தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Pachai Mochai Kootu Do You Know How To Make Green Bean Paste

Pachai Mochai Kootu: பச்சை மொச்சை கூட்டு குழம்பு எப்படி செய்யணும் தெரியுமா!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 12, 2024 06:00 AM IST

இது பச்சை மொச்சை கிடைக்கு சீசன். அதை வைத்து எப்படி கூட்டு செய்யலாம் பாருங்க.

பச்சை மொச்சை கூட்டு
பச்சை மொச்சை கூட்டு

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

மொச்சை பயிறு

வெங்காயம்

தக்காளி

தேங்காய்

சோம்பு

இஞ்சி

பூண்டு

கடுகு

உளுந்தம்பருப்பு

உப்பு

எண்ணெய்

பெருங்காயம்

கறிவேப்பிலை

மிளகாய் தூள்

மல்லித்தூள்

மஞ்சள்தூள்

செய்முறை

பச்சை மொச்சை பயிறை தோல் நீங்கி எடுத்து கொள்ள வேண்டும். தோல் நீக்கிய மொச்சையை குக்கரில் சேர்த்து 3 விசில் வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் கடுகு உளுந்தம்பருப்பை சேர்த்து பொரிய விட வேண்டும். 

கடுகு வெடித்த பிறகு அதில் நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தைசேர்த்து வதக்க வேண்டும் வெங்காயம் வதங்கி வரும் போது ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாடை போன பிறகு அதில் ஒரு தக்காளி பழத்தை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். 

அதில் அரை ஸ்பூன் பெருங்காயத்தை சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து கொள்ள வேண்டும். தக்காளி வதங்கிய பின்னர் அதில் 2 ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதில் ஏற்கனவே வேக வைத்து எடுத்த பச்சை பயிறை சேர்த்து கலந்து விட கொதிக்க விட வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு பத்தை தேங்காய் 5 சின்ன வெங்காயம் அரை ஸ்பூன் சீரகம், அரை சோம்பு சேர்த்து அரைத்து அதையும் ஏற்கனவே கொதிக்கும் பயறுடன் சேர்க்க வேண்டும். தேங்காய் வற்றி பச்சை வாடை போனவுடன் பயிறு கூட்டை இறக்கி விட வேண்டும். அவ்வளவு தான் ருசியான பச்சை மொச்சை கூட்டு ரெடி.

இந்த கூட்டு சூடான சாதத்துடன் சேர்த்து சப்பிட ருசி அருமையாக இருக்கும். இந்த கூட்டு பருப்பு ரசம் சாப்பாடுக்கும் மிகவும் ருசியாக இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்