Oral Care: வாய் துர்நாற்றம் நீங்கும்! மஞ்சள் கறை காணாமல் போகும்! இதை மட்டும் ஒரு ஸ்பூன் எடுங்க போதும்!
Oral Care: தினமும் ஒரு ஸ்பூன், வராத்தில் 4 நாள் எடுத்தால் போதும்! வாய் துர்நாற்றம் நீங்கும்! மஞ்சள் கறை காணாமல் போகும்!
தேவையான பொருட்கள்
சியா விதைகள் – ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
தேன் – ஒரு ஸ்பூன்
வெதுவெதுப்பான தண்ணீர் – ஒரு டம்ளர்
செய்முறை
சியா விதைகளை ஒரு மணி நேரம் அல்லது ஒரு இரவு ஊறவைக்க வேண்டும். பின்னர், இளஞ்சூடான தண்ணீரில் அதை கலந்து, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். அப்படி பருகும்போது அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் தேனை தவிர்ப்பது நல்லது. இனிப்பில்லாமல் பருகவும் நன்றாக இருக்கும்.
தினமும் ஒரு ஸ்பூன் சியா விதைகளை ஊறவைத்து வாரத்தில் 4 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை பருகினால் மலச்சிக்கல், வயிறு உப்புசம் நீங்கும். தொப்பை குறையத் துவங்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும். செரிமானத்திறனை அதிகரிக்கும்.
வாய் துர்நாற்றத்தை சரிசெய்யும். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கி, பற்கள் வெள்ளை வெளேரென பளபளக்க உதவும். இது உடலில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்களை அதிகரிக்க உதவும்.
உடல் சோர்வு, உடல் அசதியைப்போக்கும். இடுப்பு வலி, கை-கால் வலி மற்றும் கழுத்து வலியை போக்கும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். இதயம் தொடர்பான நோய்களை சரிசெய்யும்.
28 கிராம் சியா விதைகளில் கால்சியம் 18 சதவீதம், மாங்கனீஸ் 30 சதவீதம், பாஸ்பரஸ் 27 சதவீதம், புரதச்சத்து 4 கிராம், கொழுப்புச்சத்து 9 கிராம், நியாசின், பொட்டாசின், தையாமின், வைட்டமின் பி2 ஆகிய எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதை பல்வேறு விதங்களில் சாப்பிடலாம். பொடித்து சாலட்டிலும் தூவி சாப்பிடலாம்.
இதில் உள்ள அதிகப்படியான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைக்கொடுக்கும். ஊறிய சியா விதைகளை பல்லில் கடித்து சாப்பிட பற்களுக்கு வலு கிடைக்கும்.
இதில் அதிகம் உள்ள துத்தநாகச்சத்துக்கள் பற்களில் அதிகம் படிந்துள்ள மஞ்சள் கறையை போக்கும். இதில் உள்ள பாஸ்பரஸ் பல்லுக்கு நல்ல உறுதியைக்கொடுக்கும். வாய் துர்நாற்றத்தை சரிசெய்யும்.
தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், காலையில் வெறும் வயிற்றில் இதை பருகினால் நல்லது. உடல் எடையை முழுவதும் குறைக்காது. ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்றும். தொப்பையை கரைக்கும்.
மலச்சிக்கலை சரிசெய்யும். இதில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. தொப்பையை குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள் இதை ஒரு வாரம் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடலாம். அல்சர் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள், இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, காலை உணவு உண்டபின் அரை மணி நேரம் கழித்து இதை எடுத்துக்கொள்வது நல்லது.
மதிய உணவுக்குப்பின்னரும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இரவு உணவுக்குப்பின் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இதை உண்டபின் வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கும். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இதை கட்டாயம் சேர்த்துக்கொள்வது, உடல் எடை குறைப்பதிலும், உடல் ஆற்றலை அதிகரிப்பதிலும் உதவும்.
இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மாரடைப்பு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து அந்த பிரச்னையில் இருந்து விடுபட அதிகளவில் சியா விதைகளை எடுத்துக்கொள்ளலாம்.
சியா விதைகளில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளது. முதுகு வலி, இடுப்பு வலி, கை-கால் வலி போன்றவற்றை குறைக்கும். செரிமான திறனையும் அதிகரிக்கும்.
இதை வெறும் வாயில் மென்று சாப்பிடும்போது அது பற்களுக்கு வலு சேர்க்கிறது. வாய்துர்நாற்றத்தை சரிசெய்யும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்