதும், சமரசம் செய்ய தயாராயிருப்பதும் உங்கள் உரையாடலில் இருக்க வேண்டும். அது நீங்கள் அவர்களுடன் செய்யும் உரையாடல் அல்லது மற்றவர்களுடன் செய்யும் உரையாடல் என இரண்டிலும் வெளிப்படவேண்டும். உங்கள் நடவடிக்கைகள் அவர்களை பாதிக்கிறது. எனவே கவனம் தேவை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்