Parenting Tips: அடிக்கடி கோபப்படும் குழந்தைகளுக்கு என்ன பிரச்னை இருக்கிறது? அவர்களைப் பெற்றோர் கையாள்வது எப்படி?
Parenting Tips: அடிக்கடி கோபப்படும் குழந்தைகளுக்கு என்ன பிரச்னை இருக்கிறது? அவர்களைப் பெற்றோர் கையாள்வது எப்படி என்பது முதல் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களை ஊக்குவிப்பது வரை, குழந்தைகளை வளர்ப்பது பற்றி பெற்றோருக்கு சில உதவிக்குறிப்புகள்..

Parenting Tips: பெரும்பாலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகள் உள்ளன என்பதை மறந்துவிடுகிறோம். குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை எவ்வாறு மதிப்பது மற்றும் மற்றவர்களின் விருப்பு வெறுப்புகளை எவ்வாறு மதிக்கக் கற்றுக்கொடுப்பது என்பது பற்றி, எடுத்துச் சொல்வதே நல்ல பெற்றோருக்குரிய திறனாகும்.
பெரும்பாலும் குழந்தைகள் தங்களுக்குப் பிடிக்கவில்லை எனச் சொல்வதும், கோபமாக மாறுவதும் தங்களின் எல்லைகளை மீற வேண்டாம் என்று சொல்லும் ஒரு வழியாகும்.
கோபப்படும் குழந்தைகள் சொல்ல வருவது என்ன?
இதுதொடர்பாக உளவியலாளர் ஜாஸ்மின் மெக்காய் எழுதியிருப்பதாவது, "குழந்தைகள் பெற்றோருடன் ஆக்ரோஷமாக இருக்கும்போது, நாங்கள் அவர்களின் விருப்பு வெறுப்புகளை மீறுகிறோம் என்பதைத் தெரியப்படுத்த முயற்சிக்கிறார்கள். தங்களது சுயவிருப்பத்தை நிறைவேற்ற முடியாதபோது, குழந்தைகள் ஒரு அச்சுறுத்தலை உணர்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பை மறுபடியும் பெற முயற்சி செய்துகொண்டே இருக்காங்க.