தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paneer Dosai : மொறு மொறு பன்னீர் தோசை சாப்பிட ஆசையா? இதோ இப்படி செஞ்சு பாருங்க! சுவையாக இருக்கும்!

Paneer Dosai : மொறு மொறு பன்னீர் தோசை சாப்பிட ஆசையா? இதோ இப்படி செஞ்சு பாருங்க! சுவையாக இருக்கும்!

Priyadarshini R HT Tamil
May 31, 2024 01:54 PM IST

Paneer Dosai : மொறு மொறு பன்னீர் தோசை சாப்பிட ஆசையா? இதோ இப்படி செஞ்சு பாருங்க

Paneer Dosai : மொறு மொறு பன்னீர் தோசை சாப்பிட ஆசையா? இதோ இப்படி செஞ்சு பாருங்க!
Paneer Dosai : மொறு மொறு பன்னீர் தோசை சாப்பிட ஆசையா? இதோ இப்படி செஞ்சு பாருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

வெங்காயம் – 1 நறுக்கியது

பூண்டு – 10 பல் நறுக்கியது

பச்சை மிளகாய் – 2 நறுக்கியது

தக்காளி -1 நறுக்கியது

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – ஒரு ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு ஸ்பூன்

பன்னீர் – 200 கிராம்

கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு நறுக்கியது

தோசை மாவு – தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

பீட்சா சீஸ் – தேவையான அளவு

பன்னீர் ஃபில்லிங் செய்து வைத்துக்கொள்ளும்.

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடங்கள் நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். பின்னர், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவேண்டும். துருவிய பன்னீர், நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவேண்டும்.

அடுத்து தோசை கல்லில் மாவை தோசையாக பரப்பவேண்டும். பின்னர், சுற்றிலும் நெய் ஊற்றி வேகவிடவேண்டும். ஒரு பக்கம் வெந்ததும், அடுத்த பக்கம் திருப்பி போடவேண்டும்.

தோசை இருபக்கமும் வெந்ததும், தோசையை திருப்பி போட்டு, அதின் மேல் சீஸை துருவிவிடவேண்டும். பின்னர் பன்னீர் மசாலாவை அதன் மேல் பரப்பிவிடவேண்டும். அதன் மேல் சீஸை துருவிவிடவேண்டும். பின்னர் மடித்து விட்டு சீஸ் உருகியதும் எடுத்து பரிமாறவேண்டும். பன்னீர் தோசை தயார்.

பன்னீரின் நன்மைகள்

100 கிராம் பன்னீரில் 20 கிராம் கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ளது. இறைச்சிக்கு இணையான புரதச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.

புற்றுநோய் இன்றைய காலத்தில் அதிகளவில் ஏற்படுகிறது. பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு மத்தியில் சராசரியாக 10 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெனோபாஸ்க்கு முந்தைய நிலையில் இந்த புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பன்னீரில் அதிகளவில் வைட்டமின் டி சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளது. இவையிரண்டும் மார்பக புற்றுநோயை தடுக்கக்கூடியவை. பன்னீரில் உள்ள சிஃபிங்கோலிபிட்ஸ் மற்றும் அதிகளவிலான புரதம் குடல் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றை முதல் நிலையிலே எதிர்த்து போராட உதவுகிறது.

பற்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது.

செரிமான மண்டலத்தின் வழக்கமான இயக்கத்துக்கு உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது.

பன்னீர் நோயிலிருந்து காப்பாற்றுகிறது.

பன்னீர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளுள் ஒன்று.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்