Orange Tea : மழையும், வெயிலும் மாறி மாறி தொல்லை தருகிறதா? இதோ இதமும், ஆரோக்கியமும் தரும் தேநீர்!
Orange Tea : மழையும், வெயிலும் மாறி மாறி தொல்லை தருகிறது என்றால், இதோ இதமும், ஆரோக்கியமும் தரும் இந்த தேநீரை பருகிப்பாருங்கள் உங்களுக்கு நன்மை கிட்டும்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
மழையும், வெயிலும் மாறிமாறி தொல்லை தருகிறதா? இதோ இரண்டையும் சமமாக்கும் ஆரஞ்சு பழத்தேநீர் பருகி பலன்பெறுங்கள். ஆரஞ்சு பழமும், தோல்களும் இதற்குத் தேவை. இந்த தேநீர் கோடையில் பெய்யும் மழையால் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
தேவையான பொருட்கள்
ஆரஞ்சுப்பழம் – அரை (சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)
ஆரஞ்சுப்பழத்தோல் – சிறிது துருவி எடுத்துக்கொள்ளவேண்டும்
டீத்தூள் – அரை ஸ்பூன்
(கிரீன் டீத்தூள் இருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம். அதை பயன்படுத்தும்போது கடைசியாக சேர்க்க வேண்டும். முதலில் சேர்த்து கொதிக்கவிடக்கூடாது)
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
ஏலக்காய் – 2
தேன் – கால் கப்
புதினா இலைகள் – 4
செய்முறை
ஆரஞ்சு பழத்தின் தோலை துருவி ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இஞ்சி மற்றும் ஏலக்காயை உரலில் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆரஞ்சு பழங்களை சிறுதுண்டுகளாகக் நறுக்கி எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 200 மில்லி லிட்டர் தண்ணீரை சேர்த்து, நறுக்கிய ஆரஞ்சு பழங்கள், இடித்த இஞ்சி, ஏலக்காய், துருவிய ஆரஞ்சு பழத்தோல்கள் மற்றும் டீத்தூள் என அனைத்தும் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் வடிகட்டி அதில் கொஞ்சம் ஆரஞ்சு பழத்தை பிழிந்து, தேவையான அளவு தேன் சேர்த்து, இரண்டும் ஆரஞ்சு பழத்துண்டுகளை தோலுடன் சேர்த்த, புதினாவை மேலே போட்டு பரிமாற வேண்டும்.
சூப்பர் சுவையில் ஆரஞ்சுபழத்தேநீர் தயார்.
இதை மிதமான சூட்டில் பருகினால், இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு என பல்வேறு சுவைகளில் அசத்தும்.
இது மழைக்கு இதமளிக்கும் ஒரு தேநீர். உங்களுக்கு புத்துணர்ச்சியைத்தரும்.
ஆரஞ்சு பழத் தேநீரின் நன்மைகள்
ஆரஞ்சு பழத்தின் டீயை நீங்கள் பருகினால் அது உங்கள் இதய ஆரோக்கியத்தை இயற்கை முறையில் அதிகரிக்கச் செய்கிறது. இது உங்கள் உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. உங்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.
இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது. இது உங்கள் சருமத்தில் கொலஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்கள் உடல் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுகிறது.
கிரீன் டியுடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து பருகும்போது உங்களுக்கு உற்சாகம் அளிக்கும். செரிமானத்தை அதிகரிக்கும். வீக்கத்தை குறைக்கும். இதன் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
இதைத்தவிர, இதன் சுவையும், மணமும், உங்களின் மனநிலையை மாற்றும் தன்மை கொண்டது. உங்களின் பயம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது. டேலும் உங்களின் தேநீர் நேரத்தை இனிமையாக்குகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்