தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Parenting Tips Are You A Parent Of A Shy Child? Is It So Good

Parenting Tips : கூச்ச சுபாவம் உள்ள குழந்தையின் பெற்றோரா? அப்படியிருப்பது இத்தனை நல்லதா?

Priyadarshini R HT Tamil
Mar 04, 2024 03:36 PM IST

Parenting Tips : கூச்ச சுபாவம் உள்ள குழந்தையின் பெற்றோரா? அப்படியிருப்பது இத்தனை நல்லதா?

Parenting Tips : கூச்ச சுபாவம் உள்ள குழந்தையின் பெற்றோரா? அப்படியிருப்பது இத்தனை நல்லதா?
Parenting Tips : கூச்ச சுபாவம் உள்ள குழந்தையின் பெற்றோரா? அப்படியிருப்பது இத்தனை நல்லதா?

ட்ரெண்டிங் செய்திகள்

புரிதல்

கூச்ச சுபாவம் உள்ள குழந்தையை வளர்ப்பதற்கு, மரியாதை, புரிதல் மற்றும் ஊக்கப்படுத்துவது என அனைத்தும் தேவை. இது அவர்களின் உள்ளார்ந்த உலகத்தில் மகிழ்ச்சியை கொண்டுவர உதவும். அவர்களை கம்ஃபோர்ட் சோனை விரிவுபடுத்த அது உதவும்.

ஆதரவு

அவர்கள் தனிமையை விரும்பினால் அவர்களுக்கு அதை கொடுக்க முயற்சி செய்யுங்கள். அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். அவர்களுக்கு பாதுகாப்பான, அமைதியான இடத்தை உருவாக்கிக் கொடுங்கள். அது அவர்களின் வளர்ச்சி, நலன் மற்றும் அவர்களை ரீசார்ஜ் செய்துகொள்ள மிகவும் அவசியம்.

நேரடி பேச்சு

சிறு குழுக்கள் அல்லது ஒருவருடன் நேரடியாக பேசும் வாய்ப்புகளை ஏற்படுத்திகொடுங்கள். இதனால் அவர்கள் சவுகர்யமாக உணர்வார்கள். அது கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் மற்றவர்களுடன் சேர்ந்த பழகுவதற்கு உதவும். அவர்களை பொதுவெளியில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதியுங்கள்.

பொறுமையாக கவனியுங்கள்

அவர்களின் சிந்தனைகள் மற்றும் உணர்வுகள் மீது நேர்மையான ஆர்வத்தை காட்டுங்கள். தொடர்ந்து கவனிப்பது, அவர்களின் அனுபவங்களை மதிக்கவைக்கிறது. மேலும் அவர்கள் ஒளிவுமறைவின்றி, வெளிப்படையாக பேசுவதற்கு ஊக்குவிக்கிறது.

அவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்துங்கள்

அவர்களின் ஆர்வங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் தனிமையில் இருந்தாலும் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். இது அவர்களின் திறன்கள் வளர்வதற்கு உதவும். அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் திறன்கள் வளரும்.

ஊக்கம்

பொதுவெளியில் அவர்கள் உரையாட வேண்டுமெனில் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்களை தானாக பேசுவதற்கு ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக புது இடங்களுக்கு பழக்கப்படுத்துங்கள். அவர்களுக்கு சமூக திறன்களை அவர்களின் வழியிலேயே வளரவிடுங்கள்.

நேர்மறை எண்ணங்கள்

கூச்ச சுபாவமுள்ள உங்கள் குழந்தைகளின் பலத்தை கொண்டாடுங்கள். அவர்களின் சிந்தனைகள் மற்றும் கிரியேட்விட்டி ஆகியவற்றை ஊக்கப்படுத்துங்கள். நேர்மறையான எண்ணங்கள் உங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவர்களின் கூச்ச சுபாவத்தையும் அவர்கள் மதிக்க வேண்டும் என்பதையும் முன்னிலைப்படுத்தும்.

எல்லைகளை மதியுங்கள்

அவர்களின் எல்லைகளை மதித்து புரிந்துகொள்ளுங்கள். அவர்களை அதிகமாக வெளியில் இழுப்பது அவர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும். எனவே அவர்களின் எல்லைகளை புரிந்துகொள்வது மிகவும் அவசியம். அவர்களின் சுமையை ஏற்றக்கூடாது.

உதாரணமாகுங்கள் 

உங்கள் குழந்தைகள் சமூகத்திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு உதாரணமாகுங்கள். கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் மற்றவர்களை பார்த்து கற்றுக்கொள்வதன் மூலமே கற்கிறார்கள். எனவே உங்களின் திறன்கள் அவர்களுக்கு சமூக திறன்களை கற்றுக்கொள்ள உதவும். 

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில், உரிய விளக்கங்களுடன் கொடுக்கப்படுகிறது.

இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்