Parenting Tips : குழந்தைகள் திரையிலே மூழ்கிக்கிடக்கிறார்களா? அவர்களை விளையாட அழைத்துச் செல்வது எப்படி?
Parenting Tips : இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு திரைநேரம் என்பது அதிகம் கிடைக்கிறது. அவர்கள் லாப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்ஃபோன், ப்ளே ஸ்டேசன், கம்ப்யூட்டர் என அவர்கள் பயன்படுத்தும் கேட்ஜெட்களும் அதிகம். அவர்கள் காணும் திரை நேரமும் அதிகம் உள்ளது.
சில நேரங்களில் அவர்கள் ஒன்றிரண்டல்ல எண்ணற்ற திரையை காண்கிறார்கள். யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் என தளங்களையும் பார்க்கிறார்கள். அவர்கள் வீட்டுப்பாடங்களை செய்வதற்கும். பொழுதுபோக்குவதற்கும், சமூகத்துடன் தொடர்புகொள்வதற்கும், ரிலாக்ஸ் ஆவதற்கும் என அதன் தேவைகளும் உள்ளது.
அதிக திரைநேரம் மற்றும் தரம் குறைவான நிகழ்ச்சிகளை பார்ப்பதால், உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் உறக்கம் பாதிக்கப்படுகிறது. உறங்கும் நேரமும் மாறுகிறது. போதிய உறக்கமின்மை மற்றும் சமூகத்துடன் தொடர்புகொள்ளாமல் இருப்பதால், குழந்தைகள் பேசுவது தாமதமாகிறது. சமூகத்திறன்களும் வளர்வதில் தாமதம் ஏற்படுகிறது. வன்முறை, கவனமின்மை மற்றும் கற்றலில் குறைபாடு ஆகியவை ஏற்படுக்கிறது.
குழந்தைகளின் திரை நேரத்தை கண்காணிப்பது மிகவும் கடினமானது. ஏனெனில் நம்மைச்சுற்றி எல்லா இடங்களிலும் திரை உள்ளது. திரை நேரங்கள் குழந்தைகளின் சமூகத்திறன்களை வளர்க்க உதவினாலும், அது குறைவான அளவுதான். எனினும் உங்கள் குழந்தைகளின் திரை நேரம் மற்றும் விளையாட்டு நேரத்தை சரிப்படுத்துவது எப்படி?
தொழில்நுட்பம் இல்லாத இடங்கள்
படுக்கை அறை மற்றும் சாப்பிடும் அறை என வீட்டின் சில அறைகளில் டெக்னாலாஜி இல்லாத இடங்களை உருவாக்குங்கள். எல்லைகளை வகுப்பதுடன், இதுபோல் செய்வதால், உங்கள் வீட்டில் சில நடவடிக்கைகளின்போது உங்கள் குழந்தைகள் வேறு எதன் தலையீடும் இல்லாமல் நிம்மதியாக உறங்கவும், சாப்பிடவும் முடியும்.
நேர்மையான கலந்துரையாடல்
உங்கள் குழந்தைகளுடன் நேர்மையான மற்றும் அவர்களை விமர்சிக்காத உரையாடலை ஊக்கப்படுத்துங்கள். குறிப்பாக அவர்களின் திரைநேரம் குறித்து அவர்களிடம் பேசும்போது, அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுங்கள். இணையதளத்தை பயன்படுத்துவதால் ஏற்படும், நன்மைகள் மற்றும் தீமைகளை அவர்களுக்கு விளக்குங்கள். அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
உடற்பயிற்சிகள்
உங்கள் குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துங்கள். இது அவர்களை திரையில் இருந்து மாற்றும். எனவே ஒரு விளையாட்டோ அல்லது உடற்பயிற்சியோ செய்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்தினால், அவர்கள் மகிழ்வதுடன் அவர்களுக்கு மாற்றமும் கிடைக்கும்.
அவர்கள் பார்க்கும் விஷயங்களை கண்காணியுங்கள்
உங்கள் குழந்தைகள் ஆன்லைனில் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணயுங்கள். அவர்களின் வயதுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களை அவர்கள் பார்க்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஃபில்ட்ர்கள் பெற்றோர் கன்ட்ரோல் டூல்களை பயன்படுத்துங்கள். அவர்கள் பயன்படுத்தும் ஆப்களை பாருங்கள்.
அவர்கள் பார்க்கும் வலைதளங்களை பாருங்கள். அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பதை கவனியுங்கள். அவர்களுக்கு தேவையில்லாத விஷயங்களை அவர்கள் பார்ப்பதில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமை. இது அவர்களின் மனநலனுக்கும், பாதுகாப்புக்கும் நல்லது.
நிபுணர்களின் உதவி
நிபுணர்களின் உதவி என்பது மிகவும் அவசியமான ஒன்று. உங்கள் குழந்தையிடம் நீங்கள் ஏதேனும் குறிப்பிடும்படியான மாற்றத்தை பார்த்தீர்கள் என்றால், நிபுணர்களிடம் செல்லுங்கள்.
அவர்கள் உங்கள் குழந்தைகளுக்கு போதிய சிகிச்சையை வழங்குவார்கள். சான்றிதழ்பெற்ற, சிகிச்சையாளர் அல்லது கவுன்சிலிங் தருபவர் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள். அது அவர்களின் மனநலனுக்கு சிறந்தது.
டிஜிட்டல் கல்வி
உங்கள் குழந்தைகள் கட்டாயம் திரையை பார்க்காமல் இருக்கவே முடியாது, எனவே உங்கள் குழந்தைகளுக்கு உகந்ததை அவர்களுக்கு பேசி புரியவைத்து, அதை மட்டும் அவர்கள் பார்ப்பதற்கு அனுமதியுங்கள். அவர்கள் ஆன்லைனில் பார்க்கும் அனைத்தையும் அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று கேட்டு தெரிந்துகொண்டு, அவர்களுக்கு உண்மை எது பொய் எது என்று அறிவுறுத்துங்கள்.
தேவையான நடத்தை கற்றுக்கொடுப்பது
சமூக வலைதளம் அல்லது ஆன்லைன் உறவுகள்தான் வளரிளம் பருவத்தினர் மத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அவர்கள் ஆன்லைனில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு தெரிந்திருப்பது மிகவும் அவசியம்.
எனவே உங்கள் டீன்ஏஜ் குழந்தைகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நிபுணர்களின் அறிவுரையைப் பெற்று அதன்படி அவர்கள் நடக்க வலியுறுத்துங்கள். ஆன்லைனில் தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்கக்கூடாது மற்றும் செக்ஸ் சாட்டிங் செய்யக்கூடாது மற்றும் இணையத்தில் மிரட்டல் ஆகியவை குறித்தும் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
அமைதியாக நேரம் செலவிடுங்கள்
அதிக நேரம் திரையை பார்ப்பது உங்கள் மூளையை எப்போதும் ஆக்டிவாகவே வைத்திருக்கும். எனவே அவர்களை வெளியில் சிறிது நேரம் செலவிட வையுங்கள். அப்போதுதான் அவர்களின் ஐம்புலன்களும் இயற்கையை அனுபவிக்கவேண்டும். இயற்கையுடன் நேரம் செலவிட கற்றுக்கொடுங்கள். இயற்கையில் உங்கள் குழந்தைகள் தினமும் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
இப்போது குழந்தைகளின் திரை நேரத்துக்கும், குழந்தைகளின் மன ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உள்ளது. திரையை பார்ப்பதால் கல்வி, சமூக தொடர்பு போன்ற நன்மைகளும் இருந்தாலும், அது அதிகமாகும்போது அது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.
எனவே திரை நேரம் மற்றும் வெளி விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சி என அனைத்துக்கும் போதிய நேரத்தை ஒதுக்குவதை உறுதிப்படுத்துங்கள். எனவே பெற்றோர் இதை குழந்தைகள் கடைபிடிப்பதை உறுதிப்படுத்தினால், அது அவர்களுக்கு நன்மை தரும்.
டாபிக்ஸ்