பாலக் சன்னா கிரேவி : சப்பாத்தி, பூரி, ரொட்டிக்கு ஏற்ற பாலக் சன்னா கிரேவி! செய்வது எளிது; சுவையும் அபாரமாக இருக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பாலக் சன்னா கிரேவி : சப்பாத்தி, பூரி, ரொட்டிக்கு ஏற்ற பாலக் சன்னா கிரேவி! செய்வது எளிது; சுவையும் அபாரமாக இருக்கும்!

பாலக் சன்னா கிரேவி : சப்பாத்தி, பூரி, ரொட்டிக்கு ஏற்ற பாலக் சன்னா கிரேவி! செய்வது எளிது; சுவையும் அபாரமாக இருக்கும்!

Priyadarshini R HT Tamil
Updated Mar 26, 2025 01:15 PM IST

பாலக் சன்னா கிரேவி : பாலக்கீரையை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இதுபோல் சன்னாவுடன் சேர்த்து செய்துகொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பாலக்கீரையை நன்றாக ஊறவைத்து அலசி எடுக்கவேண்டும்.

பாலக் சன்னா கிரேவி : சப்பாத்தி, பூரி, ரொட்டிக்கு ஏற்ற பாலக் சன்னா கிரேவி! செய்வது எளிது;  சுவையும் அபாரமாக இருக்கும்!
பாலக் சன்னா கிரேவி : சப்பாத்தி, பூரி, ரொட்டிக்கு ஏற்ற பாலக் சன்னா கிரேவி! செய்வது எளிது;  சுவையும் அபாரமாக இருக்கும்! (veggie recipe house )

தேவையான பொருட்கள்

• பாலக்கீரை – ஒரு கப் (சுத்தம் செய்து ஆய்ந்தது)

• கொண்டைக்கடலை அல்லது சன்னா – ஒரு கப்

• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

• தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்

• கரம் மசாலா – கால் ஸ்பூன்

• இஞ்சி – அரை ஸ்பூன் (துருவியது)

• பூண்டு – அரை ஸ்பூன் (துருவியது)

• உப்பு – தேவையான அளவு

• எலுமிச்சை பழச்சாறு – ஒரு ஸ்பூன்

• எண்ணெய் – 2 ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

• நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

• சீரகம் – ஒரு ஸ்பூன்

• வர மிளகாய் – 2 (கிள்ளி சேர்க்கவேண்டும்)

செய்முறை

1. கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

2. பாலக்கீரையை சுத்தம் செய்து நன்றாக அலசி வைத்துக்கொள்ளவேண்டும்.

3. ஒரு கடாயில் எண்ணெயை சேர்த்து அது சூடானவுடன் அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுக்கவேண்டும். அது பச்சை வாசம் போனவுடன், தக்காளியை சேர்த்து நன்றாக மசிய வதக்கவேண்டும்.

4. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

5. வேகவைத்த சன்னா மற்றும் சுத்தம் செய்த பாலக்கீரை என அனைத்தையும் நன்றாக கொதிக்கவிடவேண்டும். போதிய அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

6. ஒரு கடாயில் நெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வர மிளகாயை கிள்ளி சேர்த்துக்கொள்ளவேண்டும். அனைத்தும் பொரிந்து வந்தவுடன், இந்த தாளிப்பை கொதித்துக்கொண்டிருக்கும் பாலக்கீரை கலவையில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

7. கடைசியாக எலுமிச்சை சாறு மற்றும் கரம் மசாலா சேர்த்து கலக்கவேண்டும். பாலக் சன்னா மசாலா தயார். இதை சூடான சப்பாத்தி, ரொட்டி, நாண், பரோட்டா, பூரி என அனைத்து ரொட்டி வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.