பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் பளபளக்கும் பன்னீர் மஞ்சூரியன்! எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
பன்னீர் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்?
பன்னீரில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். பன்னீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், ரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. இது பக்கவாதம் வராமல் தடுக்கிறது. இது தசைகளில் வலி ஏற்படாமல் தடுக்கிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு உகந்தது. மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் அடிக்கடி வலியால் பாதிக்கப்படுவார்கள். பன்னீரை தினமும் எடுத்துக்கொண்டால், அது வலிகளை குறைக்கிறது. இதில் உள்ள அதிகளவிலான கால்சியம், எலும்புகளை காக்கிறது. இதில் அதிகளவில் சிங்க் உள்ளது. அது ஆண்களின் ஸ்பெர்ம் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பன்னீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல்வேறு நன்மைகளுக்காக எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அனைவரும் விரும்பும் ஒன்றாகவும் இந்த பன்னீர் பட்டர் மசாலா இருக்கும். அதை எளிமையாக குக்கரில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பன்னீரை பொரிக்க தேவையான பொருட்கள்
பன்னீர் - 400 கிராம்
மைதா – 2 ஸ்பூன்
சோள மாவு – 4 ஸ்பூன்
உப்பு – அரை ஸ்பூன்
மிளகு தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு
பன்னீர் மஞ்சூரியன் செய்ய
எண்ணெய் – 3 ஸ்பூன்
பூண்டு – ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சி – ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 நறுக்கியது
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மிளகு தூள் – அரை ஸ்பூன்
தக்காளி கெட்சப் – அரை கப்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
சோளமாவு கலவை – அரை கப்
வெங்காயத்தாள் வெங்காயம்
வெங்காயத்தாள் கீரை
செய்முறை
முதலில் பன்னீரை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் ஆகியவற்றுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்து நறுக்கிய பன்னீரை சேர்த்து மீண்டும் கலக்கவேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் மசாலாவில் கலந்த பன்னீரை சேர்த்து பொரிக்கவேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய இஞ்சி-பூண்டு சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவேண்டும்.
பின்னர் மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து தக்காளி கெட்சப், சோயா சாஸ் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கலந்துவிடவேண்டும். பின்னர் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
பின்னர் சோளமாவு கலவையை சேர்த்து கலந்து விடவேண்டும்.
பொரித்த பன்னீரை சேர்த்து கலந்துவிட்டு, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து மீண்டும் கலந்து விடவேண்டும்.
சுவையான பன்னீர் மஞ்சூரியன் தயார். இதை ஃப்ரைட் ரைஸ், சப்பாத்தி, குல்சா, ரொட்டி, நான் போன்ற அனைத்துடனும் சேர்த்து பரிமாறலாம். சுவை அள்ளும்.
இது ஒரு இந்திய – சீன உணவு. வித்யாசமான சுவையில் அள்ளும். ஒரு சிறு வீட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கெட்டுகெதர் ஃபங்ஷன்களுக்கு இதை அதிகம் விரும்புவார்கள். அவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதற்கு ஏற்றது.
பன்னீர், சைவம் மற்றும் அசைவம் இரண்டு உணவு உண்பவர்களுக்கும் பிடித்த உணவு. குறிப்பாக இந்த பன்னீர் மஞ்சூரியனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எனவே இதை ஃபிரஷ்ஷான பன்னீர் சேர்த்து இந்த ரெசிபியை சேர்த்து சுவைத்து பாருங்கள். நீங்கள் இதை மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டாட்டராக சாப்பிட்டு மகிழலாம் அல்லது மதிய உணவு, இரவு உணவுக்கும் ஏற்றது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்