Pain Relive Kashayam : ஆயுசுக்கும் இந்த 10 வியாதிகள் வராது! 5 நாட்கள் மட்டும் இந்த ஒரு கஷாயம் மட்டும் போதும்!
Pain Relive Kashayam : ஆயுசுக்கும் இந்த 10 வியாதிகள் வராது. வலிகளைப்போக்கும் இந்த கஷாயத்தை 5 நாட்கள் மட்டும் எடுத்து பலன்பெறுங்கள்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
30 அல்லது 40ஐ கடந்தாலே சில உபாதைகள் உங்களுக்கு தொடர் கதையாகிவிடுகிறது. அதில் முக்கியமானது உடல் பாகங்களில் ஆங்காங்கே ஏற்படும் வலிகள். அதற்காக தினமும் நீங்கள் மருந்துகளை உட்கொண்டோ அல்லது வெளிப்புறத்தில் தடவவோ வேண்டும்.
அப்படித்தான நாம் ஒவ்வொரு நாளையும் கழிக்க நேரிடும். எனவே நீங்கள் அதை தடுக்க சிறுசிறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கு சில வீட்டு மருத்துவங்கள் உங்களுக்கு உதவும்.
அவை என்னவென்று தெரிந்துகொண்டு பின்பற்றினாலே உங்களுக்கு பலன் தரும். அதற்கான பொருட்களும் பெரும்பாலும் நமது வீட்டின் சமையலறையிலேயே நமக்கு கிடைத்துவிடும். அவற்றை வைத்து நீங்கள் உங்கள் உடலுக்கு தேவையானவற்றை செய்துகொள்ளவேண்டும். அதற்கு உங்களுக்கு இந்த குறிப்பு கட்டாயம் உதவும்.
இடுப்பு வலி, மூட்டு வலி, வாயுத்தொல்லை, சர்க்கரை நோய், தைராய்ட், உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல் வீக்கம், வயிற்று கோளாறு, கைகால் வலி போன்ற வியாதிகள் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் வராது. அதற்கு இந்த ஒரு கஷாயம் மட்டும் போதும்.
தேவையான பொருட்கள்
சீரகம் – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி விதைகள் – ஒரு ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
பட்டை, கிராம்பு – ஒரு ஸ்பூன்
செய்முறை
அனைத்தை பொருட்களையும் முதல் நாள் இரவே ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்கவேண்டும். அதை இரவு முழுவதும் மூடி வைத்துவிடவேண்டும்.
காலையில் எழுந்து வடிகட்டி, வெறும் வயிற்றில் 5 நாட்கள் குடித்து வரவேண்டும்.
இதை நீங்கள் அவ்வப்போது உங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தால், மேலே கூறிய 10 நோய்களும் ஆயுளுக்கும் உங்களுக்கு வரவே வராது.
எனவே இந்த எளிய வீட்டு மருத்துவ முறையை பின்பற்றி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்