வெங்காய தொக்கு : சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது; நீண்ட நாட்கள் வரும்; நீங்கள் பிசியாக இருக்கும்போது சாப்பிட உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெங்காய தொக்கு : சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது; நீண்ட நாட்கள் வரும்; நீங்கள் பிசியாக இருக்கும்போது சாப்பிட உதவும்!

வெங்காய தொக்கு : சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது; நீண்ட நாட்கள் வரும்; நீங்கள் பிசியாக இருக்கும்போது சாப்பிட உதவும்!

Priyadarshini R HT Tamil
Published Jun 03, 2025 11:23 AM IST

வெங்காயத் தொக்கு : இந்த வெங்காயத் தொக்கை நீங்கள் செய்து வைத்துக்கொண்டீர்கள் என்றால் இதை இட்லி, தோசை, சாதம், பழைய சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

வெங்காய தொக்கு : சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது; நீண்ட நாட்கள் வரும்; நீங்கள் பிசியாக இருக்கும்போது சாப்பிட உதவும்!
வெங்காய தொக்கு : சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது; நீண்ட நாட்கள் வரும்; நீங்கள் பிசியாக இருக்கும்போது சாப்பிட உதவும்!

தேவையான பொருட்கள்

வறுத்து அரைக்க

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• கடுகு – அரை ஸ்பூன்

• வெந்தயம் – அரை ஸ்பூன்

• வரமல்லி – அரை ஸ்பூன்

• சீரகம் – அரை ஸ்பூன்

• கஷ்மீரி மிளகாய் – 15

(ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில், கடுகு, வெந்தயம், வரமல்லி, சீரகம் மற்றும் கஷ்மீரி மிளகாய் சேர்த்து நன்றாக பொரியவிடவேண்டும். பின்னர் அதை ஆறவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்)

வதக்கி அரைக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• பெரிய வெங்காயம் – 4 (நீளவாக்கில் நறுக்கியது)

• உப்பு – தேவையான அளவு

• புளி – பெரிய நெல்லிக்காய் அளவு

(ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் வெங்காயம், உப்பு, புளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். இதை ஆறவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்)

தாளிக்க தேவையான பொருட்கள்

• நல்லெண்ணெய் – ஒரு கப்

• கடுகு – ஒரு ஸ்பூன்

• பூண்டு – 20 பல்

• வர மிளகாய் – 2

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• பெருங்காயப் பொடி – கால் ஸ்பூன்

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு போட்டு வெடிக்கவிடவேண்டும். அடுத்து பூண்டு பற்கள், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து பெருங்காயப் பொடியை சேர்க்கவேண்டும்.

2. இதில் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து நன்றாக கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை நீண்ட நேரம் கிளறிவிட்டு இறக்கினால் சூப்பர் சுவையான வெங்காயத் தொக்கு தயார்.

இதை நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.