தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paal Bun : 80ஸ் கிட்ஸ்களின் வாழ்வில் இனிமை சேர்த்த பால் பன்! செய்வது எப்படி?

Paal Bun : 80ஸ் கிட்ஸ்களின் வாழ்வில் இனிமை சேர்த்த பால் பன்! செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Nov 21, 2023 09:16 AM IST

Paal Bun : 80ஸ் கிட்ஸ்களின் வாழ்வில் இனிமை சேர்த்த பால் பன் செய்வது எப்படி?

Paal Bun : 80ஸ் கிட்ஸ்களின் வாழ்வில் இனிமை சேர்த்த பால் பன்! செய்வது எப்படி?
Paal Bun : 80ஸ் கிட்ஸ்களின் வாழ்வில் இனிமை சேர்த்த பால் பன்! செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

நெய் – 2 ஸ்பூன்

பொடித்த சர்க்கரை – 2 ஸ்பூன்

சோடா உப்பு – 2 சிட்டிகை

மைதா மாவு – 2 கப்

ட்ரெண்டிங் செய்திகள்

தயிர் – 4 ஸ்பூன்

சர்க்கரை – 2 கப்

பொறிக்கும் அளவு எண்ணெய்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் நெய், பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்துகொள்ளவேண்டும்.

தொடர்ந்து அதில் சோட உப்பு, மைதா மாவு, தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும்.

கொஞ்ச கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவேண்டும். மாவு மிக கெட்டியாகவோ அல்லது தண்ணீராகவோ இருக்கக்கூடாது.

இதை அப்படியே ஒரு ஈர துணி போட்டு மூடி வைக்க வேண்டும். மாவு சிறிது நேரம் தயாராகட்டும்.

தற்போது ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து, அது மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்துகொள்ளவேண்டும்.

கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து, நாம் தயார் செய்து வைத்துள்ள மாவை சிறு,சிறு உருண்டைகளாக சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும்.

மிதமான தீயில் பொரித்துக்கொள்ள வேண்டும். அதிக தீயிருந்தால் கருகிவிடும்.

பொரித்து வைத்துள்ள பன்னை, எண்ணெயில் வடித்து, சர்க்கரை பாகில் சேர்த்தால், பால் பன் தயார். எடுத்து சுவைத்துப்பார்க்க நாவில் வைத்தால் கரைந்து ஓடும். அந்தளவு மிருதுவாகவும், சுவை நிறைந்ததாகவும் இருக்கும்.

80களின் கிட்ஸ்களுக்கு பால் பன் என்பது வெறும் ஸ்னாக்ஸ் மட்டுமல்ல நினைவுகள். பால் பன்னை இப்போது பார்த்தாலும் பாய்ந்தோடிப்போய் வாங்குபவர்களாக இருப்பார்கள். பால் பன் அவர்களின் உணர்வுகளுடன் கலந்தது.

80ஸ் கிட்ஸ்களிடம் கேட்டால் பால் பன்னுக்கு மட்டுமின்றி, எலந்த வடை, தேன் மிட்டாய், கல்கோனா என ஒவ்வொன்றுக்கும் கதைகள் சொல்வார்கள். ஏனெனில் அந்தக்காலத்தின் இந்த ஸ்னாக்ஸ்களை வாங்கி சுவைப்பதற்காகவே பள்ளி சென்றதாக ஸ்லாகிப்பார்கள்.

இப்போது எத்தனையோ வித்யாசமான உணவுகள், பல நாட்டு உணவுகள் என பல்வேறு உணவுகளை சுவைத்தாலும் இதுபோன்ற எளிய உணவுகள் சுவையை மட்டுமல்ல, 80ஸ் கிட்ஸ்களின் நினைவுகளோடு சேர்ந்து நமக்கு பல உணர்வுகளையும் கடத்துவதாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.