Oxidative Stress : செல்களை சேதப்படுத்தும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம்; அடித்து விரட்டும் 10 ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Oxidative Stress : செல்களை சேதப்படுத்தும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம்; அடித்து விரட்டும் 10 ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்கள்!

Oxidative Stress : செல்களை சேதப்படுத்தும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம்; அடித்து விரட்டும் 10 ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 13, 2025 07:00 AM IST

செல்களை சேதப்படுத்தும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை அடித்து விரட்டும் 10 பழங்கள் எவை?

Oxidative Stress : செல்களை சேதப்படுத்தும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம்; அடித்து விரட்டும் 10 ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்கள்!
Oxidative Stress : செல்களை சேதப்படுத்தும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம்; அடித்து விரட்டும் 10 ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்கள்! (PC: Canva)

இயற்கையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சில பழங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ப்ளுபெரிகள், மாதுளை உள்ளிட்ட பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். இவை உங்கள் அன்றாட உணவின் அங்கமாக இருக்கவேண்டும். இது உங்கள் உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. இந்தப் பழங்களை நீங்கள் அப்படி சாப்பிட முடியும். இவற்றை பழச்சாறுகளாகவும், ஸ்மூத்திகளாவும் சாப்பிடலாம்.

பெரிகள்

ப்ளாக் பெரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. 100 கிராம் ப்ளாக் பெரியில் 100 முதல் 500 மில்லி கிராம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோராயமாக உள்ளது. இதில் உள்ள ஆந்தோசியனின் உட்பொருட்கள், உங்கள உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் ஆற்றல் கொண்டது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து உங்கள் உடலைக் காக்கிறது. வீக்க அழுத்தங்களையும் போக்குகிறது.

கிரான் பெரிகள்

இந்த ஆந்தோசியானின் அதிகம் உள்ள இந்த 100 கிராம் பழத்தில், 250 முதல் 300 மில்லி கிராம் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது ஆக்ஸிடேட்டிவ் சேதத்தைத் தடுக்கிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் அதிகளிவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள ஃப்ளாவனாய்ட்கள், உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கின்றன. 100 கிராம் பழத்தில் 180 முதல் 200 மில்லி கிராம் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உங்களின் ஆன்டி ஆக்ஸிடன்ட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை சீரிய முறையில் பாதுகாக்கிறது.

செரிகள்

செரிகளில் ஆந்தோசியானின்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. 100 கிராம் செரிப்பழத்தில் 250 முதல் 300 கிராம் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உங்கள் உடலுக்கு ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து தேவையான பாதுகாப்பைக் கொடுக்கிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

மாதுளை

மாதுளை பழத்தில் அதிகளவில் ஆந்தோசியனின்கள் மற்றும் புனிகாலாஜின்கள் உள்ளன. 100 கிராம் செரியில் 250 முதல் 300 கிராம் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உங்கள் உடலுக்கு ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து தேவையான பாதுகாப்பைக் கொடுக்கிறது. இது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

ப்ளாக் பெரிகள்

ப்ளாக் பெரிகளில் ஆந்தோசியானின்கள் மற்றும் எலாஜின் அமிலம் உள்ளது. 100 கிராம் ப்ளாக் பெரியில் 500 முதல் 800 மில்லி கிராம் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து உங்கள் உடலுக்கு போதிய பாதுகாப்பைக் கொடுக்கிறது.

ஸ்ட்ராபெரிகள்

ஸ்ட்ராபெரிகளில் வைட்டமின் சி மற்றும் ஃபினோலிக் உட்பொருட்கள் உள்ளன. இது உங்கள் உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இது உங்கள் உடலுக்கு சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பாதுகாப்பைக் கொடுக்கிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

ராஷ் பெரிகள்

100 கிராம் ராஷ் பெரிகளில் 400 முதல் 500 மில்லி கிராம் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதில் எலாஜிக் அமிலம் மற்றும் குயிர்செடின் ஆகியவை அதிகளவில் உள்ளன.

கோஜி பெரிகள்

கோஜி பெரிகளில் ஸியாக்ஸான்தின்கள் அதிகம் உள்ளது. மேலும் பல்வேறு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. இது ஆக்ஸிடேட்டில் அழுத்ததுக்கு எதிரான வலுவான பாதுகாப்பைக் கொடுக்கிறது. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்த உடல் நல ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு நன்மைகளைக் கொடுக்கிறது.

ப்ளூபெரிகள்

ப்ளூபெரிகளில் ஆந்தோசியானின்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலுக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கச்செய்யும் முக்கியமான மூலமாகும். இது உங்கள் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது உங்கள் உடலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.