Pain Reliver Oil : ஒரே ஒரு எண்ணெய் போதும்! உடலின் மொத்த வலியையும் அடித்து விரட்டும்!
Pain Reliver Oil : கை-கால் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என அனைத்து வலிகளையும் அடித்து விரட்ட இந்த ஒரு எண்ணெய் மட்டும்போதும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதை எளிதாக தயாரித்துவிடலாம்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
கை-கால் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என அனைத்து வலிகளையும் அடித்து விரட்ட இந்த ஒரு எண்ணெய் மட்டும்போதும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதை எளிதாக தயாரித்துவிடலாம்.
இந்த எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்
(இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகள் அல்லது ஆர்கானிக் பொருட்கள் மட்டும் விற்கும் கடைகளில் கிடைக்கும்)
திப்பிலி – 20 கிராம்
தசைப்பிடிப்பு மற்றும் நீர்ப்பிடிப்புக்களை போக்கும் தன்மைகொண்டது. நரம்பு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். வாயுப்பிடிப்புகளும் குணமாகும்.
சித்தரத்தை – 20 கிராம்
தசை பிடிப்பு, நீர்கோர்த்து பிடித்துள்ளதை குணப்படுத்தும்.
ஓமம் – 2 ஸ்பூன்
வலிகளை நீக்கக்கூடியது.
சுக்கு – 15 கிராம்
மூட்டுவலி குணமாகும்.
கருப்பு எள் – 2 ஸ்பூன்
எலும்புகளுக்கு வலுவைத்தரும். எலும்பு தேய்மானத்தை குறைக்கும். மூட்டுவலியை குணப்படுத்தும்.
பச்சை கற்பூரம் – 30 கிராம்
வலிகளை தீர்க்கக்கூடிய தன்மை
நல்லெண்ணெய் – 150 மில்லிலிட்டர்
பனங்கற்கண்டு – ஒரு ஸ்பூன்
செய்முறை
எள் மற்றும் பச்சை கற்பூரம், பனங்கற்கண்டு தவிர மற்ற அனைத்தையும் உரலில் உடைத்துவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்.
ஒரு இரும்பு கடாயில் எண்ணெயை சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவேண்டும்.
பின்னர் பொடித்துவைத்துள்ள அனைத்தையும் சேர்க்கவேண்டும். பின்னர் முழு எள்ளையும் சேர்க்கவேண்டும்.
அந்த எண்ணெயை நன்றாக காய்ச்சவேண்டும். அந்த எண்ணெயின் நிறம்மாறி வரும். அப்போது பனங்கற்கண்டை சேர்த்து 5 நிமிடங்கள் காய்ச்சி அடுப்பை அணைத்துவிட்டு பச்சை கற்பூரத்தை சேர்த்து மூடி வைக்கவேண்டும்.
எண்ணெய் நன்றாக ஆறியவுடன், வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதை இரவு உறங்கச் செல்லும் முன் வலி உள்ள இடத்தில் தடவி விட்டுவிடவேண்டும் அல்லது உங்களுக்கு வலி ஏற்படும்போது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதை தடவலாம். வலிக்கு நிவாரணம் தரும். 5 முதல் 7 நாட்களில் உங்களின் அனைத்து வலிகளும் குணமாகும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்