Palak Keerai Fried Rice : குழந்தைகள் விரும்பும் பாலக்கீரை ஃப்ரைட் ரைஸ்! – சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Palak Keerai Fried Rice : குழந்தைகள் விரும்பும் பாலக்கீரை ஃப்ரைட் ரைஸ்! – சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது!

Palak Keerai Fried Rice : குழந்தைகள் விரும்பும் பாலக்கீரை ஃப்ரைட் ரைஸ்! – சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது!

Priyadarshini R HT Tamil
Sep 08, 2023 09:00 AM IST

Palak Keerai Fried Rice : பாலக்கீரையில் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. நாம் அதை தினமும் உட்கொள்வது அவசியம். இத்தனை சத்துக்கள் நிறைந்த கீரையை பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடமாட்டார்கள். குறிப்பாக குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.

குழந்தைகள் விரும்பும் பாலக்கீரை ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?
குழந்தைகள் விரும்பும் பாலக்கீரை ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?

பாலக்கீரை – சிறிதளவு

பூண்டு - 6 பற்கள்

இஞ்சி - 1 துண்டு நறுக்கியது

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

முழு கரம் மசாலா – பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை

சீரகம் - 1/2 ஸ்பூன்

வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது

பச்சை மிளகாய் - 4 பொடியாக நறுக்கியது

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

கஷ்மீரி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்

தண்ணீர்

செய்முறை -

பாஸ்மதி அரிசியை தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.

அதனுடன் ஊறவைத்த அரிசி மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்.

அரிசியை முழுமையாக சமைத்து, வடிகட்டி, தனியாக ஆறவைத்துக்கொள்ள வேண்டும்.

பாலக்கீரை இலைகளை கழுவி நறுக்க வேண்டும். அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் பூண்டு பற்கள், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

ஒரு அகன்ற கடாயை சூடாக்கி அதில் எண்ணெய், நெய் சேர்க்க வேண்டும்.

பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து அரை நிமிடம் வதக்க வேண்டும்.

கீறிய பச்சை மிளகாயை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

கடாயில், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்.

பாலக்கீரை விழுது சேர்த்து 10 நிமிடங்கள் பச்சை வாசம் போகும் வரை நன்றாக சமைக்க வேண்டும்.

10 நிமிடம் கழித்து கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

பாலக் மசாலாவுடன் வேக வைத்து ஆறவைத்துள்ள சாதத்தை சேர்த்து மெதுவாக கிளறவேண்டும். வறுத்த முந்திரி கொண்டு அலங்கரித்துக்கொள்ளலாம்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான பாலக்கீரை சாதம் சூடாக பரிமாற தயாராகிடும்.

இதை குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்களுக்கும் பேக் செய்து கொடுக்கலாம். கீரையை வெறுக்கும் குழந்தைகளுக்கும் இந்த சாதம் மிகவும் பிடிக்கும்.

பாலக்கீரையில் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. நாம் அதை தினமும் உட்கொள்வது அவசியம். இத்தனை சத்துக்கள் நிறைந்த கீரையை பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடமாட்டார்கள். குறிப்பாக குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.

எனவே இந்த ஃப்ரைட் ரைஸ் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு குறைந்தளவு மசாலக்கள் சேர்த்தாலே போதும். சுவையும் அள்ளும். இதை நீங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவு எதற்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

இதற்கு தொட்டுக்கொள்ள எந்த ரைத்தாவே போதுமானது அல்லது ஏதேனும் கிரேவி, உருளைக்கிழங்கு சிப்ஸ் என உங்களுக்கு பிடித்ததை வைத்துக்கொள்ளலாம். இதை செய்து ருசித்து பாருங்கள்.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.