தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Over Sleeping Is Sleeping Too Much A Problem?

Over Sleeping : அதிகமாக தூங்கினால் இதய நோய் உள்ளிட்ட இத்தனை பிரச்சனையா?

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 16, 2024 10:44 AM IST

அதிக தூக்கம் இதய நோய்க்கு வழிவகுக்கும். பகலில் தூங்குபவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிகமாக தூங்கினால் இத்தனை பிரச்சனையா?
அதிகமாக தூங்கினால் இத்தனை பிரச்சனையா? (Pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

தூக்கமின்மை நமது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆனால் தூக்கம் இன்மை எவ்வளவு பிரச்சனையோ அதே அளவு பிரச்சனை அதிகம் தூங்குவதாலும் ஏற்படும் என்று சொன்னல் உங்களால் நம்ப முடிகிறது. ஆனால் அது தான் உண்மை. அதிக தூக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக தூக்கம் பல உடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அவை என்னவென்று கண்டுபிடியுங்கள்.

நீரிழிவு நோய் அபாயம்

அதிக தூக்கம் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அமெரிக்க நீரிழிவு சங்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, குறைவாக தூங்குவது அல்லது அதிக நேரம் தூங்குவது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த விரும்பினால், முதலில் நீங்கள் வழக்கமான தூக்க சுழற்சியைப் பின்பற்ற வேண்டும்.

உடல் பருமன்

குறைவான தூக்கம் மற்றும் அதிக தூக்கம் இரண்டும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. வழக்கமான நேரத்தை விட அதிகமாக தூங்குபவர்கள் இருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு இரவும் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்கள், எடை அதிகரிக்கும் அபாயம் அதிகம். அதுமட்டுமின்றி அதிக தூக்கத்தால் உடலில் வேறு நோய்கள் வேரூன்றுகின்றன. ஆபத்தைத் தவிர்க்க தேவையானதை விட அதிகமாக தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

இதயநோய்

அதிக தூக்கம் இதய நோய்க்கு வழிவகுக்கும். பகலில் தூங்குபவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தம்

அதிக தூக்கம் மன அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். அதிக தூக்கம் மன அழுத்த பிரச்சனைகளை அதிகப்படுத்தும். மனச்சோர்வு எந்த வயதிலும் ஏற்படலாம். பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் இதற்கு ஆளாகிறார்கள். இதனால் தூக்கமின்மை, அதிக தூக்கம் அல்லது அமைதியற்ற தூக்கம் பற்றி கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் எழுந்தால் உடலோ மனமோ புத்துணர்ச்சி பெறும். தாமதமாகத் தூங்கினால், காலையில் எழுந்தவுடன், மந்தமாக, சோர்வாக இருக்கும், உடல் அமைதியாக இருக்காது. இது உங்கள் அன்றாட நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. அதேபோல் இரவில் தூங்குவதறக்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாக டிஜிட்ட்ல் திரையில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. தூங்கும் வரை செல்போன் பார்ப்பதும் தூக்கம் வருவதில் பிரச்சனையை கொடுக்கும் என பல பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதனால் கண்டிப்பாக உங்கள் தூக்கத்தில் கவனம் செலுத்துங்கள் அதிக பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்று மருந்து எடுத்து கொள்வது நல்லது.

 

WhatsApp channel

டாபிக்ஸ்