Chia Side Effects : அச்சச்சோ அதிக சியா விதைகளை சாப்பிட்டுவீட்டீர்களா? அதில் உள்ள 7 ஆபத்துக்களைப் பாருங்கள்!
சியா விதைகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?

சியா விதைகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் ஒன்றுதான். என்றாலும் அதை நீங்கள் அதிகம் உட்கொண்டால் அது உங்கள் உடலுக்கு பல்வேறு உபாதைகளையும் கொடுக்கிறது. எனவே நீங்கள் சியா விதைகளை உட்கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவை ஏற்படுத்தும் பின்விளைவுகள் என்னவென்று பாருங்கள்.
வயிறு உப்புசம்
உங்கள் வயிறு வழக்கத்துக்கு மாறாக உப்பியும், வாயுக்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறதா? அதுவும் சியா விதைகளை உட்கொண்டபின் அப்படியாகிறதா? இது உங்கள் செரிமான மண்டலத்தில் நீங்கள் சியா விதைகளை உட்கொண்டதால் ஏற்பட்ட கோளாறுகளை சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம். சியா விதைகளில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. உங்கள் செரிமான மண்டலம் அதை சரியாக செய்ய முடியாத நிலையால் இது ஏற்படலாம்.
வயிற்றில் வலி
வயிற்றில் வலி அல்லது செரிமான மண்டல வலிகளும் சியா விதைகளை நீங்கள் அதிகம் எடுத்துக்கொண்டதால் இருக்கலாம். வயிற்றில் எரிச்சல் மற்றும் உங்கள் செரிமான மண்டலத்தில உள்ள அசவுகர்யங்கள் வயிற்று வலியை ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் எடுத்துக்கொள்ளும் சியா விதைகளின் அளவு சரியானதாக இருக்கவேண்டும்.
வயிற்றுப்போக்கு
அதிக சியா விதைகளை நீங்கள் சாப்பிட்டுவிட்டால், அது உங்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றில் சில சிக்கல்களை ஏற்படுத்தும். ஏனெனில் அதிகல் அதிகம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதை கையாள உங்கள் செரிமான மண்டலம் சிரமப்படலாம்.
மலச்சிக்கல்
ஒருபுறம் வயிற்றுப்போக்கு, மறுபுறம் மலச்சிக்கல் என மாற்றி மாற்றி ஏற்படலாம். நீங்கள் சியா விதைகளை உட்கொள்ளும்போது, போதிய அளவு தண்ணீர் பருகாவிட்டால், அது உங்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். அந்த விதைகள் அதிக தண்ணீரை உறிஞ்சும். மேலும் குடலில் சென்று பெருகும். அப்போது வயிறு உங்களுக்கு உப்பி, செரிமான கோளாறுகள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
சோர்வு
சியா விதைகளை சாப்பிட்ட பின்னர் உங்களுக்கு சோர்வு ஏற்பட்டால், அது உங்கள் உடலில் உள்ள செரிமான மண்டலம் அதை செரிக்க சிரமப்படுகிறது என்பதன் அறிகுறியாகும். நீங்கள் அதிகமாக அதை சாப்பிட்டுவிட்டீர்கள் என்றால், அது உங்கள் செரிமானத்துக்கு சவால்தான்.
கொஞ்சமாக சாப்பிடுங்கள்
செரிமான மண்டலத்தின் அசவுகர்யங்களைப் தவிர்க்க வேண்டுமெனில், நீங்கள் கொஞ்சம், கொஞ்சமாக சியா விதைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் என்பதுதான் குறிப்பிட்ப்பட்டுள்ள அளவு. இதை சாப்பிட துவங்கி உங்கள் ஏற்க துவங்கும்போது, கொஞ்சம் கொஞ்மாக அதிகரித்துக்கொள்ளவேண்டும். இதில் உள்ள உயர் நார்ச்சத்துக்களை உங்கள் உடல் ஏற்கத் துவங்கிவிடும்.
சாப்பிடும் முன் ஊறவைக்கவேண்டும்
சியா விதைகளை தண்ணீர் அல்லது வேறு ஏதேனும் திரவத்தில் ஊறவைத்துதான் சாப்பிடவேண்டும். அது சில மணி நேரங்கள் ஊறியபின், நன்றாக பெருகிவிடும். பின்னர் நீங்கள் சாப்பிடும்போது, அது உங்களின் செரிமானத்துக்கு எளிதாகும்.
சரியான அளவு நீர்ச்சத்துக்களை உறுதிப்படுத்துங்கள்
நீங்கள் சியா விதைகளை சாப்பிடும்போது, அதிக தண்ணீர் பருகவேண்டியது மிகவும் முக்கியமாகும். சியா விதைகள் அதிக தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது, அதை உறிஞ்சி பெருகும் என்பதால், நீங்கள் போதிய அளவு தண்ணீர் பருகவில்லையென்றால், அது உங்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும் அல்லது வயிறு உப்பிக்கொள்ளும்.
மற்ற உணவுகளுடன் சமப்படுத்துங்கள்
சியா விதைகளை நீங்கள் உட்கொள்ளும்போது, சரிவிகித உணவு உட்கொள்ளவேண்டும் என்பது கட்டாயம் ஆகும். சியா விதைகளை நீங்கள் அதிகம் உட்கொண்டால், அதுவும் குறிப்பாக அதிக அளவு உட்கொள்ளும்போது, அது உங்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் எடுத்துக்கொள்வதை தடுக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் சாப்பிடும் மற்ற உணவுகளில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் இருக்கவேண்டும். புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகளும் இருக்கவேண்டும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்