நாளுக்கு நாள் விலையேறும் வெங்கயாம், பூண்டு! வீட்டுத்தோட்டம், சமையலறை ஜன்னலிலே கூட வளர்க்க முடியும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  நாளுக்கு நாள் விலையேறும் வெங்கயாம், பூண்டு! வீட்டுத்தோட்டம், சமையலறை ஜன்னலிலே கூட வளர்க்க முடியும்!

நாளுக்கு நாள் விலையேறும் வெங்கயாம், பூண்டு! வீட்டுத்தோட்டம், சமையலறை ஜன்னலிலே கூட வளர்க்க முடியும்!

Priyadarshini R HT Tamil
Nov 29, 2024 10:57 AM IST

வெங்காயம் மற்றும் பூண்டை வீட்டிலே பயிரிடலாமா?

நாளுக்கு நாள் விலையேறும் வெங்கயாம், பூண்டு! வீட்டுத்தோட்டம், சமையலறை ஜன்னலிலே கூட வளர்க்க முடியும்!
நாளுக்கு நாள் விலையேறும் வெங்கயாம், பூண்டு! வீட்டுத்தோட்டம், சமையலறை ஜன்னலிலே கூட வளர்க்க முடியும்!

இடத்தேர்வு

வெங்காயம் மற்றும் பூண்டுக்கு பெரிய தொட்டிகள் தேவை. ஆழமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. எனவே உங்கள் வீட்டில் எங்கு இடம் ஏற்றதாக உள்ளதோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். தோடத்தில் வைக்கிறீர்கள் என்றால் அதற்கு ஏற்ற இடம். தொட்டி என்றால் அதற்கு ஏற்ற இடம் மற்றும் தொட்டிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

விதைகள்

வெங்காயம் வளர்க்க உங்களுக்கு ஒற்றை மற்றும் மெல்லிய தோல்களை உடைய வெங்காயம் தேவை. பூண்டுக்கு புதிய மற்றும் கடினமான பூண்டுகளை சந்தையில் இருந்து வாங்கிக்கொள்ளுங்கள். அந்த பூண்டு பற்கள் பெரியதாக இருக்கவேண்டும்.

மண்

பூண்டு மற்றும் வெங்காயம் இரண்டுக்கும் தேவையான மண் என்பது மிகவும் எளிய கலவையாக இருக்கவேணடும். அதில் தோட்டத்து மண் மற்றும் மண்புழு உரம் கலந்திருக்கவேண்டும். 60 சதவீதம் மண் மற்றும் 40 சதவீதம் மண்புழு உரம் இருக்கவேண்டும். அதில் நீங்கள் தேங்காய் நார்கலக்கலாம்.

விதை தேர்வு

நீங்கள் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த பூண்டு பற்களில் இருந்து தேர்ந்தெடுக்கவேணடும். நல்ல பெரிய மற்றும் ஆரோக்கியமான பூண்டு பல்லை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். பூண்டு பற்களாகப் பிரிக்கப்பட்டு, அதை தொடுவதற்கே கடினமானதாக இருக்கவேண்டும். இந்த பூண்டு பற்களை இரண்டு இன்ச் ஆழத்தில் புதைக்கவேண்டும். ஒரு தொட்டியில் 5 முதல் 6 பூண்டு பற்கள் இருக்கவேண்டும். நீங்கள் தோட்டத்தில் என்றால் குறிப்பிட்ட இடைவெளியில் புதைத்துக்கொள்ளலாம்.

வெங்காயம்

வெங்காயச் செடிக்கு, அதே மண்ணில், வேறு தொட்டியில் வெங்காயத்தின் தலைப்பகுதியை உள்ளே வைத்து சற்று ஆழமாக விதைக்கவேண்டும். தோட்டத்தில் நேரடியாக என்றாலும் இதேபோலத்தான் செய்யவேண்டும். மண்ணைப்போட்டு மூடிவிடவேண்டும். மிக ஆழம் இருக்கக்கூடாது. பின்னர் கொஞ்சமாகத் தண்ணீர் விடவேண்டும்.

சூரிய ஒளி

தொட்டியோ அல்லது தோட்டமோ உங்கள் விதை இருக்கும் இடத்திற்கு தினமும் 6 மணி நேரம் நேரடி சூரிய ஒளி கட்டாயம் தேவை. ஆரம்ப காலங்களில் (பச்சை நிற முளை வெளியே வரும்போது) மண் முழுவதையும் நீங்கள் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளவேண்டும்.

தண்ணீர்

மண்ணை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். ஆரம்ப நாட்களில் அது கட்டாயம் கடைபிடிக்கப்படவேண்டும். முளை வரும் வரை சில வாரங்கள் இந்த ஈரப்பதம் தேவை. எனவே தினமும் காலையில் ஒருமுறை செடிக்கு தண்ணீர் ஊற்றுங்கள். மாலையில் தண்ணீரை தெளித்துவிடுங்கள். இடையிலும் தண்ணீரை தெளித்து ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளுங்கள்.

உரம் அவசியம்?

இலைவிட்ட வெங்காயமும், பூண்டும் நன்றாக முளைக்கவேண்டுமெனில், அதற்கு நல்ல ஆர்கானிக் உரங்களை வாங்கி தெளியுங்கள். இதனால் அவை நல்ல விளைச்சல் கொடுக்கும். ஆனால் அதிக உரமிட்டுவிடாதீர்கள். மாதத்தில் ஒருமுறை உரமிட்டாலே போதும்.

முதல் பச்சைஇலை

9 முதல் 12 வாரத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டில் இருந்தும் முளை வெளியே வரும். 25 நாட்களுக்குள் நீண்டு வளர்ந்துவிடும். இதை வெட்டி நீங்கள் சாலட்கள் மற்றும் தாளிப்புக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் உணவு சுவையானதாக இருக்கும்.

வெங்காய அறுவடை

3 முதல் 4 மாதத்தில் வெங்காயம் அறுவடைக்கு தயாராகிவிடும். இலை வாடியும், தொட்டால் துவண்டு, பசுமை மாறியும், வறண்டும் காணப்படும். இதுதான் அறுவடைக்கான அறிகுறி, வெங்காயத்தை தோண்டி எடுத்துவிடுங்கள்.

பூண்டு எப்போது தயாராகும்

பூண்டு செடி முளைத்து வர கட்டாயம் 6 மாதகாலமாகும். அப்போதுதான் அறுவடை செய்ய முடியும். இலைகள் பழுக்கத் துவங்கும். அதற்குமேல் வளராது. அப்போது நீங்கள் தோண்டி எடுத்துவிடவேண்டும். பறித்து அவற்றை ஃபிரஷ்ஷாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.