தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pain Reliver Foods : படுத்தும் முதுகுவலி; பாடாய்ப்படுத்தும் உடல் வலி; விரட்டியடிக்கும் உணவுகள் இவைதான்!

Pain Reliver Foods : படுத்தும் முதுகுவலி; பாடாய்ப்படுத்தும் உடல் வலி; விரட்டியடிக்கும் உணவுகள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Jun 30, 2024 08:00 AM IST

Pain Reliver Foods : படுத்தும் முதுகுவலி; பாடாய்ப்படுத்தும் உடல் வலி; விரட்டியடிக்கும் உணவுகள் எவையென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Pain Reliver Foods : படுத்தும் முதுகுவலி; பாடாய்ப்படுத்தும் உடல் வலி; விரட்டியடிக்கும் உணவுகள் இவைதான்!
Pain Reliver Foods : படுத்தும் முதுகுவலி; பாடாய்ப்படுத்தும் உடல் வலி; விரட்டியடிக்கும் உணவுகள் இவைதான்!

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற உட்பொருள், வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது. இது வீக்கத்தைக் குறைக்கும் திறன் கொண்டது. மேலும் நாள்பட்ட வலிகளைப் போக்கும் ஆற்றலும் கொண்டது. நீங்கள் பயன்படுத்தும் மசாலாக்கள், சூப்கள், ஸ்மூத்திகள் மற்றும் துணை உணவுகளில் மஞ்சள் சேர்ப்பதை உறுதிப்படுத்துங்கள்.

இஞ்சி

இஞ்சியில் ஜிஞ்சரால் என்ற உட்பொருள் உள்ளது. அதன் வீக்கத்துக்கு எதிரான மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நற்குணங்கள் நிறைந்தது. இஞ்சி வீக்கத்தைக் குறைக்கிறது. வலியைப்போக்குகிறது. தசைவலி மற்றும் புண்களைப் போக்குகிறது. தேநீர், பழச்சாறுகள், ஸ்மூத்திகள், வறுவல்கள் மற்றும் மசாலாக்களில் இஞ்சியை சேர்ப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

கொழுப்பு நிறைந்த மீன்கள்

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்த மீன்கள், வீக்கத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. இது மூட்டுவலி மற்றும் முதுகு வலிகளைப் போக்கக்கூடியது. இந்த மீனை கிரில், பேக் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இதனுடன் சரிவிகித உணவும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

பெரிகள்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. குறிப்பாக ஆந்தோசியானின்கள் இதில் அதிகம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கிறது. வலியைப்போக்க உதவுகிறது. ப்ளுபெரிகள், ஸ்ட்ராபெரிகள் மற்றும் ராஷ்பெரிகளை ஸ்னாக்சாக சாப்பிடலாம் அல்லது யோகர்ட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.

கீரைகள்

கீரைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இவை வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. கீரை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. தசைவலியைப்போக்குகிறது. கீரையை சாலட்கள், ஸ்மூத்திகள், ஆம்லேட்களில் கலந்து சாப்பிடவேண்டும்.

நட்ஸ்

நட்ஸ்களில் ஆரோக்கிய கொழுப்புகள், புரதங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. பாதாம், வால்நட்கள் வீக்கத்தை குறைத்து, ஒட்டுமொத்த மூட்டு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஒரு கைப்பிடியளவு நட்ஸ் எடுத்துக்கொண்டு அதை ஓட்ஸ் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம். நட்ஸ்களை வைத்து செய்த ஜாம்கள் மற்றும் ஸ்மூத்திகளை பருகலாம்.

செரிகள்

ஆன்ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. செரிகள் குறிப்பாக டார்ட் செரிகள் உங்கள் தசைகளில் ஏற்படும் புண்களை குறைக்கிறது. மூட்டுவலிகளைப் போக்குகிறது. செரிகளை அப்படியே சாப்பிடலாம். செரியை பழச்சாறாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆலிவ் எண்ணெய்

ஓலியோகேன்தால் உள்ளது. இது வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது ஆகும். ஆலிவ் எண்ணெயை வீக்கம் மற்றும் வலிகளைக் குறைக்கிறது. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயை சாலட்களில் சேர்த்து பயன்டுத்துங்கள். சமையல் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

பூண்டு

பூண்டில் உள்ள சல்ஃபர் என்ற உட்பொருள், வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. பூண்டு வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் மூட்டு மற்றும் தசைகளில் ஏற்படும் வலிகளைப்போக்குகிறது. பூண்டை சாஸ்கள், சூப்கள், வறுத்த காய்கறிகள் மற்றும் துணை உணவுகளாகப் பயன்படுத்தலாம். உடலுக்கு பல்வேறு நன்மைகளைத்தரக்கூடியது.

கிரீன் டீ

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. குறிப்பாக இதில் கேட்சின்கள் உள்ளது. கீரின் டீ வீக்கத்தைக் குறைத்து, வலியைப்போக்குகிறது. கீரின் டீ குடிப்பதை வழக்கமாக்கும்போது, அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. கீரின் டீயை சூடாகவும் அல்லது குளிர்ச்சியாகவும் சாப்பிடலாம்.

உங்கள் உடலில் ஏற்படும் வலிகளைப் போக்கக்கூடிய இந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்வுக்கு வித்திடுங்கள்.

டாபிக்ஸ்