Onion Thokku : மூன்று மாதம் வரை கெடாது! வெங்காயத் தொக்கு! இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு பெஸ்ட் காம்போ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Onion Thokku : மூன்று மாதம் வரை கெடாது! வெங்காயத் தொக்கு! இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு பெஸ்ட் காம்போ!

Onion Thokku : மூன்று மாதம் வரை கெடாது! வெங்காயத் தொக்கு! இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு பெஸ்ட் காம்போ!

Priyadarshini R HT Tamil
May 14, 2024 01:57 PM IST

Onion Thokku : மூன்று மாதம் வரை கெடாதது வெங்காயத்தொக்கு. இதை இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.

Onion Thokku : மூன்று மாதம் வரை கெடாது! வெங்காயத் தொக்கு! இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு பெஸ்ட் காம்போ!
Onion Thokku : மூன்று மாதம் வரை கெடாது! வெங்காயத் தொக்கு! இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு பெஸ்ட் காம்போ!

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – ஒரு ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

வரமல்லி – 2 ஸ்பூன்

வரமிளகாய் – 10 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப அளவு மாற்றிக்கொள்ளலாம்)

கஷ்மீரி மிளகாய் – 5 (தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். காரம் அதிகம் இருக்காது. தொக்குக்கு நல்ல சிவப்பு நிறத்தை தரும்)

பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நீளவாக்கில் நறுக்கியது)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

சீரகம் – ஒரு ஸ்பூன்

பூண்டு – 10 பல்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

வரமிளகாய் – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பூண்டு – 10 பல்

செய்முறை

முதலில் கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடலைபருப்பு, வெந்தயம், உளுந்து சேர்த்து வறுக்கவேண்டும்.

அனைத்தும் வறுபட்டவுடன் வரமல்லி மற்றும் மிளகாய் சேர்த்து வறுக்கவேண்டும். பொன்னிறமானவுடன், 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த கஷ்மீரி மிளகாயை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இதை ஆறியவுடன் ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் சேர்த்து சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து முதலில் அரைத்துக்கொள்ளவேண்டும். 

நைசாக அரையாது என்பதால், கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஊறவைத்த புளியை மட்டும் சேர்த்து வதக்கவேண்டும். அந்த புளித்தண்ணீரை வைத்துக்கொள்ளவேண்டும்.

வெங்காயத்தை நன்றாக ஆறியவுடன், ஏற்கனவே அரைத்துவைத்துள்ளதுடன் சேர்த்து இதையும், புளியை ஊறவைத்த தண்ணீரை சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

வரமிளகாயை உடைத்து சேர்த்து, கடைசியாக அரைத்து வைத்ததை இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். எண்ணெய் பிரிந்துவரும் பதம் வரும்வரை சுருள வதக்கினால் வெங்காயத்தொக்கு தயார்.

இந்த வெங்காய தொக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவைஅள்ளும்.

இதை வெளியூர் செல்லும்போது செய்து எடுத்துக்கொண்டு செல்லலாம். வெளியில் வேலை அதிகம் இருக்கும் காலத்தில் செய்துவைத்துக்கொண்டு, சமையல் வேலையை குறைத்துக்கொள்ளலாம்.

குறிப்புகள்

வெங்காயத்தை வதக்கும்போது மூடிவைத்து வதக்கவேண்டும் அப்போதுதான் பச்சைவாசம் போகும். நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

அரைப்பதற்கு முன் அனைத்தும் நன்றாக ஆறியிருக்கவேண்டும். சைட்டிஷ் இல்லாத காலத்தில் உதவும். குழந்தைகளுக்கு ஹால்டலுக்கு செய்துகொடுத்துவிடலாம்.

இதை ஆறியவுடன் காற்றுப்புகாத பாட்டில் அல்லது எவர்சில்வர் டப்பாவில் அடைத்து வைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிடவேண்டும்.

தாளிக்கும்போது சிறிது பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளலாம். மூன்று மாதம் வரை கெடாது. ஒருமுறை செய்து வைத்துக்கொண்டால் சைட்டிஷ் இல்லாத காலங்களில் கவலைப்பட தேவையில்லை.

வெங்காயத்தின் நன்மைகள்

உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற வெங்காயம் உதவுகிறது.

பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் கண் வலி குணமாகும்.

ஒரு சின்ன வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட உடலின் நோய் எதிர்ப்புத்திறன் பெருகும்.

வெங்காயத்தில் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது.

பச்சையாக சாப்பிடும்போது ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.

சிறுநீரகப்பிரச்னை, எடை குறைப்பு, கொழுப்பு குறைவதற்கு உதவுகிறது.

வெங்காயத்தில் உள்ள இரும்புச்சத்து உடலில் எளிதாக கலக்கும்.

தினமும் சாப்பிட்டால் ரத்த சோகை குணமாகும்.

தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.