தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Onion Chutney : டிஃபனுக்கு ஒரே மாதிரியான சட்னி போர் அடித்து விட்டதா? இதோ இப்டி செய்ங்க வெங்காய சட்னி!

Onion Chutney : டிஃபனுக்கு ஒரே மாதிரியான சட்னி போர் அடித்து விட்டதா? இதோ இப்டி செய்ங்க வெங்காய சட்னி!

Priyadarshini R HT Tamil
Apr 21, 2024 04:00 PM IST

Onion Chutney : வித்யாசமான சுவையில் வெங்காயச் சட்னி செய்வது எப்படி?

Onion Chutney : டிஃபனுக்கு ஒரே மாதிரியான சட்னி போர் அடித்து விட்டதா? இதோ இப்டி செய்ங்க வெங்காய சட்னி!
Onion Chutney : டிஃபனுக்கு ஒரே மாதிரியான சட்னி போர் அடித்து விட்டதா? இதோ இப்டி செய்ங்க வெங்காய சட்னி!

ட்ரெண்டிங் செய்திகள்

கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – ஒரு துண்டு (நறுக்கியது)

பூண்டு – 12 பற்கள்

ப்யாத்கே மிளகாய் – 12

புளி – சிறிது

கல் உப்பு – ஒன்றரை ஸ்பூன்

வெல்லம் – ஒரு ஸ்பூன்

தாளிப்பு செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 4

பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை –

கடாயை சூடாக்கி, அதில் எண்ணெய் சேர்த்து, கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்க்க வறுக்கவேண்டும்.

பருப்பு இரண்டும் பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும்.

இந்த கட்டத்தில், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவேண்டும்.

வெங்காயத்தில் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து மேலும் சில நொடிகள் வதக்கவேண்டும்.

அதில் ப்யாத்கே மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கி புளி துண்டுகளை சேர்க்கவேண்டும்.

பிறகு கல் உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

வெங்காயம் வதங்கியதும், அடுப்பை அணைத்து எல்லாவற்றையும் ஆறவைத்து, மிக்ஸிஜாரில் சேர்க்கவேண்டும்.

மிக்ஸி ஜாரில் வெல்லம் சேர்த்து ஒருமுறை அரைக்கவேண்டும்.

பின்னர் தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக விழுதாக அரைக்கவேண்டும்.

சட்னியை கிண்ணத்தில் மாற்றி தனியாக வைக்கவேண்டும்.

தாளிப்பு செய்வதற்கு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் எடுத்து சூடாக்கவேண்டும்.

உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் சீரகத்தை சேர்த்து பொரியவிடவேண்டும்.

கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், அதில் சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் பெருங்காய தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவேண்டும். கறிவேப்பிலை தாளித்து, வெங்காய சட்னிக்கு மாற்றி நன்றாக கலந்துவிடவேண்டும்.

சுவையான வெங்காய சட்னி உங்களுக்கு விருப்பமான டிபன் உடன் பரிமாற தயாராக உள்ளது.

இட்லி, தோசை, சப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சுவை அட்டகாசமாக இருக்கும். இதில் புளி, வெல்லம் சேர்ப்பதால் சுவை கொஞ்சம் வித்யசமாக இருக்கும்.

வெங்காயத்தின் நன்மைகள்

வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

வெங்காயம் ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது.

வெங்காயத்தில் உள்ள வீக்கத்திற்கு எதிரான குணங்கள் நாள்பட்ட நோய்கள் உடலில் ஏற்படாமல் தடுக்கிறது.

புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

மறதி நோயை குறைக்கிறது.

வெங்காயத்தில் உள்ள வைட்டமின் சி சத்து, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது.

பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்