தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paneer Gravy : பன்னீர் பிடிக்காதவர்களே இருக்க முடியாது! அனைவரும் விரும்பும் அதில் கிரேவி செய்வது எப்படி?

Paneer Gravy : பன்னீர் பிடிக்காதவர்களே இருக்க முடியாது! அனைவரும் விரும்பும் அதில் கிரேவி செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Jul 01, 2024 04:24 PM IST

Paneer Gravy : பன்னீர் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அனைவரும் விரும்பும் அதில் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Paneer Gravy : பன்னீர் பிடிக்காதவர்களே இருக்க முடியாது! அனைவரும் விரும்பும் அதில் கிரேவி செய்வது எப்படி?
Paneer Gravy : பன்னீர் பிடிக்காதவர்களே இருக்க முடியாது! அனைவரும் விரும்பும் அதில் கிரேவி செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (அரைத்த விழுது)

பூண்டு பற்கள் – 8

இஞ்சி – ஒரு ஸ்பூன்

முந்திரிப்பருப்பு – 8

பட்டை – ஒரு இன்ச்

கிராம்பு – 4

ஏலக்காய் – 1

பிரியாணி இலை – 1

கஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்

மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

வறுத்து பொடித்த சீரகத் தூள் – கால் ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்

பால் – அரை கப்

உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

கடாயை சூடாக்கி அதில் உலர்ந்த வெந்தயக்கீரையை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும். பின் கைகளால் லேசாக பொடித்துக் கொள்ளவேண்டும்.

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்து இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவேண்டும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வதக்கவேண்டும். 

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி, பின் முந்திரி சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைத்து விடவேண்டும். பின்னர் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைக்கவேண்டும்.

கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும் பிரியாணி இலை சேர்த்தும் கஷ்மீரி மிளகாய்த்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள் மற்றும் வறுத்து பொடித்த சீரகப் பொடி எல்லாவற்றையும் சேர்த்து கருகிடாமல் வறுக்கவேண்டும். பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவேண்டும்.

சில நிமிடங்கள் குறைந்த சூட்டில் வதக்கி அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவேண்டும். பின் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து மூடி வைத்து எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க விடவேண்டும்.

பின் காய்ச்சி ஆறவைத்த பால், பொடித்து வைத்துள்ள வெந்தயக்கீரை இலைகள் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை கிரேவியில் கலந்து 2 நிமிடங்கள் லேசாக கொதித்ததும் இறக்கவேண்டும்.

பன்னீரில் உள்ள சத்துக்கள்

100 கிராம் பன்னீரில் 20 கிராம் கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ளது. இறைச்சிக்கு இணையான புரதச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.

புற்றுநோய் இன்றைய காலத்தில் அதிகளவில் ஏற்படுகிறது. பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு மத்தியில் சராசரியாக ஆண்டுக்கு 10 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மெனோபாஸ்க்கு முந்தைய நிலையில் இந்த புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பன்னீரில் அதிகளவில் வைட்டமின் டி சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளது. இவையிரண்டும் மார்பக புற்றுநோயை தடுக்கக்கூடியவை. பன்னீரில் உள்ள சிஃபிங்கோலிபிட்ஸ் மற்றும் அதிகளவிலான புரதம் குடல், புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றை முதல் நிலையிலே எதிர்த்து போராட உதவுகிறது.

பன்னீரின் நன்மைகள்

பற்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

உடல் எடை குறைக்க உதவுகிறது

செரிமான மண்டலத்தின் வழக்கமான இயக்கத்துக்கு உதவுகிறது

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது

பன்னீர் நோயிலிருந்து காப்பாற்றுகிறது

மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் அடிக்கடி வலியால் பாதிக்கப்படுவார்கள். பன்னீரை தினமும் எடுத்துக்கொண்டால், அது வலிகளை குறைக்கிறது. இதில் உள்ள அதிகளவிலான கால்சியம், எலும்புகளை காக்கிறது. இதில் அதிகளவில் சிங்க் உள்ளது. அது ஆண்களின் ஸ்பெர்ம் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

நன்றி – முத்துலட்சுமி மாதவக்கிருஷ்ணன்.

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.