தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Palakeerai Pakoda Palakeerai Pakoda Yummy And Healthy Evening Snacks

Palakeerai Pakoda : பாலைக்கீரை பக்கோடா! யம்மி அண்ட் ஹெல்தியான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!

Priyadarshini R HT Tamil
Mar 05, 2024 12:30 PM IST

Palakeerai Pakoda : பாலைக்கீரை பக்கோடா! யம்மி அண்ட் ஹெல்தியான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!

Palakeerai Pakoda : பாலைக்கீரை பக்கோடா! யம்மி அண்ட் ஹெல்தியான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!
Palakeerai Pakoda : பாலைக்கீரை பக்கோடா! யம்மி அண்ட் ஹெல்தியான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

பொதுவாக கீரைகளை அப்படியே சாப்பிடுவது பெரும்பாலானோருக்கு பிடிக்காது. குறிப்பா குழந்தைகளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அவர்களுக்கு அதில் சுவையான ஏதாவது ஒன்றை செய்துகொடுக்கும்போதுதான் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். 

இந்த பாலக்கீரை பக்கோடா ஒரு சிறப்பான மாலை நேர சிற்றுண்டியாகும். இதை வேறு கீரைகள் வைத்தும் முயற்சி செய்யலாம். ஆனால் பாலக்கீரையில் செய்யும்போது சுவை கூடுதலாக இருக்கும். 

பாலக்கீரை பக்கோடா

தேவையான பொருட்கள்

பாலக்கீலை – ஒரு கட்டு

சுத்தம் செய்து நறுக்கியது.

வெங்காயம் – 2 (நீளமாக நறுக்கியது)

இஞ்சி – ஒரு துண்டு (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

ஓமம் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

அரிசி மாவு – கால் கப்

கடலை மாவு – ஒரு கப்

சூடான எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை

முதலில் பொடியாக நறுக்கிய பாலக்கீரை, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், ஓமம், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்து விடவேண்டும்.

பின்னர் உப்பு, காரம் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் எண்ணெயை காய்ச்சி ஊற்றி கரண்டியால் கலக்கிவிட வேண்டும். சிறிது ஆறியவுடன், தண்ணீர் சேர்த்து நன்றாக பக்கோடா மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெயை காயவைத்து, இதை சிறிது, சிறிதாக கிள்ளி போட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை ஈசியா செய்துவிடலாம். கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோல் சாப்பிட வைக்கலாம். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில், சட்னி மற்றும் கெட்சப் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

பாலக்கீரையின் நன்மைகள்

பாலக்கீரையில் இரும்பு, கால்சியம், மெக்னீசியச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது புற்றுநோயை தடுக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உடல் எடை குறைப்பில் உதவுகிறது. கண்களுக்கு நல்லது. ரத்தத்தை அழுத்தத்தை குறைக்கிறது. அழற்சிக்கு எதிரான குணங்கள்.

உங்கள் உடலை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும். உங்கள் மூளை வழக்கமாக செயல்பட உதவுகிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. மாரடைப்பு நோயை தடுக்கிறது. அனீமியாவை தடுக்கிறது. சருமத்தை பளபளபாக்குகிறது. முகப்பருக்களை தடுக்கிறது. வயோதிக்கத்தை தடுக்கும் உட்பொருள்கள் கொண்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்