Tamil News  /  Lifestyle  /  Parenting Tips Are You A Good Parent Check It Out Do You Have These Skills

Parenting Tips : நீங்கள் நல்ல பெற்றோரா? இதோ பரிசோதியுங்கள்! இந்த திறன்கள் உங்களிடம் உள்ளதா?

Priyadarshini R HT Tamil
Nov 20, 2023 04:30 PM IST

Parenting Tips : நீங்கள் நல்ல பெற்றோரா? உங்கள் பெற்றோரிய பயணம் முழுவதிலும் உங்களுக்கு இந்த கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

Parenting Tips : நீங்கள் நல்ல பெற்றோரா? இதோ பரிசோதியுங்கள்! இந்த திறன்கள் உங்களிடம் உள்ளதா?
Parenting Tips : நீங்கள் நல்ல பெற்றோரா? இதோ பரிசோதியுங்கள்! இந்த திறன்கள் உங்களிடம் உள்ளதா?

ட்ரெண்டிங் செய்திகள்

நன்றாக கவனிக்க வேண்டும்

உங்கள் குழந்தையின் அத்தனை விஷயங்களை நீங்கள் கேட்கிறீர்கள் மற்றும் புரிந்துகொள்கிறீர்கள் என்றால் நீங்கள் நல்ல பெற்றோர். நல்ல பெற்றோர் என்பதற்கான முக்கிய விஷயமே நீங்கள் அவர்களை நன்றாக கவனிக்கிறீர்கள் என்பதுதான்.

உரையாடலில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும்.

உங்கள் உரையாடலில் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் கொள்ளக்கூடாது. நீங்கள் உங்களின் அதிகாரங்களை உபயோகிப்பவராகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் குழந்தைகள் மீது அனுதாபம் கொள்பவராகவும் இருக்க வேண்டும். அவர்களின் விருப்பத்திற்கு அப்படியே செய்ய விடவும் கூடாது அல்லது அவர்கள் மீது எதையும் திணிக்கவும் கூடாது. இரண்டையும் நீங்கள் சமமாக எடுத்துச்செல்ல வேண்டும்.

அம்மா-அப்பா இருவரும் கட்டிப்பிடித்துக்கொள்வது

நாம் ஒருவரை கட்டிப்பிடிக்கும்போது, ஆக்ஸிடோசின் என்ற வேதிப்பொருளை உடல் வெளியிடுகிறது. இது மகிழ்ச்சி ஹார்மோன். இது இருவருக்கும் அந்த ஹார்மோனை சுரக்கச்செய்கிறது. இதனால், நீங்கள் ஒருவரை கட்டிப்பிடிக்கும்போது இருவருக்கும் அது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனால்தான் சில கலாச்சாரங்கள் கட்டிப்பிடிப்பதை ஒருவரையொருவர் சந்திக்கும்போது செய்கிறார்கள். ஒரு மோசமான நாளை ஒருமுறை கட்டிப்பிடிப்பதன் மூலம் சிறந்த நாளாக மாற்ற முடியும். இது உங்களை சிறந்த பெற்றோராக்குகிறது. மேலும் குழந்தைகளுக்கு உணர்வு ரீதியான உறுதுணையாகவும் இருக்கிறது.

கிரியேட்டிவிட்டி

நீங்கள் கிரியேட்விட்டியில் மன்னனாக இருக்க வேண்டும். ப்ரோகோலியின் ஒரு பெட்டலை பிரித்து மரமாக்குவது முதல் வீட்டை சுத்தம் செய்வது வரை ஒரு கிரியேட்டிவான வழிமுறையை நீங்கள் கையாள வேண்டும். அப்போதுதான் உங்கள் குழந்தைகளுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். கிரியேட்விட்டு உங்கள் வாழ்க்கையையே மகிழ்ச்சி நிறைந்ததாக்குகிறது. உங்கள் குழந்தையின் கற்பனை திறன்களை வளர்ப்பதற்கும் இது உதவுகிறது. ஒரு சாதாரண விஷயத்தை கூட சாகசம்போல் செய்வது வாழ்வில் கூடுதல் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

புன்னகை என்னும் மருந்து

சிறந்த பெற்றோராக இருப்பதற்கு சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். பெற்றோராக இருத்தல் என்பது வரம். உங்கள் குழந்தைகள் வீட்டையே புரட்டிப்போடும்போதும், நீங்கள் மகிழ்ச்சியுடன் புன்னகை பூக்க வேண்டும். புன்னகையுடன் நீங்கள் எதையும் கடந்து செல்லும்போது உங்களுக்கு எந்த பிரச்னைகளும் ஏற்படுவதில்லை. வரும் அனைத்தையும் எளிதாக கடந்துவிடுவீர்கள்.

உணவு

உணவு, உடலுக்கு எவ்வளவு அவசியம் என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். உடலை வளர்ப்பதில் உணவின் பங்கு என்பதை அவர்கள் தெரிந்துகொண்டால்தான் அவர்கள் எந்த உணவையும் விலக்காமல் சாப்பிடுவார்கள். இந்த உணவு நமக்கு கிடைக்கும் முன் அதன் பின் எத்தனை உழைப்பு மறைந்துள்ளது என்பதையும் நீங்கள் அவர்களுக்கு விளக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் எந்த உணவையும் வீணாக்கமாட்டார்கள். உணவு குறித்த அறிவு அவர்களுக்கு கட்டாயம் வேண்டும்.

பாதுகாப்பான பெற்றோர்

உங்கள் குழந்தைகளுக்கு பிரச்னைகளை தீர்க்கக்கூடிய திறன்களை கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பிரச்னைகளை கண்டு ஓட மாட்டார்கள். இந்த கால பெற்றோருக்கு பெரும் சவாலான விஷயமாக உள்ளது திரை நேரம். எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் திரை நேரம், படிப்பு, தூக்கம், விளையாட்டு என அனைத்து குறித்தும், அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பேசவேண்டும். அப்போதுதான் குழந்தைகளும் அவற்றை புரிந்துகொண்டு எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று புரிந்துகொள்வார்கள். பாதுகாப்பான பெற்றோராக இருப்பது மிகவும் அவசியம்.

உணர்வு ரீதியாக அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்

உங்கள் குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் பெற்றோராக நீங்கள் இருக்க வேண்டியது அவசியம். குழந்தையின் உணர்வுகள் என்ன என்பதை புரிந்துகொள்ளும் பெற்றோராக இருப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஏன் அந்த நிலை ஏற்பட்டது என்பதை புரிந்துகொள்பவர்களாகவும் இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு உணர்வுகளை கையாள கற்றுக்கொடுக்க வேண்டும்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்