தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Parenting Tips Are You A Demanding Parent See How It Affects Your Children

Parenting Tips : விவகாரத்து கோரும் பெற்றோரா? உங்கள் குழந்தைகளின் மனநிலையை அது எப்படி பாதிக்கிறது பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Mar 10, 2024 02:06 PM IST

Parenting Tips : மேலும் பெற்றோர் இருவருக்குமே குழந்தைகள் விருப்பமானவர்கள்தான். ஆனால் சூழல்தான் அதை மாற்றிவிட்டது என்பதை குழந்தைகளும் உணர வேண்டும்.

Parenting Tips : விவகாரத்து கோரும் பெற்றோரா? உங்கள் குழந்தைகளின் மனநிலையை அது எப்படி பாதிக்கிறது பாருங்கள்!
Parenting Tips : விவகாரத்து கோரும் பெற்றோரா? உங்கள் குழந்தைகளின் மனநிலையை அது எப்படி பாதிக்கிறது பாருங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

குழந்தைகளுக்கு அவர்கள் தங்கள் பெற்றோருடன் கொண்டுள்ள பிணைப்பு, அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு மற்றும் பாதுகாப்பை கொடுப்பதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் பிரிந்தால், விவாகரத்து பெற்று பிரிவதல்ல, உணர்வு ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துவதும் பிரிதலே. குழந்தையின் பார்வையில் பெற்றோர் இருவருமே முக்கியம். 

விவாகரத்து பெற்று பிரிவது அல்லது பிரிதல் என்பது அவர்களிடம் குழப்பம், குற்றவுணர்வு மற்றும் தனிமையை ஏற்படுத்துகிறது. இழப்பு மற்றும் துக்க உணர்வும் ஆழமாக ஏற்படும். குழந்தையின் வயதுக்கு ஏற்ப அவர்களுக்கு பெற்றோரின் பிரிவு பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.

பெற்றோர் மனமொத்து பிரியும் சூழலில், அது குழந்தைகளுக்கு உணர்வு ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தப்போகிறது என்பதை உணர்ந்து, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, விவகாரத்தின் போது அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

விவகாரத்து ஏற்படும் சமயங்களில் தங்கள் குழந்தைகளை பெற்றோர் எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு குழந்தையின் வலி மற்றும் மனவருத்தும் இரண்டுக்கும் இடம் கொடுக்க வேண்டும். இது வலியும், துக்கமும் நிறைந்த தருணம். எனவே குழந்தைகளை அவர்களின் வழியில் அதை கடக்க அனுமதிக்க வேண்டும். 

சோகம், கோவம், குழப்பம், வலி என அவர்களின் உணர்வுகள் பல்வேறு வகைகளில் வெளிப்படும். அதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும்.

இந்த விவாகரத்து அவர்களுக்கு எப்படி ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை கவனியுங்கள். அவர்கள் அதை உங்களுக்கு விளக்கிக் கூறாமலே புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். 

அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு இடம் வேண்டும். அவர்களின் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். ஒருமுறை பேசுவதோடு மட்டுமின்றி, அடிக்கடி அது மனம் நிறைந்த உரையாடலாக இருக்கலாம். அதற்கும் இடம்கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு அது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை தெரிந்துகொள்வது பெற்றோருக்கும் கடினமானதுதான். ஏனெனில், அது அவர்களுக்கு குற்றவுணர்வு அல்லது பொறுப்புணர்வு அல்லது அவர்கள் குழந்தையை பாதுகாக்க முடியாமல் போனது குறித்த அவர்களும் வருந்துவார்கள். 

இது நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதையும் பாதிக்கும். எனவே பெற்றோரும் அவர்களுக்கு தேவையான உணர்வு ரீதியான இடத்தை பெற்றுக்கொள்வது நல்லது. இதன்மூலம் அவர்கள் அவர்களின் குழந்தைகளுக்கும் உதவ முடியும்.

அவர்கள் அவர்களின் குழந்தைகளிடம், இந்த விவாகரத்து குறித்து தாங்களும் ஒன்றும் செய்ய முடியாது மற்றும் அதற்கு குழந்தைகளும் காரணமல்ல என்பதை புரிய வைக்க வேண்டும்.

மேலும் பெற்றோர் இருவருக்குமே குழந்தைகள் விருப்பமானவர்கள்தான். ஆனால் சூழல்தான் அதை மாற்றிவிட்டது என்பதை குழந்தைகளும் உணர வேண்டும். 

குழந்தைகள் மீது அவர்களின் அன்பு, பாசம், அக்கறை ஒருபோதும் குறையாது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அது நிலையான ஒன்று என்றும், எப்போதும் குழந்தைகளுக்காக இரண்டுபேரும் இருப்பார்கள் என்பதையும் குழந்தைகளுக்கு அவர்கள் உணர்த்த வேண்டும்.

இந்த விவகாரத்து ஏன், இதனால் ஏற்பட்ட பிரச்னைகள் என்ன என்பது குறித்து அவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. அது குழந்தையின் கவலையம் இல்லை. மேலும் குழந்தைக்கு உங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இது முழுக்க முழுக்க உங்கள் முடிவு. இதை நீங்களே எடுத்துக்கொள்ள வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குக ள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்