Papaya Leaf Benefits : பாப்பாளி இலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் இதோ.. டெங்கு முதல் சர்க்கரை நோய் வரை தீர்வு!
Papaya Leaf Benefits: பப்பாளி இலையில் நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நார்ச்சத்து நிறைந்த பப்பாளி இலைச்சாறு குடிப்பதால் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, செரிமானத்தை பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

Papaya Leaf Benefits: பப்பாளி பழம் நம் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இதில் உள்ள இயற்கையான மலமிளக்கிகள் மலச்சிக்கலை போக்க உதவுகிறது. பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது குடல் இயக்கத்தை மேம்படுத்தி, வயிற்று உப்புசத்தைத் தடுக்கிறது. இந்த பழத்தின் சிறப்பு என்னவென்றால், பழங்கள் மட்டுமல்ல, இலைகளிலும் மந்திர ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
பப்பாளி இலையில் உள்ள சத்துக்கள்
பப்பாளி இலைகள் ஆயுர்வேதத்தில் மருந்தாகக் கருதப்படுகிறது. பப்பாளி இலையில் நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நார்ச்சத்து நிறைந்த பப்பாளி இலைச்சாறு குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, செரிமானத்தை பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதுமட்டுமின்றி டெங்கு காய்ச்சலால் நோயாளிகளின் ரத்த தட்டுக்கள் அடிக்கடி குறைந்துவிடும். இது போன்ற நேரங்களில் பப்பாளி இலை சாறு குடிப்பதால் நோயாளியின் இரத்த தட்டுக்கள் விரைவில் குணமடையும். இதனால் டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு பல நேரங்களில் மருத்துவர்களும் பப்பாளி ஜூஸ் குடிக்க பரிந்துரைக்கின்றனர்.
பப்பாளி இலைகள் வைட்டமின் சி போன்ற சத்துக்களுடன் கூடிய நோயெதிர்ப்பு சக்தியையும் கொண்டுள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. பப்பாளி இலைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளிட்ட பல வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.அவை வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஆரோக்கிய நிபுணர் வருண் கத்யால் கூறுகிறார்.